சனாதன சமூக அமைப்பு

#மீள்பதிவேற்றம்

பிற்போக்கான பண்பாட்டு பழக்க வழக்கங்கள்,மூட நம்பிக்கையில்  அறிவியல் அற்ற தன்மையிலான மத நம்பிக்கையில், புராணங்கள், கற்பனை கதைகளை நம்பி, சனாதனத்தில்  திளைத்து போய் வாழ்கின்ற சமூக அமைப்பில் வாழ்வாதாரத்திற்காக  மனப்பாட கல்வி பயின்று நல்ல வேலைக்காக, போட்டி தேர்வு எழுதுவதற்காக மனப்பாடம் செய்து  தேர்ச்சி பெற்று அதிகாரியாக உருவாகியிருப்பவன், ஆய்வு பட்டங்கள் பெற்று இருப்பவன் ,அறிவியலை, மருத்துவத்தை, தொழிநுட்பத்தை, விஞ்ஞானத்தை மனப்பாடம் முறையில் படித்தவன் ஒன்றுக்கும் உதவாதவன் தான், இவனால் இந்த நாட்டை எந்த துறையிலும் மேம்படுத்த முடியாது வரி மட்டுமே வசூல் செய்து அரசை , அரசாங்கத்தை நடத்தலாம்.

இந்த அறிவு கெட்ட முண்டங்கள் தான் நெருப்பில் இருந்து பிறந்தேன் என்கிறது,  தலையில் இருந்து பிறந்தவன் என்று நம்புகிறது, மார்பின் வழியே வந்தவன் என்று பீத்தி கொள்கிறது, கால் பாதத்தில் இருந்தும் பிறந்ததாக சொல்கிறது.

மனிதனுக்கு மனிதன்  வேறுபாடு பார்க்கிற பண்பாட்டு பழக்க வழக்கங்கள் இருக்கும் போது இவன் எப்படி மக்களுக்காக, மேம்பட்ட ஓர் நாட்டை கட்டி எழுப்ப முடியும். விஞ்ஞானம், தொழில் நுட்பம் அறிவில் போன்ற கண்டுபிடிப்புகளில் எந்த முன்னேற்றத்தையும் இத்தகைய சனாதனவாதிகளால் எட்டவே முடியாது. எவனாவது கண்டுபிடித்து வைத்தால் பயன்படுத்தலாம், அதை உற்பத்தி செய்யலாம் அவ்வளவு தான். 

இந்தியாவில் அம்பேத்கரியலை ஏற்றவர்கள்  
காட்டு மிராண்டிகளை திருத்துவதற்காகவே ஒவ்வொரு மனிதனும் மனித நேயத்துடன் சக மனிதனிடம் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டுமென போராடி கொண்டிருக்கிறார்கள்,  

இந்த மண்ணில் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள் மனித நேயம் வளர்க்க  30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார் ஆனால் மனித நேயமே இல்லாமல் நெருப்பில் இருந்து பிறந்தேன்,மார்பில் இருந்து பிறந்தேன் என்று புராணத்தை நம்பி கொண்டு மனிதனை மனிதன் ஆதிக்கம் செய்கிறான் , மூட நம்பிக்கையை வளர்க்கிறான், மனித உறவை சிதைக்கிறான். அடிப்படையில் மனித நேயம் இல்லை  என்றால் , அறிவியல் விழிப்புணர்வு இல்லை என்றால் எதை படித்து என்ன செய்ய போகிறது இந்த சமூகம்.?

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்