மீள்_பதிவு

#மீள்_பதிவு  

ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட பிரச்சினை, தனிப்பட்ட கோபம், தனிப்பட்ட கருத்துக்களால், தனிப்பட்ட வெறுப்பால் ஓர் மாபெரும் தலைமையை, மாபெரும் இயக்கத்தை விமர்சனத்திற்கும், பழி சொல்லிர்க்கும், தேவையில்லாத விரோதம் உருவாக்குவதற்கும் வழி வகுக்குகிறது.....

தலைமையை நேசிப்பது என்பதிலும் கொள்கை நேசிப்பு என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும் சம அளவில் இருக்கவேண்டும்.

உங்கள் சொந்த வெறுப்புக்கும், பகைக்கும் கட்சியை பயன்படுத்த வேண்டாம்  அடுத்தடுத்த தலைமுறைக்கும் கட்சி சென்றாக வேண்டும்.  மக்களுக்குகான மாபெரும் இயக்கம் இது தனிப்பட்ட எவருக்கும் சொந்தம் கிடையாது.

தினமும் முகநூலில் சகோதரத்துத்துவத்தை உடைக்கிற கருத்து மட்டுமே சில தற்குறிகளால் கட்டமைக்கப்படுகிறது, சாதிய மதவாத சக்திகளை எதிர்ப்பதைவிட சொந்த சமூகத்தவரை எதிர்த்து செய்கிற வேலையே பெரிதாக இருக்கிறது, 

கொள்கை அடிப்படையில் வருடத்திற்கு 10 இளைஞர்களை அரசியல் படுத்தி கட்சிக்கு அழைத்துவரும் வேலை செய்தலே போதும் 

அதை விடுத்து உட்கட்சி முரண்பாடு, பொறாமை அரசியல், நல்லவர்களை பிரிப்பது , பழி சொல்வது, ஆதரவு சக்திகளை எதிராக மாற்றுவது, ஒருவருக்கு ஒருவரிடம் முரண்பாடு உருவாக்கும் விதமாக திட்டமிட்டு பொய்களை புனைவது, தோழமை கூறுகளை சிதைத்து மோதலை உருவாக்கும் வேலைகளை செய்வதே வேலையாக சிலர் வாழ்கிறார்கள்.

சாதி இந்துக்களை கொண்டாடி மகிழ்ந்தே பழக்கப்பட்ட வம்சம்.

 *மாறுங்கள்* 
ஒரு சிலரின் தவறான அணுகுமுறையால் நம்மை ஆதரித்தவன் எதிராக மாறுகிறான் 
நம்மை ஏற்று பணி செய்ய நினைத்தவனை எதிரியாக மாற்றுகிற சூழ்நிலையை ஏற்படுத்துகிறான், கொள்கை இல்லாத தலித் கட்சிகள் மீண்டும் துளிர் விடுகிறது. 

கொண்ட கொள்கையில் உறுதியுடன் மக்களுக்கான வேலை செய்தால் எந்த கொம்பனும் நம்மை வீழ்த்த முடியாது.

எவரை பார்த்தும் அச்சம் வேண்டாம், எதிராளியாக மாற்றி விட வேண்டாம் பயம் அறிவற்றவர்களுக்கு மட்டுமே வரும்

நாம் கருத்தியல் தலைமையை, வரலாற்று சிறப்பு மிக்க தலைமையை,
மக்களுக்காக வாழ்வை, இளமையை அர்பணித்த தலைமையை கொண்டுள்ளோம். 
நாம் பணியாற்றுவோம்
கடுமையாக பணியாற்றுவோம்....
#எழுச்சித்தமிழர் கரத்தை வலுபடுத்துவோம்.

2 #ஆண்டுகளுக்கு_முன்பு_எழுதியது

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்