புலம்பெயர் தொழிலாளர்கள் ஏன் உருவாகினர்கள் யார் உருவாக்கினார்கள் !
மார்ச் 25 முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் வந்தது,
ஊரடங்கினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்தான்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டுள்ளனர் அவர்களின் அவலம் என்பது பேரவலம் யாரந்த புலம்பெயர் தொழிலாளர்கள்.
இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்,
தமிழகத்தில் இருக்கிறவர்கள் குஜராத்திற்கு கூலி வேலைக்கு, கல் தூக்கும் வேலைக்கு செல்கிறார்கள் குஜராத்தில் இருப்பவர்கள் இங்கு தமிழ்நாட்டில் வந்து அதே வேலையை செய்கிறார்கள் எதற்கு செய்கிறார்கள் இதற்கு ஏன் ஒரு அலைச்சல், அவரவர்கள் அங்கங்கேயே அதாவது அவரது ஊர்களிலேயே வேலை செய்து கொள்ளவேண்டியதுதானே, அமெரிக்காவில், சிங்கப்பூரில் ஒரு பொறியாளருக்கு 5 லட்சம் சம்பளம் தருகிறார்கள் என்பதற்காக அங்கு வேலைக்கு போனால் ஒரு அர்த்தம் இருக்கிறது, ஆனால் இந்தியாவில் கூலி வேலை செய்வதற்கு பல மாநிலங்களை கடந்து செல்வதற்கு அர்த்தம் என்ன,
இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எப்படி உருவாகுகிறார்கள், புலம்பெயர்ந்து வாழ வேண்டிய அவசியம் என்ன? ஏன் இதை எவரும் ஆய்வு செய்யவில்லை அல்லது தொலைக்காட்சியில் அமர்ந்து விவாதிக்க வில்லை, இவர்களை குறித்து எந்த விவாதமும் அரசியல் வாதிகள், அறிவுஜிவிகள் ஏன் விவாதிக்க வில்லை.
இதில் பெரும்பகுதியான புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு சிறு பகுதி மட்டுமே நகரங்களிலிருந்து புலம் பெயர்கிறார்கள் ஆனால் அதிகப்படியான புலம்பெயர்தல் கிராமங்களில் இருந்து சென்றவர்களே, கிராமங்களில் நகரங்களில் இருந்து ஏன் வெளியேறுகிறார்கள் என்றால்
அந்த கிராமத்தின் மொத்த நிலபரப்பும் 5 சதவீதம் முதல் 10 சதவீதத்தினர் கைகளில் போய்விடுகிறது, ஒரு கிராமத்தில் 1000 ஏக்கர் நிலம் இருக்கிறது என்றால் 900 ஏக்கர் நிலம் இந்த 10 சதவீதத்தினரிடம் இருக்கிறது, மீதம் உள்ள 100 ஏக்கர் நிலமும் ஒரு 30 சதவீதத்தினர் வைத்துள்ளனர் 60 சதவீதம் மக்கள் ஏதும் இல்லாலமல் நிலம் சொந்தமில்லாமல் ஒன்றும் இல்லாதவர்களாகவே இருப்பார்கள், ஆகவர்களுக்கு அந்த கிராமத்தில் வாழ்வதற்கு ஜனநாயக வழிமுறைகள் இல்லை நிலமெல்லாம் நிலத்தில் உழைக்காதவர்கள் கைகளில் போய்விட்டது அல்லது கோயில்கள் கட்டுபாட்டில் இருக்கிறது, கொஞ்சம் பேர் நிலம் வைத்து உழைத்து வாழ்வான் எதுவுமே இல்லாதவன் அங்கு ஒரு சனநாயகம் அவர்களுக்கு இல்லாததால் ஜனநாயக ரீதியான வாழ்க்கை முறை இல்லாததால் வாழ்க்கையை தேடி ஒட ஆரம்பித்து விடுகிறான், நாடோடியாக செல்கிறான் இவன் தான் புலம்பெயர் தொழிலாளர்,
கிராமத்தில் சனநாயக ரீதியான உற்பத்தி முறையையும், சனநாயக ரீதியான வாழ்க்கை முறையையும் இல்லாமல் சாதிய அடக்குமுறையும், தீண்டாமையும், மற்றவைகளும் இருக்கும் போது வாழ்கை முறை வெறுமை அடைந்து கசந்து போய்விடுகிறது எனவே சுதந்திரமான வேலையும் , சுதந்திரமான வாழ்கை முறை இடத்தையும் நோக்கி போய்விடுகிறார்கள் , புலம் பெயர்வதற்கு சாதியும் தீண்டாமையும் ஒரு காரணமாக இருக்கிறது,
கிராமத்தில் உழைக்கிறவர்களுக்கு நிலம் கொடுக்கிறபோது ஒரு கிராமத்தில் 1000 ஏக்கர் நிலம் இருந்தால் அங்கு வசிக்கிற 1000 குடும்பத்தினருக்கு தலா 1 ஏக்கர் கொடுத்தால் அந்த ஆயிரம் குடும்பங்கள் பிழைத்து கொள்ளும் ஏன் அவர்கள் கிராமத்தை விட்டு வெளயேற போகிறார்கள், படித்து விட்டு யாராவது வேலைக்கு போகிறவர்கள் வழக்கறிஞராக, மருத்துவராக, காவல்துறை அதிகாரிகளாக , வட்டாச்சியராக, கிராம நிர்வாக அலுவலராக இப்படி வேலை செய்பவர்கள் மட்டுமே கிராமத்தை விட்டு வெளியேறுவார்கள், மற்ற உடல் உழைப்பு தொழில்கள் எல்லாம் நிலத்தில் உழைத்து அதை கொண்டு வாழ்வதே அவர்களின் வாழ்கை இருக்கும், ஏன் புலம்பெயர்ந்த தொழிலாளராக உருவாக போகிறார்கள்.
கிராமத்தின் அடிப்படை பொருளாதார உற்பத்தி உறவுகளை மாற்றி அமைக்காமல் இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க முடியாது , அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் உணவு தண்ணீர் வழங்கினாலும் அவர்களை பிடித்த வறுமை ஒன்றும் விலகிவிடாது,
அனைத்து நகரங்களிலும், தொழிற்சாலைகளிலும் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்துவிட்டு நகரங்களை உயர்த்திவிட்டு ஊரடங்கு போட்ட பின் ரயில் இல்லை பஸ் இல்லை ஊருக்கு போக வழி இல்லை, படுக்க இடமில்லை, பட்டினி பசி, காலில் செருப்பு இல்லை ஊருக்கு நடந்தே செல்கிறார்கள் இந்த புலம்பெயர் தொழிலாளர்கள்,
புலம்பெயர் தொழிலாளர்
குறித்து அரசாங்கத்திற்கு தெரியாதா என்றால் நன்கு தெரியும்,
புலம்பெயர் தொழிலாளர்களை சுரண்டுவதற்கும், நிறைய சுலபமான முறையில் முதலாளிகள் சுரண்டுவதற்கு ஆதரவு அரசுதான், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பின்புலம் ஏது இங்கிருந்து குஜராத்திற்கு போகிறவர்கள் அங்கு சுரண்டலுக்கு எதிராக, சரியான ஊதியம் கேட்டு போராட முடியுமா போராடுவார்களா? கடலூர் காரன் கடலூரில் வேலை செய்கிற போது வேலைக்கு ஏற்ற உழைப்புக்கெற்ற ஊதியத்தை கேட்பார் இல்லையெனில் கட்டுபடியாகது என்பார் மிரட்டினால் நானும் உள்ளூர் காரன்தான் என்பார் ஏன் எனில் அவனது உற்றார் உறவினர், அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா இப்படி அவனது உறவுகள் அவனது சாதி ,ஊர் ஆகிய அனைத்தும் பின்புலமாக இருப்பதால் இந்த கூலி இருந்தால் வேலை செய்வேன் இந்த ஊதியத்தை கொடு என்று உள்ளூர் தொழிலாளி கேட்க முடியும் ஆனால் எந்த பின்புலமும் இல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் எதுவும் செய்யமுடியாது குறைந்த ஊதியத்தில் வேலை செய்வார்கள் இதனால் புலம்பெயர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முதலாளிகளுக்கு ஆதரவாக அரசு இருக்கிறது.
இந்த புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து எல்லோரும் சுரண்டுகிறார்கள் , இதற்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது, திட்டமிட்டு புலம் பெயர் தொழிலாளர்களை உருவாக்கி அதனை முதலாளிகளுக்கு ,வர்த்தகர்களுக்கு ஆதரவாக திட்டமிட்டு புலம் தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள்.
நெய்வேலியில் 300 புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள், சென்னை கோயம்பேடு மார்கெட்டில் 15 ஆயிரம் பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் மூட்டை தூக்குகிறார்கள் இவர்கள் கிராமத்தில் எதுவும் இல்லாத நிலையில் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டத்தில் இருந்து அங்கு பணியாற்றுகிறார்கள் உள்ளூர் பூர்வகுடிகளுக்கு அல்லது உள்ளூர் காரர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது, வேலையில்லாமல் போகிறது, சுரண்டுவதற்கு வர்த்தகர் முதலாளிகளுக்கு ஆதரவாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கபடுகிறது ,
புலம்பெயர் தொழிலாளர்களை அரசே திட்டமிட்டு புலம்பெயர் தொழிலாளர்களை சுரண்டுவதற்காகவே வளர்த்து வருகிறது இல்லையெனில் புலம்பெயர் தொழிலாளர்கள் எப்படி 11 கோடி பேர் உருவானார்கள்.
(விரிவாக பிறகு பார்ப்போம்)
Comments
Post a Comment