விழிப்புணர்வு அடைய வேண்டும்.

ஒவ்வொருவரும் தலைவராக வேண்டும்.
மக்களை தலைவராக்க வேண்டும்.
இதுவே டாக்டர் எழுச்சித்தமிழர்  தொல். திருமாவளவன் அவர்களின் கனவு.
அந்த கனவைக் களத்தில் நனவாக்கத்தான் தலைவர் நாளும், நொடியும் உழைத்து வருகிறார்.

தலைவர் பஞ்சம் உள்ள ஒரே சமூகம் என்றால்,
அது சேரி சமூகம்தான்.
அதனால்தான் “தலைவர்களை உருவாக்க வேண்டும்” என்பதே
#அண்ணன்_எழுச்சித்தமிழர் அவர்களின் அரசியல் லட்சியம்.
அதற்காகத்தான் அவர் இரவும் பகலும் தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.

அம்பேத்கரியல்,
பெரியாரியல்,
மார்க்சியம், மற்றும்
உலகின் அனைத்து முற்போக்கு கருத்தியல்களையும் ஆழமாகக் கற்று,
அவற்றை நமது நிர்வாகிகளுக்குப் போதிக்கிறார்.
மக்களிடம் எப்படி அணுக வேண்டும்,
எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும்
நிர்வாகிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்.

தலைவரின் கால் நூற்றாண்டு களப்பணி அனுபவம்,
கருத்தியல்–நடைமுறை இணைப்பு,
அனைத்தையும் தொகுத்து
“அமைப்பாய் திரள்வோம்”
என்ற நூலாக நமக்கு வழங்கியுள்ளார்.

தலைவராக உருவாக வேண்டும் என்பதன் பொருள்
தனிக் கட்சி தொடங்கி
தன்னைத் தலைவராக அறிவித்துக் கொள்வது அல்ல.
அரசின் அடுக்குமுறையினும்,
சாதிய ஒடுக்குமுறையாயினும்,
அனைத்தையும் எதிர்கொள்ளும் தகுதி,
மக்கள் மேம்பாட்டுக்காக உழைக்கும் மனம்,
மக்களை காக்கும் துணிவு,
நமக்கான உரிமைகளை மீட்கும் ஆளுமை, 
இதையெல்லாம் வளர்த்துக் கொள்வதே அதன் உண்மைப் பொருள்.

“எவருடனும் சேர்ந்து வாழலாம்,
எவரையும் சார்ந்து வாழக்கூடாது”
என்பதே தலைவரின் அடிப்படை கருத்தியல்.
நாமே நமது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
நாமே நமது ஆளுமையையும், வளத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நம்முடைய ஒன்றிய செயலாளர்,
நகர செயலாளர்,
முகாம் செயலாளர் 
மாவட்ட ஆட்சியர் முதல்
காவல்துறை கண்காணிப்பாளர் வரை
அனைத்து அதிகாரிகளையும் தானாகவே அணுகி,
மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும்
தலைமைப் பண்பை கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் இன்று என்ன நடக்கிறது?
காவல்துறை கண்காணிப்பாளர்,
துணை கண்காணிப்பாளர்,
ஆய்வாளர்,
உதவி ஆய்வாளர்,
ஏன் தலைமை காவலர்,
கிராம நிர்வாக அலுவலர் வரை 
எல்லோரிடமும் பேச
“தலைவரே பேசுங்கள்” என்று
நமது நிர்வாகிகள் தலைவரை முன்னிறுத்துவது,
மாற்றுக் கட்சி நிர்வாகிகளிடம்
போன் கொடுத்து
“இவர்களுக்காக பேசுங்கள்” என்று
கோருவது —
இது என்ன அணுகுமுறை?
நாம் என்ன கற்றுக் கொண்டோம்?
எந்தப் பிரச்சினையாயினும்,
அந்தப் பிரச்சினையை தீர்க்க
நாமே தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதுதான்
அண்ணன் அரசியலை புரிந்து கொண்டதற்கான,
கற்றுக் கொண்டதற்கான
உண்மையான அடையாளம்.

எதற்கெடுத்தாலும்
தலைவரை தொந்தரவு செய்வது
ஆளுமையின்மையின் வெளிப்பாடே.
தலைவர் எனக்குக் கொடுத்த அரசியல்,
கருத்தியல்,
என்னை எப்போதும்
எவரிடமும் உதவி கேட்க அனுப்பாது.

“இவரால்தான் முடியும்,
நம்மால் முடியாது”
என்ற எண்ணமே
எனக்குள் வராது.
நானே 
100 சதவீதம்
ஒரு பிரச்சினையை தீர்த்து வைப்பேன்.

இதுதான்
எழுச்சித்தமிழர் அண்ணன்
எனக்குக் கொடுத்த
விழிப்புணர்வு.

இவண்:-
ஞானம் மு.அறிவுடைநம்பி 
வழக்கறிஞர் 
கடலூர்-1 

மீள் பதிவு 
Sep- 02-2020


Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்