ஆதனே ஆதாம் ...அசேராவே அல்லா..


ஆதம் எகிப்தியரின் ஞாயிற்று தெய்வமாக இருந்தத. அத் தெய்வம் மறையும் ஞாயிற்றை குறித்தது .

பின்னர் *ஆதம்* எனும் இந்த தெய்வத்தை *ரே*  என்னும் இன்னொரு எகிப்திய தெய்வத்துடன் இணைத்து *ஆதம்- ரே* என்று ஆக்கினர் .

கிமு 1351-1334 எகிப்தின் ஆட்சி மாற்றம் நடந்தபின் அரசன் முன்பிருந்த எகிப்திய தெய்வங்களை வழிபடுவதை ஒழித்துவிட்டு *ஆதன்* எனப்பட்ட ஞாயிற்று தெய்வத்தை மட்டுமே வழிபட வேண்டுமென ஆணையிட்டார், உலகத்தில்  முதன்முதலில் ஒரு கடவுள் வழிபாடு இதுவேயாகும்.

பினிசிய தெய்வங்களாகிய ஆதனும் அசேரவுமே பிற்காலத்து யூத கிறிஸ்துவ , இஸ்லாமிய சமயங்களில் வருகின்ற படைப்புக் கதைகளில் *ஆதம் ,அவ்வா*  எனப்பட்ட முதல் ஆணும் பெண்ணுமாக உருவகப் படுத்தப்பட்டனர்.

ஆதன் என்னும் எகிப்திய- பீனிசியத்  தெய்வமே யூதர்களின் படைப்பு கதையில் ஆதாம்  என்றானது,

 ஆதன் என்பதே ஆதம் என்றும் ஆதாம் என்றும் திரிந்திருக்கிறது என்றும்.
 ஆதமின் மனையாட்டியைப் பழைய எபிரேய மொழியில் அவ்வா என்று அழைப்பதால் அம் மூதாட்டியையும் தாயையும் குறிக்கும் அப்பெயர் *ஒளவை* என்னும் தமிழ் பெயரின் திரிபாயிருக்கலாம் என்றும்   *பாவாணர்* கூறுகிறார்.

ஆதாமுக்கும் அவ்வா வுக்கும் கெய்ன், அபெல் என்று இரு பிள்ளைகள் பிறந்தனர் , ஆபெல் இறந்தபின் அவ்வாவுக்குச் சேத்து என்னும் மூன்றாவது மகன் பிறந்தான்,  இந்த சேத்தின் வழி வந்தவர்களே நோவாவும் அவன் பின் வந்த ஒட்டுமொத்த மாந்த இனம் என்று விவிலியத்தின் தொடக்க நூல் கூறுகின்றது.

எகிப்திய தொன்மத்தில் வரும் ஆசர் அல்லது கிரேக்கரின் 
ஓசைரிசு என்ற தெய்வம் ஆசேத்து என்ற பெண் தெய்வத்தின் அண்ணனும் ஆவான், ஆசேத்துடன் உடன்பிறந்த சேத்து என்ற தெய்வம் ஆசரைக் கொன்றுவிட்டதாம்,  ஆதாமுக்கும்  அவ்வாவுக்கும்  சேத்து என்று எகிப்திய தெய்வத்தோடு இருந்த உறவு இதனால் புலப்படும்.

இக்காலத்து எபிரேய மொழியில் ஆதாமின் துணைவியைச் *சவ்வா* என்கின்றனர் 
 இஸ்லாமியர்களின் திருமறையான 
திருக்குரானிலும் வருகின்ற ஆதாம்- ஏவாள் கதை கி-மு 1000 ஆண்டளவில் தோன்றிய கதையாகும்.

ஆதாமின் துணைவியின் பெயரை இன்னதென அத் திருக்குரானில் குறிப்பிடப்படவில்லை,
 எனினும் இஸ்லாமிய மரபிற்கேற்ப அரபுமொழியில் 'அவளை' *அவ்வா* என்றே குறிப்பிடுகின்றனர்.

யூத கிருத்துவ, இஸ்லாமிய சமயங்களுக்கெல்லாம் பொதுவானதொரு படைப்பு கதையே ஆதாம்- அவ்வா படைப்பு கதையாகும்.

 இங்கு ஓர் உண்மையைக் குறிப்பிடலாம், பினிசியரின் தெய்வமான  ஆதனின் மனையாட்டி ஆகிய அசேராவுக்கும் கிமு 1000 ஆண்டளவில் சவாத், அவா என்ற பெயர்களே அராமிய மொழியிலும் கூட   வழங்கிவந்தென்பதே அவ் உண்மையாகும். *யார் இந்த *பினிசியர்*  *பிறகு பார்ப்போம்* .*

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்