சனாதனத்துக்கு எதிரான சமதர்மப் புரட்சிப் பயணம்✦ புத்தர் – அம்பேத்கர் – திருமாவளவன் ✦

சனாதனத்துக்கு எதிரான சமதர்மப் புரட்சிப் பயணம்
✦ புத்தர் – அம்பேத்கர் – திருமாவளவன் ✦

ஏறத்தாழ 2400 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இந்தியப் பேரமைப்பில் உழைக்கும் மக்களை சமதர்ம ஆன்மீகக் கோட்பாட்டின் கீழ் ஒருங்கிணைத்து, (Conservative) சனாதனக் கொள்கைக்கு எதிராக ஒரு அமைப்புசார்ந்த போராட்டத்தை நடத்தியவர் உலகின் முதல் முற்போக்கு புரட்சியாளர் – புத்தர்.

இந்தியாவில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே விவசாய சமூகக் கட்டமைப்பில் உழைக்கும் மக்களாக இருந்து, சமூக ரீதியாக உடைக்கப்பட்ட மனிதர்களாக—பி.ஆர்.அம்பேத்கர் கூறிய “Broken Men”—அடையாளப்படுத்தப்பட்டவர்களே இன்றைய தலித்துகள்.

வரலாற்று தொடர்ச்சியில், இன்னொரு உழைக்கும் இந்தியாவாக தொடர்ந்து வாழ்ந்து வரும் இந்த சமூகமே, உண்மையில் முதல் கம்யூனிச சமூக அமைப்பு எனலாம்.
உழைப்பின் வலிமையையும், பேரண்ட ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு சமத்துவ சமூக அமைப்பை வலியுறுத்திய அனைவரையும், இந்தியாவின் (Conservative) சனாதனவாதிகள் திட்டமிட்டு “தீண்டத்தகாதவர்கள்” என மாற்றினர்.
இது ஒரு இயல்பான சமூக நடைமுறை அல்ல; அது திட்டமிட்ட அரசியல்–சமூக வன்முறை.

கார்ல் மார்க்ஸ் அவர்களின் பொருளாதாரக் கோட்பாடு மனிதகுலத்திற்கு எவ்வளவு அவசியமோ, அதைவிட மேலான அவசியம் மனிதகுலத்திற்கு
சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம்.
இந்த மூன்றும் இல்லாத எந்த அரசியல், பொருளாதார கோட்பாடும் மனித விடுதலைக்கு வழி வகுக்காது.

அம்பேத்கர் தனது ஆய்வுகளில், “Closed Door Policy” என அவர் குறிப்பிட்ட சாதியக் கட்டமைப்பை—
தன்னைத் தானே மூடிக்கொண்டு, அடுத்த மனிதனை ஒதுக்கித் தள்ளும் அமைப்பாக—
மிகக் கொடூரமான சமூக அமைப்பு என வரையறுத்தார்.
இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல், அதைக் கவனிக்காமல் நடைபெறும் எந்தப் போராட்டமும் பயனற்றதாகவே முடியும்.

இந்தியாவில், அம்பேத்கரின் துணை இன்றி கம்யூனிசக் கட்டமைப்பை நிலைநிறுத்தவும், வெற்றிகரமாக வளர்க்கவும் எப்போதும் முடியாது என்பதே வரலாற்று உண்மை.
மேலும்,
“Social Democracy அடையாமல், Political Democracy என்பது வெறும் வேலையே”
என்று அம்பேத்கர் எச்சரித்தார்.

சமூக சமத்துவம் இல்லாத அரசியல் ஜனநாயகம், அதிகாரம் சிலரின் கையில் குவிவதற்கான கருவி மட்டுமே.

புத்தரின் பேரண்ட ஆன்மீக–சமதர்ம புரட்சிக் கோட்பாட்டை,
மௌரிய பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு,
இந்திய துணைக்கண்டத்தில் மீண்டும் ஆய்வு செய்து, உலகிற்கு அரசியல்–சமூக–பொருளாதார விடுதலைக் கோட்பாடாக அறிவித்தவர்
புரட்சியாளர் அம்பேத்கர்.

அம்பேத்கருக்குப் பிறகு,
இன்றைய காலகட்டத்தில்
சனாதனத்தை வேரறுக்க அரசியல் களத்தில் நிற்கும் ஒரே தலைவர்
எழுச்சித்தமிழர் அண்ணன் திருமாவளவன் அவர்களே ஆவார்.
அவர் அம்பேத்கரின் அரசியல் வாரிசு
புத்தரின் அரசியல் மரபின் தொடர்ச்சி…

இந்துத்துவ – சாதிய – சனாதன – ஆணாதிக்க பயங்கரவாதத்தை வேரறுப்போம்.
அண்ணன் திருமா தலைமையை ஏற்போம்.

சமத்துவம் – சமூக நீதி – மனித விடுதலைக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

2018 இல் திசம்பர் 28 தேதி பதிவு இதனை மீள் பதிவு செய்கிறேன்.

இவண்: 
வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்