ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்தியாவிலிருந்து தமிழர்கள் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
ஏகாதிபத்தியத்தால் (பேரரசுவாதம்), காலணி ஆதிக்கத்தால் இந்த நூற்றாண்டில் இந்திய ஒன்றியத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் தான் குறிப்பாக தமிழக பூர்வ குடிகள் தான், ஆம் அப்படி பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியா அல்லாத இலங்கை,மலேசியா, மியன்மார் போன்ற பிற நாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டு வெள்ளையர்களின் வணிக லாபத்திற்காக கொத்தடிமைகளாக, கூலிகளாக வேலைக்கு அமர்த்தி கொண்டனர், அக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்து சென்ற இந்திய தமிழர்கள் குறித்து தற்போதைய நிலையில் இந்தியாவில் தமிழர்கள் உள்ளிட்ட யாரும் அவர்களை பற்றி கவலைப்படுவதே இல்லை என்பது கவலைக்குரிய ஒன்றாகும். அவர்களின் உறவினர்களும் கூட புலம்பெயர்ந்து சென்ற உறவுகள் மீண்டும் பூர்வீகத்திற்கு அதாவது சொந்த நாட்டிற்கு வந்தால் அவர்களின் தந்தை,தாய், பாட்டன் பூட்டன் விட்டு சென்ற சொத்தில் உரிமை கோருவார்கள் என்ற சுய நலத்தின் காரணமாகவும் பலருக்கு இரத்த வழி உறவுகள் குறித்து கவலைகள் இல்லை.
ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் வாழுகின்ற நாடுகளில் குடியுரிமை பெற்று அந்த நாட்டின் குடிமக்களாக வாழ்ந்தாலும் அவர்களின் வாழ்நிலை, அவர்களின் வாழ்வுரிமை என்பது மிக மோசமான நிலையிலேயே அங்கு இருக்கிறது,
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து சென்ற இந்திய தமிழர்கள் நலன் குறித்த உரையாடலை விரிவாக்க வேண்டும், அதுபோலவே அவர்கள் விரும்பினால் இந்தியாவில் மீள் குடியேற்றம் செய்வது, குடியுரிமை வழங்குவது குறித்த கோரிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் அதாவது கருத்துருவாக்கம் செய்திட வேண்டும், இந்தியாவிலிருந்து சென்ற இந்த பூர்வகுடி தமிழர்கள் வரலாற்றை பேச வைக்க வேண்டும்.
நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இந்த நாட்டில் இருந்து வெளியே சென்ற இந்திய பூர்வ குடிகளான தமிழர்கள் நலன் குறித்து எந்தவித விவாதமும் நடைபெறவில்லை என்பது தான் மிக மோசமாக ஒன்றாக இருக்கிறது.
Comments
Post a Comment