நடுவீரப்பட்டு சேரியில் புகுந்து தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடு

*தமிழக அரசே...!* 
                                 *காவல்துறையே...!* 

கடலூர் வட்டம், கடலூர் ஒன்றியம் குமளங்குலம் ஊராட்சி, நடுவீரப்பட்டு காலனி அருகே  சேரி மக்கள் வழிபடும் அய்யனார் கோவில் உள்ளது அக்கோயிலில் ஆண்டு தோறும் ஊரணி பொங்கல் வைத்து சேரி மக்கள் உள்ளிட்ட அனைத்து சாதியினரும் வழிபடுவார்கள்.  கடந்த இரண்டு வருடங்களாக கொரான நோய் பரவல் காரணமாக  பொங்கல் வைத்து வழிபடவில்லை, ஆகவே இந்த ஆண்டு  நடுவீரப்பட்டு சேரி மக்கள் வீட்டு வரி போட்டு வழக்கம்போல் ஊரணி பொங்கல் வைக்கும் திருவிழாவை நடத்த 05.09.2022 அன்று ஏற்பாடு செய்து கோயிலை அலங்காரப்படுத்தி அனைத்து பணிகளையும் செய்தனர்,  வழக்கம்போல் சஞ்சீவிராயன் கோயில் கிராமத்தை சேர்ந்த சுமார் 100 வன்னியர்கள் ஆண்கள்,பெண்கள் அனைவரும் நடுவீரப்பட்டு காலனி  அய்யனார் கோயிலுக்கு 5.09.2022 அன்று காலை சுமார் 7 மணிக்கு பொங்கல் வைக்க வந்தனர். 04.09.2022 அன்று இரவு  நடுவீரப்பட்டு காலனியில் செல்வகுமார் என்பவர் இறந்ததால் நடுவீரப்பட்டு காலனி மக்கள் அதிக அளவில் பொங்கல் வைக்கும் நிகழ்வில் பங்கேற்கவில்லை,  கோயிலில் அனைவரும் பொங்கல் வைத்து முடிக்கும் நேரத்தில் மதியம் சுமார் 1 மணியளவில் அங்கு கோயிலில் இருந்த நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்த பிரகாஷ் மகன் தவசி, மற்றும் சதிஷ் என்பவரும், சஞ்சீவிராயன் கோயில் கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரும் மிக நெருக்கமாக  பேசி சிரித்து  கொண்டிருந்தனர் அப்போது இதனை பார்த்த சஞ்சீவிராயன் கோயில் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் பறை பையனிடம் என்னட பேச்சு என்று ராஜா அசிங்கமாக பேசி சதிஷ் என்பவரை நெஞ்சில் கையை வைத்து வேகமாக தள்ளினார் இதனால் கீழே விழுந்த சதிஷ் ஏன்டா தேவையில்லாமல் சாதி சண்டை வாங்குகிறீர்கள் என்று கேட்டனர், உடனே அங்கு நின்றிருந்த பிரவின்குமார்,ரஞ்சித்குமார், ஹரிஷ்குமார், மருதநாயகம் மற்றும் சிலர்  இங்கு கோயிலில் இருந்து நடுவீரப்பட்டு காலனி காரனுங்க எல்லாம் போங்கடா இல்லை யெனில் நடக்கிறதே வேற என்றும் இன்னும் கொஞ்ச நேரத்தில்  பறையன்கள் தலை இங்கு உருளும்  என்றும் கொலை மிரட்டல் விடுத்தும், அசிங்கமாகவும் பேசி, மிரட்டல் விடுத்தனர், இதனால் அங்கு அய்யனார் கோயிலில்  இருந்த நடுவீரப்பட்டு காலனியைச் சேர்ந்த   தவசி, சிபிராஜ், சதிஷ், ஆகியோருக்கும் சஞ்சீவிராயன் கோயிலை சேர்ந்த பிரவீன்குமார், ரஞ்சித்குமார், ஹரிஷ்குமார், மருதநாயகம், ராஜா ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தவசி,.சிபிராஜ், சதிஷ் ஆகிகியோரை சஞ்சீவிராயன் கோயிலை சேர்ந்த பிரவீன்குமார் ஹரிஷ்குமார் ஆகியோர்கள் கைகளால் கால்களால்  தாக்கினர்கள் உடனே அங்கு இருந்த நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்த பெண்கள், பெரியோர்கள் மற்றும் ராஜேந்திரன், சண்முகம்,.அமுதா ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானவர்களை மீட்டு, நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்தவர்கள் அனைவரையும் கோயிலில் இருந்து வீட்டுக்கு போங்கள் என்று கூறினார்கள். 

 அதற்குள் அங்கு கோயிலில் சுமார் 200 க்கும் மேற்பட்ட  சஞ்சீவிராயன் கோயில் கிராமத்தை சேர்ந்த வன்னியர்கள் திரண்டுவிட்டனர், இதன்பிறகு   மதியம் சுமார் இரண்டு மணியளவில் பொங்கல் வைத்து படைத்து முடித்து விட்டு பொங்கல் கூடையுடன் சஞ்சீவிராயன் கோயிலை சேர்ந்த வன்னியர்கள் அவர்களது ஊருக்கு மேள தாளத்துடன் ஊர்வலமாக    சென்றனர் நடுவீரப்பட்டு காலனி அருகே வந்தவுடன் பெண்கள் மட்டுமே அர்களது ஊருக்கு பொங்கல் கூடையுடன் சென்றனர்,   ஆண்கள் மட்டும் சுமார் 100 பேர்  அளவில் நடுவீரப்பட்டு காலனி செல்லும் வழி ரோட்டில் அவர்கள் அனைவரும் நின்று கொண்டு  விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தில் இருந்த கொடியை கிழித்து கீழே போட்டுவி்ட்டு, அங்கிருந்த பேனரையும் கிழித்து விட்டு, இந்த பறையனுங்களா, படையாச்சியா பாத்திடுவோம் வாங்கடா என்று சொட்டையர் மகன் சின்னகுஞ்சி என்பவரும், ஜெயச்சந்திரன் என்பவரும் சொல்ல, சேரியையே கொளுத்தி வாரிடுவோம்  வாங்கடா சேரிக்குள் போவோம் என்று  வாண்டையார் என்பவரும், ஆறுமுகமும் என்பவரும் சத்தம் போட, தயாநிதி மற்றும் சிலர் நடுவீரப்பட்டு காலனிக்குள் அனைவரும் வாங்கடா ஒருத்தனை விடக்கூடாது எவனாவது ஒருத்தன சாவடிக்கணும், பறை புண்டைகளை கொன்றுடுவோம் வாங்கடா என்று குரல் எழுப்பி கொண்டு அசிங்கமாக சத்தம் போட்டு கொண்டே தடி,,கத்தி, இரும்பு பைப்பு, வாங்கருவாள், வீச்சருவாள் போன்ற ஆயுதங்கள் அனைவரின் கைகளிலும் எடுத்துக்கொண்டு,  சுமார் 100 க்கும் மேற்பட்ட வன்னியர்கள் நடுவீரப்பட்டு காலனிக்குள் புகுந்து  அவரவர்  வீடுகளில் வெளியே நின்று இருந்த பெண்களை, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை, குழந்தைகளை, வெளியே அமர்ந்து கொண்டிருந்த முதியவர்கள் மற்றும் அவர்களின்  கண்ணில் பட்டவர்கள்  அனைவர் மீதும் கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தினார்கள் ஒரு சிலரை குறி வைத்து வீடு புகுந்தும் தாக்கினார்கள், சுமார் 30 நிமிடம் நடுவீரப்பட்டு சேரிக்குள் சேரி மக்கள் மீது  சாதி வெறியர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள், நடுவீரப்பட்டு காலனி சேர்ந்த சிவா என்பவர் நடுவீரப்பட்டு போலீசுக்கு போன் செய்ய அதன் பிறகு இரண்டு போலீசார் நடுவீரப்பட்டு சேரிக்குள் வந்தனர் அவர்கள் முன்னிலையிலும் சேரி மக்கள் மீது தாக்குதல் நடைபெற்றன, பின்னர்  அனைவரையும் பார்த்து தயாநிதி என்பவர் இங்கிருந்து உடனே அனைவரும் போய்விடுவோம் வாருங்கள் என்று கூறியவுடன் சஞ்சீவிராயன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த வன்முறையாளர்கள் அனைவரும் நடுவீரப்பட்டு காலனியில் இருந்து  ஓடி விட்டார்கள்.  பிறகு தாக்குதலுக்கு உண்டான நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட  10 பேரை   சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், ஆனால் அக்கலவரத்தில் நடுரப்பட்டுச்சேரியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் பலத்த தாக்குதலுக்கு உள்ளானார்கள், பலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர், மேலும்  தாக்குதல் உண்டான இன்னும் சிலர் வழக்கு கொடுத்தால்,காவல் நிலத்தில் புகார் கொடுத்தால் பாதிக்கப்பட்ட அவர்கள் மீதும் பொய் வழக்கு போடுவார்கள் என்ற அச்சத்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே அச்சப்பட்டு இருந்து வருகிறார்கள். சம்பவம் நடந்த சில மணிநேரத்தில்,அன்றே, இச்சசம்பவம் தொடர்பாக ராஜசேகர் என்பவர் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார், அப்புகாரின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சஞ்சீவிராயன் கோயில் கிராமத்தை சேர்ந்த சிலரையும் காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர், பின்னர் இரண்டு தினங்களுக்கு பிறகு வேலைக்கு சென்று கொண்டிருந்த நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்த கோகுல், புஷ்பராஜ் ஆகிய  இரண்டு பேரை காவல் நிலையம் அருகிலே பிடித்து அவர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர், என்ன தவறு செய்தார்கள் நடுவீரப்பட்டு காலனி மக்கள். 
பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த புகார் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை ஆனால் மாறாக வன்முறை செய்த சாதி வெறியர்களிடம் இருந்து ஒரு பொய் புகாரை பெற்று பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பொய் வழக்கு போடுவது எந்த விதத்தில் நியாயம், சஞ்சீவிராயன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த வன்னியர்கள் எதற்காக நடுவீரப்பட்டு  சேரிக்குள் ஆயுதங்களுடன் சென்றார்கள் என்று நடுவீரப்பட்டு போலீசார் சொல்ல முடியுமா, சேரிக்குள் வன்முறை வெறியாட்டம் நடத்தி, சாதி வெறியர்கள் சேரிக்காரர்களை கொலை செய்ய வந்தால்  தற்காத்துக் கொள்ள வேண்டுமா, தலையைக் கொடுக்க வேண்டுமா, காவல்துறையின் நடவடிக்கையில்.என்ன நியாயம் இருக்கிறது பாதிக்கப்பட்ட மக்கள் மீது ஏன் பொய் வழக்கு? பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை நீதிமன்ற விசாரணையின் போது சமாதானம் செய்வதற்காக நடுவீரப்பட்டு சேரி மக்கள் மீது பொய் வழக்கா..!


 *நடுவீரப்பட்டு சேரி மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய் அல்லது வழக்கை பிரிவு மாற்றத்திற்கு உத்தரவிட்டு இ.த.ச. 100  பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்.* 
___________________________________ 

மரணத்தைப் பற்றிய அச்சத்தை உண்டாக்கக் கூடிய தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதியான மற்றொருவருக்குத் தீங்கு ஏற்பட்டாலும் அந்த செயல் குற்றமாகாது. தற்காப்பு நடவடிக்கைக்காக தவறுதலாக அப்பாவியின் மீது தாக்குதல் நடத்தினால் கூட தவறு இல்லை என்று சொல்கிறது சட்டம் ஆனால்  நடுவீரப்பட்டு காலனியில் தாக்குதல் நடத்த நுழைந்தவர்கள் அப்பாவியா, அப்படி எந்த அப்பாவிகளாவது பாதிக்கப்பட்டுள்ளார்களா..?
நடுவீரப்பட்டு சேரிக்குள் நுழைந்து தாக்கியவர்கள் வன்முறையாளர்கள்:

நடுவீரப்பட்டுச்சேரி மக்களை கொலை செய்யும் நோக்கத்துடன் சஞ்சீவிராயர் கோயில் கிராமத்தை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கையில் கத்தி,இரும்பு பைப்பு, வாங்கு அருவாள், தடி போன்ற ஆயுதங்பை எடுத்துக்கொண்டு நடுவீரப்பட்டு சேரிக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களையும், அவரவர் வீட்டில்  இருந்தவர்களையும் கொடிய ஆயுதங்களால் கொலை வெறித்தாக்குதல் நடத்தினார்கள், சிலரை தாக்க முற்படுகின்றபோது தாக்க வருபவரை தள்ளிவிட்டோ, அல்லது தாக்கிவிட்டோ தப்பித்து செல்வதுதான் மனித இயல்பு , கொலை செய்ய வரும் அந்த வன்முறை கூட்டத்தின் மீது ஏதேனும் தாக்குதல்  நடத்தாமல்  தப்பிக்க முடியாது. அனால் அப்படி அந்த சேரிக்குள் நுழைந்த சாதி வெறி வன்முறையாளர்களை தள்ளிவிட்டு அல்லது வாயால் கடித்துவிட்டு, அல்லது கைகளால் தாக்கிவிட்டு அல்லது ஏதேனும் ஆயுதம் கொண்டு தாக்க செய்யும் பொழுது வன்முறை கூட்டத்தினருக்கோ அல்லது அந்த வன்முறை கூட்டத்தில்  கலந்துள்ள வன்முறையாளருக்கோ  தீங்கு நேரிடலாம். தற்காப்புக்கென அந்தக் கூட்டத்தை நோக்கி கற்களால் தாக்குவதோ அல்லது தாக்குதல் தொடுப்பவர்களிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள  தற்காப்புக்கு தாக்குவது எப்டி குற்றமாகும், இது எதுவும் நடுவீரப்பட்டுச்சேரியில் சேரி மக்களால் சேரிக்குள் நுழைந்த வன்முறையாளர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். அப்படியே வன்முறையாளர்கள் மீது தற்காப்பு தாக்குதல் நடந்தால் என்ன என்கிற கேள்வி எழுப்புகிறோம்.
சேரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களுக்கு தீங்கு ஏற்பட்டாலும்  நடுவீரப்பட்டு சேரி மக்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. கூடாது என்பது தான் சட்டம், நியாயமான புலனாய்வாக இருக்க முடியும்.
ஆனால் நடுவீரப்பட்டு போலீசார்  நடுவீரப்பட்டு சேரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சாதி வெறி வன்முறையாளர்கள் மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட  வழக்கை எதிர்காலத்தில்  சமரசம் செய்து கொள்வதற்கு, அதிகாரவர்கத்தினர்  அச்சுறுத்தலால் நடுவீரப்பட்டு போலீசார் வன்முறையாளர்களிடமிருந்து பொய் புகாரை பெற்று சேரி மக்கள் மீதும் பொய் வழக்கு போட்டுள்ளனர்,  இத்தகைய போக்கு தமிழகம் முழுவதும் தொடர் கதையாகவும் இருக்கின்றன, கேஸ் இன் கவுண்ட்டர் போடுவது வாடிக்கையாகி இருக்கிறது. 

காவல்துறை சேரிக்குள் நுழைந்து  தாக்கிய வன்முறையாளர்களிடம் இருந்து புகாரைப் பெற்று சேரி மக்கள் மீதும் வழக்கு போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?  சாதி வெறி வன்முறையாளர்கள் சேரிக்குள் புகுந்து தாக்குகிறார்களே இது சரியா, இவர்கள் கூட்டமாக  சேரிக்குள் செல்கிறார்களே சேரியில் யார் இருக்கிறார்கள்  மாமா இருக்கிறானா மச்சான் இருக்கிறானா, சித்தப்பா,பெரியப்பா போன்றவர்கள் இருக்கிறார்களா, சேரிக்குள் இவர்களது உறவினர்கள் இருக்கிறார்களா அல்லது  வீடு இருக்கிறதா, எதற்காக சாதி வெறியர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் சேரிக்குள் கத்தி போன்ற  ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சென்றார்கள்  கொஞ்சம் கூட சிந்திப்பது இல்லையா, அப்பாவிச்சேரி மக்கள் அந்த வன்முறையாளர்களின் தாக்குதலில் தங்களை தற்காத்துக் கொள்ளாமல் உயிர் வாழ்ந்திட முடியுமா , அந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியுமா , அப்படி ஒருவேளை வன்முறையாளர்களுக்கு சிறு காயமோ, சிறு தாக்குதலோ நடைபெற்று இருந்தால் அது குற்றமா, அதற்காக நடுவீரப்பட்டுச்சேரி மக்கள் மீது பொய் வழக்கு போடுவீர்களா..?
 சட்டத்தின் படி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தற்காப்பு உரிமை உண்டு . பல தீர்ப்புகளில் சொல்லப்பட்டுள்ளது சட்டம் உள்ளது. 
தனிநபர் தற்காப்புக்கு சட்டம் இருக்கிறது, தனி நபர் தற்காப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் பல தீர்ப்புகள்  தந்திருக்கும் போது, இப்படி வன்முறையாளர்களை காப்பாற்றும் வகையில் அவர்களுக்கு ஆதரவாகவே பல வழக்குகள் காவல்துறையால் போடப்படுகிறது, இப்படித்தான் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சேரி மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  
SC/ST  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்  வன்முறையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துவிட்டு அவர்களை காப்பாற்றுவதற்காக பாதிக்கப்பட்ட நபர்கள் மீது பொய் வழக்கை போடுவது எதற்காக என்றால் இந்த வழக்கில் சாதி வெறி வன்முறையாளர்கள் தண்டனை அடைந்து விடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு பொய் வழக்கு சேரி மக்கள் மீது போடப்பட்டுள்ளது, 
எனவே  நடுவீரப்பட்டு சேரி மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து அல்லது  இ.த.ச.100 பிரிவு மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே
இதற்காகத்தான் வருகின்ற 12.09.2022 திங்கட்கிழமை கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் காவல்துறையே நடுவீரப்பட்டு  சேரி மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இவன்.: 
ஞானம் *மு.அறிவுடைநம்பி* 
வழக்கறிஞர்,
கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர்
 *விடுதலைச் சிறுத்தைகள் கட்சி* .

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்