*தமிழக அரசே* ! *காவல் துறையே* ! *விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்* மற்றும் *SC/ST* *இளைஞர்களை* *பல ஆண்டுகளாக ரவுடி பட்டியலில்* *வைத்திருப்பதை* *ஆய்வு செய்து* *நடவடிக்கை எடு* …. ஒரு வரலாற்று தாள் ( History sheet ) அல்லது ரவுடி தாள் ( Rowdy sheet) ஒன்றினை ஒரு நபர் பெயரில் ஏற்படுத்தப்பட்டு அந்த நபர் மீது வரலாற்று தாள் ஏற்படுத்தப்பட்ட அல்லது ஒரு ரவுடி என்ற முத்திரை குத்தப்படுமேயானால் அது அந்த நபர் மீது ஒரு அழியாத களங்கத்தை ஏற்படுத்திவிடும். அதோடு அவருடைய அடிப்படை உரிமைகளை பாதிப்பதாகவும் அமைந்துவிடும். குறிப்பாக இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை (Articles) 21 மற்றும் 19(1)-ல் வழங்கப்பட்டுள்ள சுதந்திரமாக வாழும் உரிமையை பறிப்பதாகவும் அமைந்துவிடும். அத்தகையை அடிப்படை உரிமையை சரியான காரணங்களின் அடிப்படையில்தான் கட்டுப்படுத்த முடியும். அந்த உரிமையை எந்த ஒரு முறையிலும் அதிகாரம் பெற்ற ஒருவரின் உத்தரவினால் சரியான காரணங்கள் இல்லாமல் பறிக்கபடுமேயானால் அந்த ...
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நாடுமுழுவதும் பெரும் விவாதம் உருவாகிக்கொண்டிருக்கிறது அதற்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று கொண்டிருக்கிறது, ஆம் சாதி வாரி கணக்கெடுப்பு என்று அரசு அறிவித்த பிறகு ஒவ்வொரு சாதியையும் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் நியாயமாக இருக்க முடியும், சாதிவாரி கணக்கெடுப்பு சாதிவாரியான குழுக்களை அடையாளம் காண்பது என்பது சாதிவாரி கணக்கெடுப்பு என்று பெயர், அப்போதுதான் சாதிவாரி கணக்கெடுப்பு எந்த நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறதோ அந்த நோக்கத்தை அரசும், அரசாங்கமும் நிறைவேற்ற முடியும், உலகத்தில் வேறு எங்கும் இல்லாத சனநாயம் இந்தியாவில் தான் இருக்கிறது அது அரசியல் அமைப்பு சட்டம் என்கிற வடிவத்தில் இருக்கிறது, பன்மைத்துவத்தை காப்பாற்றுவது தான் ஆகப்பெரும் சனநாயகம் அந்த மாபெரும் தத்துவத்தை வலியுறுத்துவதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். வேற்றுமையில் ஒற்றுமை, ஒவ்வொரு இனத்தவர்களின் தாய் மொழியையும், அவரது பண்பாட்டு பழக்கவழக்கங்களையும் அச்சமின்றி, தயக்கம் இன்றி கடைபிடித்து அவர்கள் சுதந்திரமாக வாழ்வதுதான் பெரும் சனநாயகம், அனைத்து மொழிகளையும் ஒழித்து ஒரு ...
ஒரு சமூகத்தை வழிநடத்த விரும்புகிறவன், முதலில் தன்னைத்தானே வழிநடத்தக் கற்றிருக்க வேண்டும். தன் வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாதவன், பிறருக்கு வழிகாட்ட முயல்வது ஒரு அடிப்படை முரண்பாடு. இதனால்தான் “தன்னைத்தானே வழிநடத்த அறிந்தவனே அடுத்தவருக்கு வழிகாட்டத் தகுதியானவன்” என்ற சிந்தனை, வெறும் நெறிப்போதனை அல்ல, அது சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளம். இன்றைய காலத்தில் வழிநடத்தல் என்றால் அதிகாரம், பதவி, மேடை என்று நினைப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் உண்மையில் வழிநடத்தல் என்பது கட்டளை இடுவது அல்ல, வாழ்க்கையின் வழியாக பாதை அமைத்துக் காட்டுவதே. ஒருவர் சொல்வதை விட, அவர் வாழும் முறைதான் பிறரின் மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தன்னைத்தானே வழிநடத்துதல் என்பது வெளியில் இருந்து விதிக்கப்படும் கட்டுப்பாடு அல்ல. அது மனிதன் தன் மனதோடு நடத்தும் நேர்மையான உரையாடல். “நான் செய்வது நியாயமா?”, “என் சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையே நேர்மை இருக்கிறதா?”, “எனக்கு கிடைத்த அதிகாரம் பிறரை பாதிக்கிறதா?” போன்ற கேள்விகளைத் தன்னிடம் தொடர்ந்து கேட்கும் துணிவே சுய வழிநடத்தலின் தொடக்கம். சுய வி...
Comments
Post a Comment