ஊடக பயங்கரவாதம்

இன்றைய சூழலில் ஊடகவியலாளர்களுக்கு “எதை வேண்டுமானாலும் கேட்கலாம், யாரை வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம்” என்ற அபத்தமான நிலையே உருவாகியுள்ளது. அதனை அரசியல் ரீதியாக ஆதரிப்பதும், கண்டிப்பதும் போன்ற இரு முனைப்புகளும் நிலவுகின்றன.
ஆனால்  அறங்கெட்ட ஊடகத்தின்மீது யார் எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள்?

தவறான தகவல்கள், நேர்மையற்ற கேள்விகள், நாகரிகமற்ற அணுகுமுறைகள், மனித சமத்துவத்திற்கு சமூக நீதிக்கு தமிழினை விடுதலைக்கு போராடுகின்ற ஆளுமைகள் மீது அவதூறுகள் பரப்புவதை கண்டிப்பதற்கு  சமூகத்திலோ, அரசியலிலோ எந்தத் தடையும் எதிர்ப்பும் கண்டிப்பும் இல்லை. 

குறிப்பாக சேரிமக்கள் மீதும், அவர்களின் அரசியல் மீதும், அவர்களுக்காக போராடும் தலைவர்கள்மீதும்கூட தினந்தோறும் திட்டமிட்ட பரப்புரையாக வன்மமும் அவதூறும் செலுத்தப்படுகிறது.

அநியாய ஊடகத்தை எதிர்கொள்வது – அவசியமான காலத்தின் கோரிக்கை

சாதி ஆதிக்கம் கொண்ட ஊடக அமைப்புகளுக்கு மாற்றாக

சமூக நீதிக்காக,ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் மற்றும்  சேரிமக்கள் தங்கள் சொந்த இதழ்களை, நாளேடுகளை, டிஜிட்டல் மீடியாக்களை உருவாக்க வேண்டும்.

அனைவரும் தகவல் துறையில் தங்கள் குரலை உருவாக்க வேண்டும்.

ஊடகவியலாளர் சங்கத்திற்கு போட்டியாக நியாயமான, பொது மக்களுக்கான ஊடகவியலாளர் சங்கம் உருவாக வேண்டும்.

இதுவே தவறான ஊடகத்தைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியாகும்.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் – ஊடகத்தால் விழுந்த தலைவர்,

தனது சொந்த பணத்தை செலவழித்து அரசியல் செய்த  தலைவர்களில் முக்கியமானவர்
தேமுதிக நிறுவனர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்.
அவரை மரியாதை இன்றிப் பேசி, கேள்விகளால் கேலி பொருளாக மாற்றியது இந்த ஊடகத்தின் ஒரு சங்கலி குழு.
ஒரு தலைவரின் கண்ணியத்தை புரிந்து கொள்ளாத ஊடக நாகரீகம் சமூகத்தின் மீது விழுந்த பெரிய சாபமாக இருக்கிறது.

அண்ணன் டாக்டர் எழுச்சித்தமிழர் மீதான அநாகரிகம்

சமீப காலங்களில் டிஜிட்டல் ஊடகங்கள் நாள்தோறும்

நமது இயக்கத்தையும்

நமது தலைவரையும்

சேரி அரசியலையும்

அவதூறு பரப்புவதில் போட்டிபோட்டு செயற்படுகின்றன.
அண்ணன் டாக்டர் எழுச்சித்தமிழரை நோக்கிய வரவேற்பற்ற, நயவஞ்சகமான, மரியாதை இன்றான கேள்விகள் பலமுறை ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டுள்ளன.

ஊடகத்திற்கும், வீரர்களுக்கும் ஒரு நாகரிகம் இருக்க வேண்டும்

ஒரு அரசியல் தலைவரிடம் கேள்வி கேட்பதற்கே ஒரு ஒழுக்கமும் நெறியும் இருக்க வேண்டும்.
அதை மீறும் ஒருவரை கண்டிக்கிறோம் என்றால் அது ஜனநாயக விரோதமல்ல;
அது மனித மரியாதைக்கான குரல்.

சில நேரங்களில் தலைவரிடம் மரியாதை குறைவாக கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை தாக்க வேண்டும் என்கிற  உணர்ச்சி கூட எனக்கு தோன்றும்.
இப்போது சீமான் அதை வெளிக்காட்டி கூறியிருப்பது சரியானது.
அதை நான் த வரவேற்கிறேன்.

நமக்கு அவமானம் ஏற்பட்டாலும் அதைச் சகித்துக்கொண்டு எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்கின்றோம் ஆனால்
மற்றொருவர் குரல் கொடுக்கின்றபோது குறைந்தபட்சம் அமைதியாக இருந்தால் போதும் அதுவே நியாயத்திற்கு ஆதரவாக நிற்பதற்கு சமம்.

அநியாய ஊடகத்தை, ஊடகவியலாளர்களை நமது கட்சியை பயன்படுத்தி 
மற்றவர்களின் பிரச்சினைகளுக்காக, தாங்கள் ஏற்கனவே இருந்த கட்சிகளுக்கு ஆதரவாக , நமது கட்சியை பயன்படுத்த வேண்டாம் நமது மக்களை பயன்படுத்த வேண்டாம் தேவையற்ற சிக்கல்களை நமது கட்சிக்கும் தலைவருக்கும் உருவாக்க வேண்டாம். 

ஜனநாயகத்தில் ஒரு தூணாக ஊடகம் இருந்தாலும்
ஜனநாயகத்தை அதனை மீறிச் செல்லும் கொடுங்கோன்மைக்கு எதிராக குரல் கொடுப்பது — சமூக பொறுப்பே ஆகும்.

வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்