சமூக மாற்றத்தின் குரலாக இயக்குனர் பா. ரஞ்சித் திகழ்கிறார்.

சாதியச் சிக்கல்களை தீர்ப்பதற்கு மிகப்பெரிய மக்கள் தொடர்பு சாதனமான திரைத்துறையின் ஊடாக — சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, பாலின வேறுபாடு, மண்ணுரிமை, பூர்வகுடிகளின் வரலாறு போன்ற பிரச்சனைகள் குறித்தெல்லாம் ஒரு பெரும் விவாதத்தை உருவாக்கி, திரைத்துறையில் அடுத்த கட்ட முற்போக்கான வளர்ச்சியை நோக்கி எடுத்துச் சென்றவர் அறிவுகுடி இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களே.

ரஞ்சித்திற்கு முன்பாக திரைத்துறையில் முற்போக்கு பேசியவர்கள் பெரும்பாலும் காந்திய சிந்தனையுடையவர்கள். ஆகவே அவர்கள் காந்தியம் பற்றியே பேசினர்; அதுவே அவர்களின் வரம்பாக இருந்தது.

ஆனால், இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் — “நான் மட்டும் இல்லாமல், என்னால் இன்னொருவரும் உருவாக வேண்டும்; அதன் மூலம் பலரும் உருவாக வேண்டும்; இந்த சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டும்” என்ற ஆழமான புரிதலோடு வாழ்பவர்.

தன்னுடைய திறமை, உழைப்பு, சம்பாதித்த அனைத்தையும் சமூக சமத்துவத்திற்காக அர்ப்பணித்து வருகிறார். ஒரு திரைப்பட இயக்குநராக இருந்தாலும், அவ்வப்போது மக்களுக்கான போராட்டக் களத்திலும், பண்பாட்டு தளத்திலும், சாதி ஒழிப்பு களத்திலும் உறுதியுடன் நிற்பவர் ரஞ்சித் அவர்கள் மட்டுமே.

சாதி இந்துக்கள் மற்றும் சாதி வெறியர்களின் கைக்கூலிகளும் சிலர் வேண்டுமென்றே விடுதலைச் சிறுத்தைகளோடு இயக்குனர் ரஞ்சித்தின் உறவை குலைக்க பல முரண்களை உருவாக்குகின்றனர். இருந்தாலும், டாக்டர் எழுச்சித் தமிழர் அவர்களின் மீது ரஞ்சித் அவர்கள் வெளிப்படுத்தும் அன்பு தொடர்ந்து நிலைத்திருக்கிறது.

ஒரு பேட்டியில் கூட, “அரசியல் களத்தில் எங்களுக்கான தலைவர் அண்ணன் திருமாவளவன் தான்; அவர் பின்னால் நாங்கள் இருப்போம்” என்று வெளிப்படையாக கூறியுள்ளார். ஆகவே, ரஞ்சித் போன்ற சமூகப் பொறுப்புள்ள நபர்களை நாம் கொண்டாடவில்லை என்றாலும், அவரின் செயல்களை பாராட்டுவது நமது கடமை.

பாராட்டுக்கு பஞ்சமான இந்த சமூகத்தில் நல்லவர்களை பாராட்டி, அவர்களை ஊக்கப்படுத்துவதில் நாம் முன்னிலையாக வேண்டும்.

இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் அவருக்குத் தெரிந்த மொழியில் ஒரு பிரச்சனையை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லி, சமூக சமத்துவத்திற்கும் மனித மன மாற்றத்திற்கும் உரையாடல்களை நிகழ்த்தி வருகிறார் — இது மிகவும் பாராட்டத்தக்கது. அவருக்கு வாழ்த்துக்கள்.

ஆனாலும், ரஞ்சித்தை மறந்து மாரி செல்வராஜை மட்டுமே பாராட்டுவது — பிரித்தாலும் சூழ்ச்சி எனலாம்.

ஓர் ஊடகவியலாளர் கேள்விக்கு, டாக்டர் எழுச்சித் தமிழர் அவர்கள் இப்படிப் பதிலளித்திருப்பார்:

> “ரஞ்சித் அவர்களும், மாரி செல்வராஜ் அவர்களும் எனது இரு கண்கள்.”

ஒரு தந்தையிடம் எந்த பிள்ளை பிடிக்கும் என்று கேட்டால், அவர் “இரண்டு பிள்ளைகளும் எனக்கு பிடிக்கும்” என்று சொல்வார். அதுபோலவே தலைவரும் கூறியிருப்பார். ஆகவே, சமூகத்தை நேசிப்பதில் தலைவரை போல நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள், மாரி செல்வராஜ் அவர்களைப் போல இன்னும் பலரை உருவாக்க வேண்டும்.

இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அதேபோல் சமூக நல்லிணக்கத்திற்கான உரையாடலை நிகழ்த்தி, பைசன் திரைப்படத்தை எடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

வாழ்த்துகளுடன்...
வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்