தோழர்.ரோகித் வெமுலா
இந்துத்துவ சாதி வெறிக்கு செத்து மடிந்த
தோழர் ரோகித் வெமுலாவுக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் 17.1.2017. இன்று 1:15 மணியளவில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் மு.அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது.
மாநில அமைப்பு செயலாளர் தி.ச.திருமார்பன் அவர்கள் வீர வணக்க நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.
நாடாளுமன்ற செயலாளர் பா.தாமரைச் செல்வன்,கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சா.முல்லைவேந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பால.புதியவன் ஆகியோர் கலந்து கொண்டு தோழர் ரோகித் வெமுலா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்,
இந்நிகழ்விற்கு கடலூர் புது நகர செயலாளர் மு.செந்தில், நகர பொருளாளர் கு.இம்மானுவேல், கடலூர் நகர துணை செயலாளர்கள் மாய. தேவன், சசிதரன், கடலூர் மைய நகர துணை செயலாளர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
நிகழ்ச்சிக்கு முன்னதாக முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் த.இளந்திரையன் அனைவரையும் வரவேற்றார்,
இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் கு.குருமூர்த்தி, த.புகழேந்தி,ப.தமிழரசன், மு.சரிதா, பா.பிரதீப், ப.ரா.முரளி, முற்போக்கு மாணவர் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏகா.சந்தோஷ் ,கடலூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்கள் சே.அருள்ஜோதி, கு.அறிவு தணிகைவேல், ராஜீவ் காந்தி , கடலூர் மைய ஒன்றிய செயலாளர் கலைஞர், கடலூர் ஒன்றிய துணை செயலாளர் பி.பிரகாஷ் , சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளர் அருன்பிரசாத்,மு. சின்ன துரை. மற்றும் மாவட்ட , நகர ஒன்றிய முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கடலூர் புது நகர துணை செயலாளர் மகி நன்றியுரை நிகழ்த்தினர்.
Comments
Post a Comment