என் புரிதல்
#என்_புரிதல்#
______________
நான் சொல்வது சரி,
நான் சொல்வதுதான் தீர்வு என்று உறுதியாக கூறமுடியாது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனித்தனியான ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும்.
அவரவர் சிந்தனைக்கு ஏற்றவாறு அறிவுக்கு எட்டியவாறு
அவர்களின் அனுபவங்களில் இருந்து ஒரே பிரச்சினையை பல்வேறு நோக்கத்தில் அனுகுவார்கள், தீர்வு சொல்வார்கள்,
#இது ஒரு புரிதலுக்காக,......
மாற்றுக் கருத்தை
முன் வைப்பதால், ஒரு விஷயத்தில் மாற்று பார்வை இருப்பதால்,
ஒருவர் மீது பொய்யான குற்றச்சாட்டு, வீண் பழி சுமத்துவதும், துரோகிப்பட்டம் கட்டுவதும், தனிமை படுத்த முயற்சிப்பதும், அவதூறுகளை பரப்புவதும் மிகப்பெரிய அய்யோக்கியதனமான செயல்.
நான் சொல்வதுதான் சரி என்றும் வாதிடவில்லை (அழுத்தம்)
ஜல்லிக்கட்டுவை ஆதரித்து பெரும் போராட்டம் நடக்கிறது என்பதற்காக நான் ஆதரிக்க மாட்டேன்.
இருக்கிற சமூக அமைப்பை அப்படியே என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை......
பாரம்பரியம் என்று சொல்லி பழமையை பாதுகாப்பது அல்ல, ஆதரிப்பது அல்ல எமது பணி,
என்பதே என் புரிதல்.
ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்கவேண்டும், பகுத்தறிவு கொண்டு ஆராயவேண்டும் என்பதே திருமாயிசம் என்பது என் புரிதல்
அண்ணன் திருமா அவர்கள் மேடைகளில் பலமுறை நமக்கு வகுப்பு எடுத்து இருக்கிறார் அதாவது
இந்த சமூகத்தில் தலைவர் பஞ்சம் இருக்கிறது ஒவ்வொருவரும் தலைவர்களாக உருவாக வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதற்கு பொருள் தனியாக கட்சி ஆரம்பித்து கொண்டு நீ ஒரு தலைவராக உருவாக வேண்டும் என்று பொருள் அல்ல
சமூகத்தில் நிலவும் அத்தனை பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான அறிவை பெற்று கொள், மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு செய், மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறை, அடக்குமுறைகளில் இருந்து விடுதலை செய்ய
தகுதியை, தலைமை பண்பை வளர்த்து கொள். இன்னொருவரை சார்ந்து வாழாதே என்பதே என் புரிதல்,
தனித்தன்மை இருக்கவேண்டும் என்பதே என் தெளிவு,
ஆக நான் கருத்து சொல்வேன்.
திருமாயிசம் என்பது யாரோடும் சேர்ந்து வாழலாம் எவரோடும் சார்ந்து வாழ்தல் கூடாது,
அப்படியென்றால் நமக்குக் தேவையான அனைத்தையும் பெற்றுகொள்ள போராடு
இவர் இருக்கிறார், அவர் பார்த்து கொள்வார்கள் என்று இருக்க கூடாது அது சார்ந்து வாழுதல் என்று பொருள்
மேலும் விவாதிப்போம்......
மு.அறிவுடைநம்பி
விசிக கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர்
Comments
Post a Comment