எயினர்கள் பறையர்களின் முன்னோர்கள். -ஏட்கர் தர்ஸ்டன்-

எயினர்கள் பறையர்களின் முன்னோர்கள்...

ஏட்கர் தர்ஸ்டன்
___________________
 
கொட்டு எனப்பொருள்படும் பறை என்ற சொல்லிலிருந்து பறையர் என்ற சொல் பிறந்ததாக த கால்டுவெல் கருதுகின்றனர். பறையருள் சிலர் திருமணம், சாவு , திருவிழா ஆகியவற்றின்போது பறை கொட்டுவதோடு அரசின் அறிவிப்புக்களைப் பறைகொட்டி  அறிவிக்கின்றனர். எனினும் இக் கருத்தை உடன்படாதவராக 1891 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கையில் திரு. எச்.ஸ்டுவர்ட் கூறியுள்ளவை வருமாறு:-
பறையர்களுள் ஒரு பிரிவினர் பறைகொட்டுகின்றனர். இத் தொழில் பறையருக்கு மட்டும் உரியதாக இல்லை. இன்று எண்ணிக்கையில் மிகுந்தவர்களாகவும் ஒரு காலத்தில் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருந்த சாதியாரின் பெயர் அவ்வப்பொழுது அவர்கள் இன்று பலசாதியாரோடு மேற்கொள்ளும் தொழிலின் அடிப்படையில் அமைந்தது என்பது ஒரு சிறிதும் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை.

கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நிகண்டான திவாகரத்தில் பறையர் என்ற சொல் காணப்படவில்லை. இன்றும் மலையாளத்தில் வழக்கில் உள்ளதான புலையன் என்ற சொல்லே அன்று இச்சாதியாரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது . சைவ சமய நாயன்மார்களுள் ஒருவரான நந்தன் சோழநாட்டைச் சேர்ந்தவனாயினும் பெரியபுராணக் கதைப்படி அவர் தன்னைப் புலையன் என்றே அழைத்துக் கொள்கின்றார். கிறித்தவ சகாப்தத்தில் முதல் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பழைய தமிழ் இலக்கியங்களுள் பறையன் என்ற சொல்வழக்கு இல்லை எனினும் எயினர் என்ற இச்சாதியாரைப் பற்றிய குறிப்புகள் பலவிடங்களில் இடம்பெற்றுள்ளன.

இவர்கள் அன்றைய சமூகத்தைச் சேர்ந்த மக்களுள் தனித்த இயல்பு வாய்ந்தவர்களாகக் காணப்படுவதோடு ஊர்களுள் மக்களிடையே வாழாமல் தங்களுக்கே உரித்தான தனித்த கோட்டைகளில் வாழ்ந்து வந்துள்ளனர், ஆம்பூர், வேலூர், ஆகியனவற்றை இவர்களுக்கு உரிய இத்தகைய கோட்டைகள் இருந்த இடங்களாகக் கூறுவர்.  எயினர்களான இவர்கள் பறையரின் மூதாதையராகலாம் " என 1901 கணக்கெடுப்பு அறிக்கையில் திரு . டபிள்யு . பிரான்சிஸ் குறிப்பிடுகின்றார்.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்