சேரி ஆதி மனிதனின் முதல் குடியிருப்பு

மனிதன் நாகரிக காலத்தை அடைந்தவுடன் வீடுகளை அமைத்து வாழ துவங்கிய காலத்தில் தோன்றிய  குடியிருப்புகளுக்கு பெயர் சேரியாகும். 

சேரியே மனிதனின் முதல் குடியிருப்பு பகுதி, மக்கள் தொகை அதிகரிப்பாலும், வாழ்வாதரத்திற்காவும் மனிதன் இடம்பெயர்வு காரணமாக பல சேரியில் இருந்து பிரிந்து பல பகுதிகளுக்கு சென்ற மனித குழுக்கள் அந்தந்த பகுதியில் அமைத்துக் கொண்ட குடியிருப்பு பகுதிகளுக்கும் சேரி என்றே அழைத்து கொண்டனர், இடத்திற்கு ஏற்றவாறு, நில வகைகளுக்கு ஏற்றவாறு, செய்யும் தொழில்களுக்கு ஏற்றவாறும், பெயர்களையும் இட்டுக் கொண்டனர், அப்படி வாழ்ந்த மனிதக் குழுக்கள் அதனை சேரி என்றும் பல பெயர்களையிட்டும் அழைத்துக் கொண்டனர்,  சேரிகளில் வாழ்பவர்கள் புதிதாக குடியேறும் பகுதிகளை குடியானவர்கள் வாழும் பகுதி என்றும் அழைத்தனர்.

சோழர்கள் காலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் குடியிருப்புகளுக்கு பெயர் சேரி என்கிற அடிப்படையிலேயே அழைக்கப்பட்டிருக்கிறது, குடியிருப்புகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றது அதில் செய்யும் தொழிலின் அடிப்படையில் தீண்டாச்சேரி என்றும் பல ஊர்கள் இருந்திருக்கிறது அந்த தீண்டாச்சேரிகளில் வாழ்ந்தவர்கள் பரையர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
தீண்டாச்சேரிகளில் வாழ்ந்தவர்கள் இன்று யார், அவர்கள் இப்போது எந்த சாதி பெயரில் அழைக்கிறார்கள் என்பதையும்   நீங்களே ஆய்வு செய்து கொள்ளுங்கள்.  

குருக்களாக, பூஜை செய்பவர்களாக ஜோசியம் சொல்வார்களாக, மறைகளை ஓதுவர்களாக இருக்கும் பரையர்களான அந்தணர்கள் வாழுந்த பகுதிகளை பார்ப்பன சேரி என்று அழைக்கப்பட்டது.

வடக்கிலிருந்து வந்த பிராமணர்களும் பூசை, மந்திரங்கள், யாகங்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதால்  அந்த வடக்கத்திய பிராமணர்களுக்கு ஏற்படுத்திய குடியிருப்புகளின் பெயர்களும்  பார்ப்பன சேரி என்றே அழைக்கப்பட்டது. இந்த பார்ப்பன சேரிகள் அனைத்தும் தெலுங்கர்கள் படையெடுப்பின் போது முழுவதுமாக தெலுங்கு பிராமணர்களே ஆக்கிரமித்துக் கொண்டார்கள், இதைப்போலவே மற்ற சேரிகளின் பெயர்களை மாற்றிக் கொண்டார்கள்.  

நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் பரையர்களை அனைத்து அதிகார தளத்திலிருந்து ஒதுக்குவதற்காக, மண்ணின் மைந்தர்களை சமூக இழிவு செய்யவதற்கு  பரையர்களை , பறையடிப்பவர்களாக பறையர்கள் என்று அழைத்து இழிவு செய்தனர். 

இசைத்தொழில் செய்பவர்களாக அப்போது இருந்தவர்கள் பெயர் முரசு பரையர் என்பதுதான் வரலாற்று உண்மை, ஒரு சமூகமே பறை அடிக்க முடியுமா ஒரே தொழில் ஈடுபட முடியுமா, ஆக நிலமும் ஆட்சியும் அதிகாரமும் பரையர்கள் கையில் இருந்ததால் அவர்களை ஒடுக்குவதற்காக, ஒதுக்குவதற்காக தீண்டா சாதியாக, சமூக அந்தஸ்தை குறைப்பதற்காக தெலுங்கர்கள், தெலுங்கு பிராமணர்கள் பரையர்களை இழிவு செய்து இருக்கிறார்கள் என்கின்ற வரலாற்று உண்மையும் இருக்கிறது.

மக்கள் வாழும் குடியிருப்புக்களை,  புரம், சேரி,பேட்டை, பாளையம், பாக்கம், பட்டினம், பதி, நகர்,  பூண்டி , அகரம், குடி, குறிச்சி, வேலி, பாடி, குப்பம், சாவடி, பட்டு, பட்டி, கோட்டம், கோட்டை , கிராமம், வலசு, மங்கலம், கோயில், பள்ளி, கரை, துறை, மலை, கானல், காடு, குளம், ஏரி, தோப்பு, நாடு, குடிசை, சத்திரம், சமுத்திரம் முதலிய பெயர்களால் நாம் அழைக்கிறோம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவை அனைத்தையும் அழைப்பதற்கு ஒரே பெயர் சேரி என்பதுதான், மக்கள் அனைவரும் சேரி என்றே  வழங்கும் வழக்கம் உள்ளது.  இன்று இவை அனைத்திற்கும் ஊர் என்று பயன்படுத்தப்படுகிறது, கிராமம் என்று பயன்படுத்தப்படுகிறது ஆக சேரி என்ற அளவுகோலில் அனைத்தையும் அழைத்துச் செல்ல நாம் இனி முற்படுவோம். 

உரையாடலை விரிவாக்குவோம்.

இவண்: 
மு.ஞா.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்