மாற்றுக் கருத்தும்தனித்தன்மையும் – ஒரு சமூகப் புரிதல்

நான் சொல்வதுதான் சரி,

நான் சொல்வதுதான் தீர்வு
என்று உறுதியாக கூற முடியாது என்பதே என் அடிப்படை நிலைப்பாடு.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும்
தனித்தனி சிந்தனை,
தனித்தனி அனுபவம்,
தனித்தனி பார்வை இருக்கிறது.

அதே ஒரு சமூகப் பிரச்சினையை,
ஒவ்வொருவரும்
தங்கள் அறிவுக்கு எட்டியவரை,
தங்கள் அனுபவத்தின் அடிப்படையில்,
பல்வேறு நோக்கங்களிலும் உத்திகளிலும் அணுகி,
தீர்வுகளை முன்வைப்பது இயல்பானது.
இது ஒரு புரிதலுக்காக மட்டுமே.

#மாற்றுக்_கருத்து_குற்றமல்ல

ஒரு விஷயத்தில் மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்காக,
மாற்றுப் பார்வை இருப்பதற்காக,

ஒருவர் மீது
பொய்யான குற்றச்சாட்டுகள் வைப்பதும்,
வீண் பழி சுமத்துவதும்,
துரோகி என்ற பட்டம் கட்டுவதும்,
தனிமைப்படுத்த முயற்சிப்பதும்,
அவதூறுகளை பரப்புவதும்

    மிகப்பெரிய அயோக்கியத்தனமான_செயல் என்பதே_என்_புரிதல்.

நான் சொல்வதுதான் சரி என்றும்
அதை மற்றவர்களுக்கு அழுத்தமாகத் திணிப்பதுமில்லை.

சமூக விவாதங்களில் தனிப்பட்ட நிலை

ஒரு விஷயத்தை ஆதரித்து
பெரும் போராட்டம் நடக்கிறது என்பதற்காக மட்டும்
அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் யாருக்கும் இல்லை.

இருக்கிற சமூக அமைப்பை
அப்படியே, கேள்வியின்றி
ஏற்றுக் கொள்ள முடியாது என்பதும்
ஒரு நியாயமான கருத்தே.

பாரம்பரியம் – பகுத்தறிவு –
பொறுப்பு

“பாரம்பரியம்” என்ற பெயரில்
பழமையை அப்படியே பாதுகாப்பது,
சனாதனத்தை ஆதரிப்பது
எமது சமூகப் பணி அல்ல
என்பதே என் புரிதல்.

ஒவ்வொருவருக்கும்

தனித்தன்மை இருக்க வேண்டும்

பகுத்தறிவுடன் ஆராயும் மனநிலை வளர வேண்டும்

இதுவே திருமாயிசம் என நான் புரிந்து கொண்டுள்ளேன்.

தலைமை பற்றிய தெளிவு

தலைவர் எழுச்சித்தமிழர் அண்ணன் திருமாவளவன் அவர்கள்
பல மேடைகளில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ள ஒரு கருத்து:

“இந்த சமூகத்தில் தலைவர் பஞ்சம் இருக்கிறது.
ஒவ்வொருவரும் தலைவர்களாக உருவாக வேண்டும்.”

இதன் பொருள்,
தனியாக கட்சி தொடங்கி
ஒருவராக தலைவராக மாற வேண்டும் என்பதல்ல.

மாறாக,

சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் அறிவை
பெறுதல்

மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

ஒடுக்குமுறை, அடக்குமுறை, அநீதிகளுக்கு எதிராக நிற்கும்
தகுதியையும் தலைமைப் பண்பையும் வளர்த்துக்கொள்ளுதல்

இன்னொருவரை சார்ந்து வாழாத நிலையை உருவாக்குதல்

இதுவே அதன் உண்மையான அர்த்தம் என்பதே என் புரிதல்.

தனித்தன்மை இருக்க வேண்டும் என்பதே என் தெளிவு.
அதனால் தான்
      #நான் என் கருத்தை வெளிப்படுத்துகிறேன்.

திருமாயிசம் என்பது
யாரோடும் சேர்ந்து வாழலாம்,
ஆனால் #எவரையும்_சார்ந்து வாழக்கூடாது.

“இவர் இருக்கிறார்,
அவர் பார்த்துக் கொள்வார்கள்”
என்ற மனநிலை
     சார்ந்து வாழ்தலின் வெளிப்பாடே.

அதற்குப் பதிலாக,
நமக்குத் தேவையான அனைத்தையும்
#நாமே_பெற்றுக்கொள்ள_போராட #வேண்டும்.

இதுவே
👉 என் புரிதல்.
ஞானம் மு.அறிவுடைநம்பி வழக்கறிஞர் 

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்