தமிழீழ இனப்படுகொலை, உலகத் தமிழர் எழுச்சி மற்றும் டாக்டர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அரசியல்– ஒரு வரலாற்றுச் சாட்சியும், அதற்கு எதிரான அரசியல் சதிகளும்…
சிங்கள பேரினவாத இலங்கை அரசு, தமிழீழத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் இனப்படுகொலை நடத்திக் கொண்டிருந்த காலகட்டம், தமிழ் இன வரலாற்றில் மறக்க முடியாத ஒரு இருண்ட அத்தியாயமாகும். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்ட அந்தச் சூழலில், உலக நாடுகள் பெரும்பாலும் மௌனமாகவே இருந்தன. மனித உரிமைகள், ஜனநாயகம், சர்வதேச நீதி ஆகியவை பேசப்பட்டபோதும், தமிழீழ மக்களின் வேதனைக்கு உரிய அரசியல் அழுத்தம் உருவாகவில்லை.
அத்தகைய சூழ்நிலையில், தமிழ் ஈழ மக்கள்மீது நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, டாக்டர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள், தன் உயிரைத் துச்சமாகக் கருதி, சாகும் வரை உண்ணாநோன்பு அறப்போராட்டத்தை மேற்கொண்டார். இது ஒரு கட்சி அரசியல் போராட்டமாக அல்ல ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் உரிமைக்காக எழுந்த நீதியின் குரலாகவே தமிழ்ச் சமூகத்தால் புரிந்து கொள்ளப்பட்டது.
இந்த அறப்போராட்டம், தமிழ்நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் எழுச்சியாக மாறியது. பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், தங்கள் வாழும் நாடுகளிலேயே வீதிகளில் திரண்டு, டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்களின் உருவம் பொறித்த படங்களை கையில் ஏந்தியபடி,
“அண்ணன் திருமாவளவன் அவர்களின் உயிரை காப்பாற்று,
இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்து”
என்று முழங்கியபடி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த உலகத் தமிழர் எழுச்சி, தமிழீழப் பிரச்சினை வெறும் ஒரு பிராந்திய அரசியல் விவகாரம் அல்ல, அது மனித உரிமை, இன அழிப்பு, அரசியல் பொறுப்பு ஆகியவற்றோடு தொடர்புடைய ஒரு உலகளாவிய பிரச்சினை என்பதை உலகத்திற்கு உணர்த்தியது. அதே நேரத்தில், உலகத் தமிழர்களுக்குள் அரசியல் ஒருங்கிணைப்பையும், இன உணர்வையும் புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றது.
அந்நேரத்திலேயே, இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தக் கோரி, தீயிட்டு உயிர் நீத்த தோழர் முத்துக்குமார்,
“என் சாவை அண்ணன் திருமாவளவன் அவர்களிடமும்,
அண்ணன் பிரபாகரன் அவர்களிடமும் சொல்லுங்கள்”
என்று கடிதம் எழுதி வைத்து, தன் உயிரை தமிழீழ மக்களுக்காக அர்ப்பணித்தார். இந்த தியாகம், தமிழீழ மக்களின் வேதனைக்கு எதிரான உலகத் தமிழர்களின் மனச்சாட்சியை உலுக்கிய ஒரு வரலாற்றுச் சம்பவமாக அமைந்தது.
இந்தப் பின்னணியில், தமிழ்நாட்டிலும் ஒரு முக்கியமான அரசியல் மாற்றம் உருவானது. இளைய தலைமுறையினர், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர், சாதி வேறுபாடுகளைத் தாண்டி, மொழி மற்றும் இன அடிப்படையில், அண்ணன் திருமாவளவன் அவர்களை அரசியல் ரீதியாக ஆதரிக்கத் தொடங்கினர். இதற்கு முன், தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மாபெரும் அரசியல் ஆளுமை தமிழ்நாட்டில் டாக்டர் கலைஞர் மட்டுமே என்ற பொதுப் பார்வை நிலவிய நிலையில், இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அந்த நிலை மாறத் தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக, டாக்டர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள், தமிழ்நாட்டிலும் உலகத் தமிழர்கள் மத்தியிலும், தமிழ் இன அரசியலின் முக்கிய மைய ஆளுமையாக அடையாளம் காணப்பட்டார். இது, தமிழ் தேசிய அரசியல் ஒரு புதிய திசையில் நகரத் தொடங்கியதற்கான முக்கியக் குறியீடாக அமைந்தது.
இந்த வளர்ச்சியையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஏற்பட்ட நன்மதிப்பு, புகழ், மக்கள் செல்வாக்கையும் சரியாகப் புரிந்து கொண்ட தமிழின விரோதிகள், இந்துத்துவ அரசியல்வாதிகள், மற்றும் திராவிட அரசியல் சக்திகள், தங்களுக்கு ஆதரவான பல தமிழ் அமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கி, அவற்றுக்கு நிதி, வேலைத் திட்டங்கள் உள்ளிட்ட ஆதரவுகளை வழங்கி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு உருவான மக்கள் ஆதரவை, தமிழின ஒற்றுமையை சீர்குலைக்க செய்தனர், சாதி அடிப்படையிலான முரண்பாடுகளை புதுபித்தனர்,
தமிழ் இன உணர்வால் தமிழ்நாட்டில் உருவான அரசியல் மாற்றத்தை உடைத்தெடுக்கும் நோக்கில், தலைவர் திருமாவளவன் அவர்மீது பல அவதூறுகள் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டன, விடுதலைச் சிறுத்தைகளை ஆதரிப்பது போல நடித்து உள்ளிருந்து செயல்பட்டதும் இதே அரசியல் சக்திகளே என்றும் பலரால் கூறப்படுகிறது. இது தனிநபர் அரசியல் தாக்குதல் அல்ல, தமிழ் இன அரசியலை திசைதிருப்பும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கட்டமைக்கப்பட்ட முயற்சியாகவே இதை நாம் பார்க்கின்றோம். தமிழின ஒற்றுமையை சிதைத்து தலித் அல்லாத கூட்டமைப்பு என்று உருவாக்குகின்ற நிலை தமிழ்நாட்டில் உருவாகின அந்த அளவிற்கு தமிழினத்தை கூறு போட்டார்கள் ஒற்றுமையை சிதைத்தார்கள்.
மேலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகத் திருப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, அதன் தொடர்ச்சியாக விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக பல அமைப்புகள் புற்றீசல் போல உருவாக்கப்பட்டது, அவற்றில் ஒன்றாக நாம் தமிழர் கட்சி உருவாக்கப்பட்டது என்பது, தமிழ் அரசியல் களத்தில் பரவலாக விவாதிக்கப்படும் ஒரு கருத்தாக உள்ளது.
தொடக்கக் காலத்தில், சீமான் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார், தமிழினம் ஒன்றுபட்டு விடக்கூடாது அல்லவா ஆக அந்த முயற்சிகள் குறிப்பிட்ட அரசியல் செயல்திட்டத்தின் அடிப்படையில் தடுக்கப்பட்டது, இந்த முழு அரசியல் பின்னணியோடு இணைத்தே புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்ற வாதமும் எம்மால் முன்வைக்கப்படுகிறது.
இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து நோக்கும்போது, தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான உலகத் தமிழர் எழுச்சி, டாக்டர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் அறப்போராட்டம், அதற்கு எதிராக உருவாக்கப்பட்ட அரசியல் தடைகள் ஆகியவை அனைத்தும் ஒரே அரசியல் வரலாற்றின் வெவ்வேறு அத்தியாயங்களாகவே பார்க்கப்பட வேண்டும்.
இந்த வரலாற்றை மறப்பதும், மறைப்பதும், திரித்து விளக்குவதும், தமிழ் இன அரசியலுக்கே பெரும் இழப்பாகும். தமிழீழ மக்களுக்காக உயிர் தந்த தோழர் முத்துக்குமாரின் தியாகமும், அதே மக்களுக்காக உயிரையே பணையமாக வைத்து போராடிய டாக்டர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் அரசியல் நிலைப்பாடும், தமிழ்ச் சமூகத்தின் நினைவிலும் அரசியல் மனச்சாட்சியிலும் என்றும் நிலைத்திருக்க வேண்டியவை.
தமிழீழ மக்களுக்காக உயிர் தந்த
தோழர் முத்துக்குமாருக்கு எமது
Comments
Post a Comment