சமூக ஊடகங்களில் செயல்படும் தலித் இளைஞர்களே – ஒரு அரசியல் எச்சரிக்கை
தேவையில்லாத கவனச் சிதறல், திட்டமிட்ட திசைதிருப்பல் அரசியலில் உங்கள் ஆற்றலையும் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்.
#நமக்கான_அரசியலை_மட்டுமே #பேசுங்கள்.
சீமான் எதிர்ப்பு, ஆளுநர் எதிர்ப்பு போன்ற விவாதங்களில் சிக்கி,
வேங்கை வயல் போன்ற தலித் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மடைமாற்றப்படுவதை நிறுத்துங்கள்.
மாற்றுக் கருத்து பேசுபவர்களை, நமக்கான பிரச்சினைகளை அழுத்தமாக முன்வைப்பவர்களை
“துரோகி” என முத்திரை குத்தாதீர்கள்.
அவர்கள் பேசட்டும்.
திராவிட இயக்கங்களை விடவும், நமக்கான அரசியலை அவர்கள் பேசுவார்கள் என்றால்,
அவர்கள் எவ்வளவோ மேலானவர்கள் – இதை உணருங்கள்.
மக்களின் உண்மையான அடிப்படை பிரச்சினைகள் மேலெழும்ப விடாமல்,
மக்களை குழப்பி, ஏமாற்றி, சிந்திக்க விடாமல்
#செயற்கையாக_போலியான #பிரச்சினைகள் #உருவாக்கப்படுகின்றன.
ஊடகங்களின் மூலம் அவை வலுக்கட்டாயமாக மக்களிடம் திணிக்கப்படுகின்றன.
இதன் நோக்கம் – #மக்களுக்கான #அரசியலை_மறக்கடிப்பதே.
திராவிட அரசியல் முற்போக்கானது போல தோற்றம் தருகிறது.
நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய, தமிழீழ ஆதரவு அரசியல்
தமிழர் நலனுக்காக தீவிரமாக செயல்படுவது போல தோன்றுகிறது.
ஆனால் இந்த இரண்டு அரசியல்களையும் நடத்துவது இந்துத்துவ சக்திகளே என்பதே உண்மை.
பாட்டாளி வர்க்க அரசியல்,
திராவிட அரசியல்,
தமிழ் தேசிய அரசியல்,
தலித் அரசியல் என
பல முகங்களில் போலியான அரசியல் பேசப்பட்டு,
உண்மையான இடதுசாரி அரசியல்,
அம்பேத்கரிய அரசியல்,
தலித் விடுதலை அரசியல்
வலுப்பெறக் கூடாது என்பதே அவர்களின் திட்டம்.
இந்த நாட்டை பல பெயர்களில், பல முகங்களில்,
இந்துத்துவ சக்திகளே தொடர்ந்து ஆள வேண்டும் என்பதற்காக
பல அமைப்புகளை அவர்கள் உருவாக்கி நடத்துகிறார்கள்.
அதே நேரத்தில், மற்ற அமைப்புகளுக்குள்ளும் ஊடுருவி
தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சிக்கும்,
திராவிட அரசியல்வாதிகளுக்கும் நடக்கும் சண்டை போல காட்டப்படுவது
ஒரு திட்டமிட்ட நாடகமே.
இந்த கதை, வசனம், நிகழ்ச்சி நிரல்கள்
மக்களின் பிரச்சினைகளை மறைக்க உருவாக்கப்படுகின்றன.
இத்தகைய போலி சண்டைகளில் நாம் தலையிடக்கூடாது.
#நமக்கான அரசியலை மட்டுமே பேச வேண்டும்.
#நமது கொள்கை – கோட்பாட்டு அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டும்.
#நமக்கான வேலைத் திட்டத்தில் உறுதியாக பணியாற்ற வேண்டும்.
ஒவ்வொரு பிரச்சினையின் பின்னாலும் வால் பிடித்துக் கொண்டு ஓட வேண்டாம்.
தேவையில்லாமல் எதிரிகளின் அரசியலை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் கூடாது.
நமக்கான அரசியலை வலிமைப்படுத்துவோம்.
சிந்தித்து செயல்படுவோம்.
இவண்:-
ஞானம் மு.அறிவுடைநம்பி
வழக்கறிஞர்
கடலூர்-1
கடந்த ஆண்டு இதே நாளில் சமூக ஊடக பதிவு 1 years ago…
on this days
Comments
Post a Comment