அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

உடலால் நம்மிடையே இல்லாவிட்டாலும்,
சிந்தனையாலும் செயலாலும் என்றும் உயிருடன் இருப்பவர்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டின் முன்னாள் தலைவர், வழக்கறிஞர், #அண்ணன் #ஆம்ஸ்ட்ராங் 
இன்று அவரது பிறந்தநாள்.

மரணம் அவரது உடலை மட்டுமே எடுத்துச் சென்றது,
சாதி ஒழிப்பு, சமூக நீதி, சுயமரியாதை, மனித நேயம், துணிச்சல்,
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் குரல்-
இவையனைத்தையும் அது எடுக்க முடியவில்லை.

17 வயதில் இருந்து அண்ணன் #எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையை ஏற்று  விடுதலைச் சிறுத்தைகளின் போராட்ட களத்தில் நின்று கொண்டிருக்கும் என்னை அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு தெரிந்தது, அவரை நான் நேரில் கூட பார்த்ததில்லை இருப்பினும் என் மீது  காவல்துறையும் அரசும் தொடுக்கும் அடக்குமுறை அறிந்து, நான் படித்த படிப்பிற்கான தொழிலை செய்ய விடாமல் தடுத்ததை செய்வதற்காக, பல ஆண்டுகளாக நீடித்த அரச பயங்கரவாதப் பிரச்சினையில், தலையிட்டு
என்னை கட்சி அடையாளங்களால் அளவிடாமல், கோட்பாட்டு வழியில்
மனிதநேயத்தால் அணுகி

“ஏன் இவ்வளவு நாட்களாக சொல்லவில்லை?” என்று அன்போடு கேட்டு, என்னை வழக்கறிஞராக அடையாளப்படுத்தியது அண்ணன் #ஆம்ஸ்ட்ராங் அவர்கள்.

ஒரே நாளில் மட்டும் பத்துமுறைக்கும்  கும்  மேல் என்னிடம் பேசி
பணி முடியும் வரை வழிகாட்டி நின்ற அண்ணனின் உயர்ந்த குணம்
எப்போதும் நினைவில் நிற்கும்.

“இது என் கடமை—நீங்கள் சமூகத்திற்கு தொடர்ந்து மேலும் பலமாக சிறுத்தையாய் போராடுங்கள்”
என்ற அந்த வார்த்தைகளே அவரது அரசியல் உயரமும்
மனிதப் பண்பும் சொல்லும் சாட்சி.

அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் இன்று உடலற்றாலும்
நினைவுகளில், போராட்டங்களில்,
சமத்துவ அரசியலில் உயிரோடு தொடர்கிறது.
உடலால் பிரிந்தாலும்
உணர்வால் என்றும் நம்மோடு.
பிறந்தநாள் நினைவு வணக்கம்,

மிகச்சிறந்த மனிதர். சமூகப் பற்று கொண்ட எமது உறவு. 
பிறந்தநாள் நல்வாழ்த்துகள், அண்ணா! 🎊

ஞானம் மு.அறிவுடைநம்பி
 வழக்கறிஞர் 

கடலூர் முன்னாள் மாவட்ட செயலாளர் 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்