தமிழினத்தின் மீது நடத்தப்படும் மறைமுக போர்.
இந்த உலகத்தையே தீர்மானிப்பவர்கள், உலகத்தை ஆளுபவர்கள் மற்றும் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தினர்கள் தான் தமிழர்களுக்கு பெரும் விரோதிகளாக இருக்கின்றனர்,
தமிழர்களுக்கென்று இந்த பூமி பந்தில் சொந்த நாடு இருக்கக் கூடாது என்பதற்காக இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் சதி செய்து வருகிறார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.
ஆங்கிலேயர்கள் நினைத்திருந்தால் தமிழர்களுக்கு என்று ஒர் தனி சுதந்திர நாட்டை கொடுத்திருக்கலாம். ஆனால், கொடுக்காமல் வரலாற்று அடிப்படையில் பல சதிகளை செய்திருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் எப்போதுமே தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இருக்கக் கூடாது என்பதுதான் பிற இனத்தவர்களில் எல்லா காலங்களிலுமான பெரும் செயல் திட்டம்.
இந்த நவீன நாகரீக உலகில் ஒரு இனத்தை அழிப்பதற்காக, ஒரு இனத்தின் வரலாற்றை, அடையாளத்தை,மொழியை கலாச்சாரத்தை, பண்பாட்டை அழித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே இத்தகைய உளவியல் வன்முறையை மறைமுகமாக தமிழ் இனத்தின் மீது வல்லரசு நாடுகளும், இந்தியாவில் உள்ள பிற இனத்தின் ஆளும் வர்க்கங்களும் மறைமுக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நாம் எப்போது அறியப் போகின்றோம்?
ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் பல நாடுகள் இருந்தன, அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த சிறிய இனக்குழுக்களுக்கு செந்தமான நாட்டை கூட அவர்களுக்கே கொடுத்து சென்றனர்.
இந்த உலகத்தில் மிக தொன்மையான இனமான தமிழர்களுக்கு, பல சிறப்பு மிகு வரலாற்றுக்குறியவர்களான தமிழர்களுக்கு மட்டுமே கைப்பிடி மண்ணளவு கூட சொந்தமாக கொடுத்துச் செல்லவில்லை என்பது தான் வரலாற்று உண்மை.
தமிழ்நாட்டில் இருந்து கடல் கடந்து சென்று பல நாடுகளை ஆட்சி செய்த இனம் தமிழினம் ஆகும்.
இந்தியாவில் பல பகுதிகளை ஆட்சி செய்த தமிழினத்திற்கு, திட்டமிட்டு தமிழ்நாட்டை கூட தமிழர்களுக்கென்று சொந்த நாடாக கொடுக்காமல், தமிழர்களை, தமிழ்நாட்டை இந்தியத்தில் அடக்கி அடிமைப்படுத்தி சென்றனர், தமிழர்களுக்கும் அப்படி தனி ஆட்சி செய்ய அரசியல் கருத்தியல் நிலைத்து இல்லாததால் மேலும் அடிமைப்பட்டு நிற்கிறோம்.
இதனால் உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் உரிமைக்காக நாம் குரல் கொடுக்க முடியவில்லை, நமக்காகவும் நாம் எதையும் பாதுகாத்துக் கொள்ளவும் முடியவில்லை.
இதற்குப் பின்னால் ஒரு பெரும் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. ஆம், பரை(றை)யறை ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பது போல் தமிழர்களையும் உலகம் முழுவதும் உள்ளவர்கள் எதிர்க்கிறார்கள் என்பது தான் உண்மை.
வெள்ளைக்காரனின் வணிக வெறிக்கு பலியாகி வறுமையின் காரணமாக, சாதிய அடக்கு முறையின் காரணமாக, பொருளாதார ரீதியாக மேல் எழுவதற்காக இலங்கைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து தோட்ட தொழிலாளர்களாக தமிழர்கள் சென்றனர், அதுபோல பினாங்கு இன்றைய மலேசியா,பர்மா இன்றய மியன்மார் போன்ற நாடுகளுக்கும் சென்றனர்,
அப்போது இலங்கையில் இருந்த இந்தியாவுக்கான தூதரகத்தில் தமிழர்கள் தமிழ்நாட்டில் எந்த ஊரில் இருந்து, எந்த கிராமத்திலிருந்து, எந்த ஆண்டு இலங்கைக்கு வந்திருக்கிறார்கள், இலங்கையில் அவர்களது பிள்ளைகள் எங்கே பிறந்திருக்கிறார்கள், இலங்கைக்கு வந்தவர்கள் எங்கே இறந்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் யார்? எப்போது இலங்கை வந்தார்கள், எந்தெந்த எஸ்டேட்டில் அவர்கள் யார், யார் வசிக்கிறார்கள் என்கின்ற அனைத்து விபரங்களும், அவர்களது குடும்ப விவரங்களையும் மிகத் துல்லியமாக பதிவு செய்து வந்தனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர், இன்னும் ஆழமான புள்ளி விவரங்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தமிழ்நாட்டில் இருந்து சென்றிருந்த தமிழர்கள் குறித்து பதிவு செய்து வைத்திருந்தனர், இதை போல மலேசியா பர்மா ஆகிய நாடுகளிலும் பதிவு செய்து வைத்தனர்.
இதன் நோக்கம் இந்தியாவிலிருந்து சென்ற தமிழர்களுடைய உரிமையை இந்தியா பாதுகாக்க அல்ல, தமிழர்களின் நலனுக்காகவும் அல்ல, மாறாக தமிழர்கள் விரோதத்துடன் அவர்களுக்கு எதிராக சதி செய்வதற்காகத் தான் இந்திய தூதரகங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பதிவு செய்யப்பட்டன என்பதே உண்மை, உதாரணமாக.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் அப்போது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையாக இருந்தனர்,
சிங்கள வாக்காளர்களுக்கு நிகராக தமிழர்களும் இருந்தனர், ஆட்சியை நடத்த வேண்டும் என்றால் தமிழர்கள் இல்லாமல் ஆட்சியே நடத்த முடியாது என்கின்ற நிலை இலங்கையில் உருவாயின, அதைப் போல பர்மாவிலும், மலேசியாவிலும் ஆட்சி அதிகாரத்தில் தமிழர்கள் இருந்தனர், அந்த நாட்டின் அரசை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவாகினர்.
தமிழர்கள் அதிகார பலம் வாய்ந்தவர்களாக உலகத்தில் உருவாக்கிக் கொண்டிருப்பதை அறிந்தார்கள், உலக வல்லரசுகள் துணையோடு இந்தியா தனது சதித்திட்டத்தை தீட்டியது இந்தியாவின் திட்டத்தின் படி இலங்கையில் சிங்களர்கள் செயல்பட்டார்கள்.
அதன்படி இந்தியாவில் இருந்து தோட்ட தொழிலாளராகச் சென்றிருந்த மக்களின் வாக்குரிமைகளை சிங்களர்கள் பறித்தார்கள். இதனை இந்தியா வேடிக்கை பார்த்தது, சிங்களர்கள் தமிழர்களை நாடாளுமன்றத்தில் சிறுபான்மையாக மாற்றினார்கள்.
ஆனாலும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் இலங்கையில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் பெருகிவிட்டார்கள். எப்படி இருப்பினும் ஈழத் தமிழர்களும், இந்திய வம்சாவழி தமிழர்களான மலையக தோட்டத் தொழிலாளர்களும் ஒன்று இணைந்து இலங்கையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக எப்படியும் உருவாகி விடுவார்கள், என்பதை இந்தியா உணர்ந்து,
இந்திய சிங்கள அரசு இணைந்து பூர்வீக தமிழர்கள் என்றும் இந்திய தமிழர்கள் என்றும் பல முரண்பாடுகளை, அரசியல் பிரிவினைகளை இலங்கையில் உருவாக்கியது, அதனால் இந்தியாவிலிருந்து தோட்ட தொழிலாளராக இலங்கைக்கு சென்றிருக்கின்ற தமிழர்களை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப சிங்கள அரசு முடிவு செய்தது அதனால் அவர்களின் வாக்குரிமையை பறித்தது நல்லது செய்வதைபோல இலங்கையில் தமிழர்களை சிறுபான்மைகளாக்க இந்தியாவும் 5 லட்சம் மக்களை விருப்பம் இல்லாமல் தங்களது சொந்த ஊருக்கே வரும்படி சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் திரும்ப அழைத்துக் கொண்டது,
அதே நேரத்தில் பர்மாவில் இருந்தும் தமிழர்களை இந்தியாவிற்கு வரும்படி அழைத்துக் கொண்டனர், பினாங்கில் இருந்தும் வரும்படி அழைத்துக் கொண்டனர்,
தமிழர்கள் சர்வதேச அளவில் அரசியல் செல்வாக்கு உயரக்கூடாது அதன் மூலம் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு உருவாகக் கூடது என்பதற்காக உலகத்தை ஆளும் சக்தியினர், இந்தியாவின ஆளும் வர்கத்தினர் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிரான சதிகளை செய்திருக்கிறார்கள்.
தமிழுக்கான நீதியை, தமிழருக்கான உரிமையை உலக அரங்கில் பேச முடியாத அளவிற்கு அரசியல் சதி செய்து இருக்கிறார்கள்,
தமிழர்கள் ஒரு பொருட்டே இல்லாத நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், பிற மொழி இனத்தவர்கள் 10 லட்சம் பேர் உள்ள மக்களுக்கு கூட ஒரு நாடு இருக்க செய்திருக்கிறார்கள் தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த சதி, பல வரலாற்று தகவல்கள் குறித்து விவரிக்க முடியும் ஆனால் நீண்ட நெடிய பதிவாக அமையும் என்பதால் நான் சுருக்கியே பதிவு செய்கிறேன்.
தமிழனின் பெரும் பகையை உணர்ந்தேன், தெரிந்தேன், எமது வரலாற்றை தேடினேன், அதில் சிக்கி தவித்த மக்களின் வலிகளை நான் உணர்ந்து ஏற்றிக் கொண்டேன், வலிக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் ஆறரை கோடி தமிழர்கள் இருக்கிறோம், தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் குறைந்தது 15 கோடி முதல் 20 கோடி வரை தமிழர்கள் இருப்போம், ஆனால் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை.
உலகத்தில் சிறிய இன குழுக்களுக்கு கூட நாடு இருக்கிறது. ஆனால் தமிழனுக்கு மட்டுமே நாடு இல்லை, இதன் வரலாற்று பின்னணியை ஆராய்ந்தால் திராவிடமும், இந்தியமும் தான் தமிழனின் பெரும் பகையாக தெரிகிறது.
ஏகாதிபத்திய வெறியுடன் தான் ஒவ்வொரு அரசியல் கோட்பாடுகளும் உருவாக்கப்படுகிறது என்பதை நம்மால் உணர முடியவில்லை,
எல்லா இனத்தவர்களையும் ஒரே இனத்தவர் ஆள்வதும், ஒரு இனத்தவரின் வரலாற்று அடிப்படையிலான நிலப்பரப்பை, இன்னொரு இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து ஆளுமை செலுத்துவது, சுரண்டலுக்காக மட்டுமல்ல ஒரு இனத்தின் அனைத்து அடையாளங்களையும் அழித்து, ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டு, கலாச்சாரம், மொழி அனைத்தையும் நிறுவுவதற்காகத்தான், ஒடுக்குமுறை இன அழிப்பு என்பது மறைமுகமாகத்தான் நடக்கிறது,
எதிர்ப்பும், அழிப்பும், வீழ்த்துவதும் இப்போது மறைமுகமாகவே நடக்கிறது. அதாவது, ஒரு இனத்திற்கு அல்லது ஒருவருக்கு தெரியாமல் அவரை வீழ்த்துவது அல்லது அடிமைப்படுத்துவது அல்லது அவரது மொழி இன வரலாற்றை, அடையாளத்தை அழிப்பது என்பது தான் இந்த நூற்றாண்டின் மாபெரும் அரசியல். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது நமது சிந்தனையில் ஊறி கிடக்க வேண்டும். அதனை வன்மையாக எதிர்க்க வேண்டும்.
இவன்:
ஞானம் மு.அறிவுடைநம்பி
வழக்கறிஞர்
தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
Comments
Post a Comment