மனித நேயம் ,அறிவியல் சிந்தனைஇவையே ஒரு சமூகத்தின் உண்மையான முன்னேற்றத்தின் அடித்தளம்.

பிற்போக்கான பண்பாட்டு பழக்கவழக்கங்கள்,
மூடநம்பிக்கையால் ஊட்டப்பட்ட அறிவியல் அற்ற மதநம்பிக்கைகள்,
புராணங்கள், கற்பனைக் கதைகள்—
இவைகளில் மூழ்கி சனாதனச் சிந்தனையில் திளைத்து வாழும் சமூக அமைப்பில்,
வாழ்வாதாரத்திற்காக மனப்பாடக் கல்வி பயின்று,
நல்ல வேலைக்காகப் போட்டித் தேர்வுகள் எழுதித் தேர்ச்சி பெற்று
அதிகாரியாக உருவாகியிருப்பவனும்,
ஆய்வுப் பட்டங்கள் பெற்றிருப்பவனும்,
அறிவியல்–மருத்துவம்–தொழில்நுட்பம்–விஞ்ஞானம் ஆகியவற்றை
மனப்பாட முறையில் கற்றிருப்பவனும்
நாட்டின் உண்மையான முன்னேற்றத்திற்கு ஒன்றுக்கும் உதவாதவன் தான்.

இவர்களால் அதிகபட்சமாக
வரி வசூல் செய்து அரசையும் அரசாங்கத்தையும் நடத்த முடியும்
ஆனால் இந்த நாட்டை எந்தத் துறையிலும் முன்னேற்ற முடியாது.

மனிதனை மனிதன் எனப் பார்க்காத சிந்தனை
இந்த அறிவுக் கெட்ட கூட்டம் தான்—
“நான் நெருப்பில் இருந்து பிறந்தேன்” என்கிறது,
“தலையில் இருந்து பிறந்தவன்” என்று நம்புகிறது,
“மார்பில் இருந்து வந்தவன்” என்று பீற்றிக்கொள்கிறது,
“கால் பாதத்தில் இருந்து பிறந்தவன்” என்று மனிதனை இழிவுபடுத்துகிறது.

மனிதனுக்கு மனிதன் வேறுபாடு பார்க்கும்
இத்தகைய பண்பாட்டு பழக்கவழக்கங்கள் இருக்கும் போது,
இவர்கள் எப்படி மக்களுக்காகச் செயல்பட முடியும்?
எப்படி ஒரு மேம்பட்ட நாட்டை கட்டி எழுப்ப முடியும்?

அறிவியல் முன்னேற்றம்  இவர்களால் சாத்தியமா?
விஞ்ஞானம், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற துறைகளில்
எந்தக் கண்டுபிடிப்பிலும்
இத்தகைய சனாதனவாதிகளால்
முன்னேற்றத்தை எட்டவே முடியாது.

👉 யாராவது கண்டுபிடித்து வைத்தால்
👉 அதை பயன்படுத்தலாம்,
👉 அதை உற்பத்தி செய்யலாம்,
அவ்வளவுதான்.

புதிய சிந்தனை இல்லை, மனித நேயம் இல்லை,
அறிவியல் மனப்பான்மை இல்லை.
அம்பேத்கரியம் – மனிதநேயத்தின் அடித்தளம்
இந்தியாவில் அம்பேத்கரியலை ஏற்றவர்கள்,
காட்டுமிராண்டித் தனத்தை திருத்துவதற்காகவே
ஒவ்வொரு மனிதனும்
மனித நேயத்துடன்,
சகோதரத்துவத்துடன்
வாழ வேண்டும் என்று போராடி வருகின்றார்கள்.
இந்த மண்ணில்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 30 ஆண்டுகளுக்கும் மேலாக
மனித நேயம் வளர்க்கப் போராடி வருகிறார்கள்.

புராண நம்பிக்கையும் மனித விரோதமும்
ஆனால் மறுபுறம்—
“நெருப்பில் இருந்து பிறந்தேன்”
“மார்பில் இருந்து வந்தேன்”
என்று புராணங்களை நம்பிக்கொண்டே,
மனிதனை மனிதன் ஆதிக்கம் செய்கிறான்
மூடநம்பிக்கையை வளர்க்கிறான்
மனித உறவுகளைச் சிதைக்கிறான்.

👉 அடிப்படையில் மனித நேயம் இல்லை
👉 அறிவியல் விழிப்புணர்வு இல்லை
என்றால்,
எதைப் படித்து என்ன சாதிக்கப் போகிறது இந்த சமூகம்?

மனிதனை மனிதனாக மதிக்காத சிந்தனையுடன்,
அறிவியலை மறுக்கும் மனப்பான்மையுடன்,
புராணக் கற்பனைகளில் மூழ்கியபடி, எந்த எதிர்காலத்தை நாம் கட்டி எழுப்பப் போகிறோம்?
மனித நேயம் ,அறிவியல் சிந்தனை
இவையே ஒரு சமூகத்தின் உண்மையான முன்னேற்றத்தின் அடித்தளம்.
இவண்:-
வழக்கறிஞர் ஞானம் மு.அறிவுடைநம்பி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்