போராளியின் வரலாறு. 2
போராளியின் வரலாறு. 2
நாட்டின் சுதந்திரம் அடையும் போது அந்த போராளியின் வயது 10, அவரின் பதினெட்டாவது வயதில் ஆதிக்கவாதிகளை எதிர்த்து தொழிலாளர்களுக்காக, அடிமையில் உழன்ற அந்த மக்களுக்காக அடிமை விலங்கொடிக்க களத்தில் இரங்கிய அந்த போராளியின் காலில் ஆதிக்க வாதிகள் திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டு படுகாயம் படுத்தினார்கள், அப்பெரும் ஆபத்தி்ல் இருந்து தப்பித்து அவரது காலில் இருந்த துப்பாக்கி குண்டை நாட்டு வைத்திய முறையில் எடுத்து, சிகிச்சை எடுத்து கொண்டார், அவர் சாகும் வரை கொஞ்சம் கால் தாங்கிய நிலையிலேயே இருந்து இறந்தார், அந்த போராளி இறக்கும் தருவாயில் இது குறித்து அவரது மனைவியும் அவர் உடன் பிறந்தவர்கள் சொல்லியே அவர்களது பிள்ளைகளுக்கு தெரியும்.
அந்த உழைக்கும் தொழிலாளர் பூர்வகுடி தமிழர்களுக்கு கொடுத்த உழைப்பையும் தியாகத்தையும் மறைத்து வாழ்ந்தார், அவர் இறந்த பிறகு இப்போது வெளியே வருகிறது, உரியவர்கள் அனுமதியுடன் அவர் குறித்த வரலாறு வெளி வரும்.
வெளியே எங்கேயும் எங்களுக்கு முன் மாதிரிகள் தேட வேண்டிய அவசியம் இல்லை பூர்வகுடியிலே பல ஆளுமைகள் இருந்தனர், இருக்கின்றனர்...
தொடரும் வரலாறு
Comments
Post a Comment