பரையர்களின் பங்காளி முறையா தமிழ் பிராமணர்கள்...?

#பரையர்களின்_பங்காளி_முறையா #தமிழ்_பிராமணர்கள்...?

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பறையர்கள் பற்றித் திரு . எப்.ஆர்.ஹெமிங்வே ஆய்வு செய்த  புராணம் 

இவர்கள் தங்கள் தோற்றம் பற்றி மிக உயர்ந்ததான எண்ணம் உடையவர்களாக உள்ளனர். 

சால சாம்பவன் என்ற பிராமணப் புரோகிதன் வழியில் வந்தவர்கள் என தெரிவிக்கிறார்கள். ஒருமுறை அவன் சிவன் கோயிலில் மாட்டிறைச்சியினைப் படைத்து வழிபாடு நடத்துகையில் ஒரு நாள் இறைச்சியின் ஒரு பகுதியினைக் கருவுற்றிருக்கும் தன் மனைவிக்காக மறைத்து வைத்த காரணத்திற்காகப் பறையனாகும்படி சபிக்கப்பட்டவனானான். கடவுள் அவனுக்கு பதிலாக அவன் தம்பியைப்   பணி செய்யும்படி அமர்த்தினார். அந்த தம்பியின் வழி வந்தவர்கள் தான் இன்றை தமிழ் பிராமணர்கள் இதன் அடிப்படையில் பிராமணர்களைப் பறையர்கள் தங்கள் பங்காளிகள் எனக் கூறுகிறார்கள், இதன் காரணமாக இவர்கள் தங்கள் திருமணத்தின்போதும் சாவுச் சடங்கின்போதும் பூணூல் அணிந்து கொள்கின்றனர். 

கிராம தேவதைகளின் திருவிழாக்களின் போது இவர்கள் தங்கள் சாதியினைப் பின்வருமாறு தெரிவிப்பார்கள்,  பறையர்களே முதன்முதல் உலகில் தோன்றியவர்கள். முதன்முதல் பூணூலணிந்து கொண்டவர்களும் பறையர்களே. சமூகத்தில் மிக உயர்ந்தவர்கள். சாதிகளின் வேறுபாடுகள் உணர்ந்தவர்கள். பெரும் புகழினைப் பெற்றவர்கள். வெள்ளை யானையின் மீது அமர்த்தப்பட்டவர்கள் பறையர்கள்.  வீர சாம்பவன் இவர்கள் வெற்றியினை ஊரறிய முரசடிப்பான். கிராம தேவதைகளுக்குப் படையலிடும்போது ஒரு பறையனுக்குப் பூணூலணிந்து அவனை அந்த நேரத்திற்கு மட்டும் கோயில் பூசாரி ஆக்குவர்,  கையில் மஞ்சள் நூலினைக் கங்கணமாக அணிந்து கொள்ளும் அவன் ஊர்வலத்தில் முன்னே நடந்து செல்வான் . தங்கள் சாதியின் சிறப்பு நோக்கியே தங்களுக்கு இவ்வாறு சிறப்பு அளிக்கப்படுவதாக இவர்கள் கூறுகின்றனர்.

(புராண கதைகள் நாங்களும் தோண்டி எடுத்து சொல்வோம் )

ஞானம் மு.அறிவுடைநம்பி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்