சைவம், வைணவம் தனி மதமாக அறிவித்திடு...!

இந்தியாவில் இந்துத்துவம் மிகப்பெரிய அளவில் தற்போதைய நிலையில் பலத்தோடு எழுச்சி பெற்று நிற்கிறது, நாட்டின் பெயரை இந்துராஸ்டிரம் என்று  மாற்றுவோம் என்றும், அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று மாதிரி அரசியல் அமைப்புச் சட்டம் வெளியிடும் அளவிற்கு இந்துத்துவ சனாதன கும்பல் வளர்ச்சி அடைந்துள்ளது, இந்தகைய கொடு நெறி போக்கை, இந்த சனாதன எழுச்சியை தடுப்பதற்கு சனநாயக சக்திகள் சில செயல் வடிவங்களை முன்னெடுக்க வேண்டி உள்ளது, அதன் அடிப்படையில் சனாதனவாதிகளின் பலத்தை உடைப்பதற்கு, இந்துத்துவ கொடு நெறி அரசியலை சீர்குலைப்பதற்கு, சனநாயகத்தை பாதுகாக்க சில யுக்திகளை சமூகநீதி காவலர் #எழுச்சித்_தமிழர் முன்னெடுக்கிறார், இந்த  அரசியல் நடவடிக்கைகள் சரி என உணர்ந்த சனநாயக சக்திகளும் ஆதரிக்கிறார்கள் ஆனால்   இதனை விரும்பாத சில மூளை வீங்கிகள், அவர்கள் தான்  மாபெரும் முற்போக்குவாதி என்று கருதிக் கொண்டிருக்கும் சிலர்  சைவம், வைணவம் என்று அரசியல் செய்தால், தனிமதம் அந்தஸ்து கிடைத்து விட்டால் சாதி ஒழிந்து விடுமா, சமத்துவம் கிடைத்து விடுமா என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறாரதான், சனாதன சக்திகளின் பலத்தை, சனாதன சக்திகளின் கோட்பாட்டை விழ்த்தினாளே சமத்துவம் மலர்ந்து விடும், ஆக சனாதன கோட்பாட்டை வீழ்த்த அதற்கான யுத்திகள் தான் இது, செயல் திட்டம் தான் இது,  
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோட்பாடு   என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்,  கோட்பாட்டை நிறைவேற்றுகிற  செயல் யுத்திகளை, செயல் நுட்பங்களை கோட்பாடு என்று கருதி கொள்ளாதீர்கள்,இதையெல்லாம் எதுவும் புரிந்து கொள்ளாதவர்கள் எதையெதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, சனாதன சக்திகளுக்கு ஆதரவு கரம் நீட்டாமல்  அமைதியாக இருந்து வேடிக்கை பாருங்கள்.
அனைத்து சாதியிலும் உட்பிரிவை, மோதலை உருவாக்கி,  உடைத்து நொறுக்கி இந்துத்துவ சக்திகள் அரசியல் செய்கிறார்கள்  ஆனால் நாம் நியாயப்படி சைவத்திற்கும், வைணவத்திற்கும், குலதெய்வ வழிபாட்டிற்கும் தனிமதம்  அந்தஸ்து கேட்க கூடாதா, அதற்கான அரசியல் செய்யக்கூடாதா, இந்து மதம் உடைந்தால் எங்களுக்கு என்ன நட்டம் ஏற்பட போகிறது, ஏன் உங்களுக்கு வயிறு எரிகிறது,  இந்து மதத்தில் இருந்து சைவம், வைணவம் வெளியேற்ற சனநாயக சக்திகள் கோருவதால், கருத்துருவாக்கம் செய்வதால்  தலித் அரசியல் உள்ளிட முற்போக்கு அரசியல் செய்வதாக சொல்லும் கட்சிகளுக்கு அதன் தலைவர்களுக்கும் ஏதேனும் பெருத்த நட்டம் உருவாக போகிறதா, என்ன நடந்திடும்  ஏன் பதறுகிறீர்கள்.
இந்து மத அடையாளத்திற்குள் குலதெய்வ வழிபாடு கொண்டவர்களையும், சைவ சமயத்தவர்களையும், வைணவர்களையும் ஏமாற்றி வைத்துக் கொண்டு உள்ளீர்கள், இப்போதாவது இந்து மதத்தில் இருந்து எங்களை விடுவியுங்கள் என்று குரல் எழுப்பினால் சனாதன கும்பலின்  கண்டனங்கள் சமூக ஊடகங்களில் பதிவுகள் மிக கடுமையாக இருக்கின்றது குறிப்பாக  விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக கடுமையாக இருக்கிறது. 

இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் பார்சிகள் அல்லாதவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆணையிட்டார்கள், நாம் அதனை ஏற்று இந்து மதம் என்றே வாழ்ந்து விட வேண்டுமா, அதிலேயே இருந்து விட வேண்டுமா,  எங்களுக்கென்று ஒரு சமயம் இருக்கிறது, அந்த சமயத்தின் வழி தனியாக விட்டுவிடுங்கள் என்றால் சனாதன சங்கிகள் கதறுகிறார்கள் இந்து மதத்தை உடைப்பதற்கு வழியாம் இது. அதனால் இந்த பதட்டம் என்று எங்களுக்கு புரிகிறது நாங்களும் விடுவதாக இல்லை...

தமிழக அரசே..!
சைவ சமயம், வைணவ சமயம், குலதெய்வ வழிபாடு  தனி மத அந்தஸ்து வேண்டும் அறிவித்திடு. இந்து மதத்தில் இருந்து விடுவித்திடு...!

இவண்: 
ஞானம் மு.அறிவுடைநம்பி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்