கட்டிப்பறையர்

#கட்டிப்பறையர்கள்

கட்டி இரும்பை ஆங்கிலத்தில்  pig என்பர். உருக்குமண்ணை அல்லது உருக்கு மணலை எடுத்து உலையிட்டு உருக்கி இரும்பு கட்டிகளை உருவாக்கியவரையே பிற்காலத்தில் கட்டி பறையர் என்றனர். 

இருப்பு தொழில் செய்தவர்கள்,  பல நாடுகளுக்கு இரும்பு ஏற்றுமதி வணிகம் செய்தவர்கள்  கட்டிப்பறையர்கள்,  இரும்பு உருக்கு உலைகளை அமைத்தவர்கள் கட்டிப்பறையர்கள்  வடுகர்கள் அதனை பறித்து கொணன்டார்கள். 

1843 ஆம் ஆண்டு கேப்டன் கேம்பெல் போன்றோர் தென்னிந்திய இரும்புத் தொழில் நுட்பத்தை ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகளும் குறிப்புகளும் மடல்களும், இரும்பு எஃகுத் தொழிலில் அன்றைய இங்கிலாந்தையும் விஞ்சி நின்ற தமிழரின் அதாவது கட்டிப்பறையரின் தொழில்நுட்பத்தை வந்தேறிகள் இங்கு வந்து அறிந்து சென்றதைக்காட்டுகிறது.

வரலாற்று ஆய்வுகளில் சேலம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கொல்லன் உலைகள் அவற்றின் தொன்மையை நிறுபித்தன, இக் கொல்லனுலைகளின்  அமைப்பிலான தொழில்நுட்பத்தையும், எளிமையையும் குறைந்த செலவையும் கண்டு வந்தேறி ஆங்கிலேயரே மலைத்து நின்றனர்.

உலையில் அடுப்புக்கரியை நிரப்பி உலை மூட்டித் துருத்தியைக் கொண்டு காற்றடித்து அதை  நன்கு கனிய வைத்த பின் மீண்டும் அடுப்புக்கரியையும் அதன் அளவில் பாதி அளவு இரும்புக்கணியையும் கொட்டி உருக்கிய பின் , உலையில் திரண்ட இரும்பு கட்டியை எடுப்பதே பரையர் (தமிழர்)கண்ட தொழில்நுட்பமாகும். இவ்வாறு ஆக்கிய அந்த இரும்பு கட்டியை கைக்கோடாரியை கொண்டு வெட்டி அதன் தரத்தை அவர்கள் அறிந்தனர்.
இவர்களே கட்டிப்பறையர் என்றனர்.

ஆங்கலேயர்கள் ஆட்சிவரை இரும்பு தொழில் கட்டிப்பறையர்கள் செய்துவந்தனர் பின்னர் வடுக தெலுங்கர் பெரும் அளவில் அபகரித்தனர்,

கிமு 1200 முதல் 1000 வரையிலான இக்காலகட்டத்தில் வரை இரும்பை ஆக்கும் உயர் நுட்பம் இத்துணை கண்டத்தில் பிற பகுதிகளில் உருவாகவே இல்லை இந்த தொழில்நுட்பத்தை அடைய பல ஆண்டுகள் அவர்களுக்கு பிடித்திருக்கும்.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்