தலித் அரசியலால் மட்டுமே சாதி மத வேறுபாடுகளை ஒழிக்கமுடியும்...

தலித் அரசியலால் மட்டுமே சாதி மத வேறுபாடுகளை ஒழிக்கமுடியும், 

மொழி இன உரிமைகள் மீட்கமுடியும்,
 மனித நேயத்தை வளர்க்க முடியும் , பெண் அடிமை தனத்தை ஒழிக்க முடியும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்  மலர வேண்டுமென்றால், மனித ஒற்றுமையை பிளக்கும் காரணிகள் அனைத்தும் ஒழிய வேண்டுமானால்  தலித் அரசியல் இந்த மண்ணில் நிலைத்து வளர வேண்டும்.

புரட்சியாளர் அம்பேத்கர் தத்துவமும் , அண்ணன் திருமா அவர்களின் தலைமை மட்டுமே இந்தியாவை, தமிழகத்தை ஊழல்வாதிகளிடமிருந்து, சாதி வெறியர்களிடம் இருந்து,  இந்த தேசத்தை கொள்ளை அடிக்கும் அதிகார ஆதிக்க சக்திகளிடமிருந்து, இந்துத்துவ சக்திகளின் பிடியில் இருந்து விடியவைக்க முடியும் விடுதலை வென்றெடுக்கமுடியும்.

பிஜேபி ரவுடிகள் காவல்துறை துணையுடன்  விடுதலைச் சிறுத்தைகள் நான்கு பேரை  தாக்கியதை பெரிதாக பெருமையாக சாதிய வாத சக்திகள், ஊடகங்கள் பெருமை கொள்ள வேண்டாம் 

விடுதலைச் சிறுத்தைகள் G 20 நாடுகள் எடுக்கும் முடிவை ,மக்கள் விரோத திட்டத்தை எதிர்த்து மக்கள் இயக்கம் நடத்துபவர்கள் 

அனு உலையாக இருந்தாலும் சரி,பெட்ரோ கெமிக்கல் திட்டமாக இருந்தாலும் சரி , மீத் தேன் திட்டமாக இருந்தாலும் சரி , நமது நாட்டின் வளர்ச்சிக்கு, மக்களுக்கு  எதிரான எதுவானாலும் சரி, வெகு மக்களை திரட்டி போராடுகிற ஒரு மாபெரும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் 

உலகத்தை ஆளுமை  செய்யும்  20 நாடுகளின் கொள்கையை எதிர்த்து, அவர்களின்  திட்டத்தை எதிர்த்து போராடுகிறவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் 

ஒரு சுன்டக்காய் தமிழிசை ஒரு ஆளா? 

அன்னிய நாட்டு கைகூலிகள் தான் பிஜேபி 

கார்பிரேட் முதலாளிகளின் மக்கள் விரோத திட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் தமிழகத்தில் எதிர்க்கிறார்கள் என்பதற்காக விடுதலைச் சிறுத்தைகளிடம் திட்டமிட்டு மோதுகிறார்கள் 

மோதுங்கள் இந்துத்துவத்திற்கும் அம்பேத்கரின் வாரிகளுக்குமான இறுதி யுத்தமாக மாறட்டும்.

இவையெல்லாம் எங்கள் தலைவர் எழுச்சித்தமிழர் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை எதிர்த்து மக்களிடம் கருத்து கேட்க சென்ற பிறகு கோபம் அடைந்த பிஜேபியின் விளைவு தமிழிசையின் திமிர் பேச்சு. 

பிஜேபி மத வெறி சக்திகளின் வன்முறை வெறியாட்டத்திற்கு எதிராக கடலூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் மு.அறிவுடைநம்பி உரை சுருக்கம்

பிஜேபி யை கண்டித்து கடலூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் 
மு.அறிவுடைநம்பி உரை சுருக்கம்

நவம்பர் 14 20172017, 

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்