மனித உரிமை குற்றம்

தமிழகத்தை சேர்ந்த இந்திய கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திரா காவல்துறை சுட்டு படுகொலை செய்திருக்கிறார்கள் மிருகத்தனமான இந்த காட்டு மிராண்டி நடவடிக்கை இன பாகுபாட்டுடன் நடத்தப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு சட்ட விரோத நடவடிக்கையில் ஆந்திரா அரசு காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளது.

நாட்டின் ஒற்றுமையை கெடுக்கும் விதமாகவும் சட்டத்தை தவறாக பயன்படுத்தி நியாயம் கற்பித்து ஆட்சிப்புரிகிறார்கள்.

இந்திய அரசும் , ஆளும் வர்கமும் இத்தகைய மனித உரிமை மீறலை
சட்ட விரோத படுகொலையை மறைக்க தமிழர், தெலுங்கர் இனபிரச்னையை தூண்டி 20 கூலித்தொழிலாளிகள் படுகொலையை மறைக்க பார்க்கிறார்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கருத்தியல்படி, சிந்தனைப்படி
இந்தியாவில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்க முடியும்

ஆகவே இப்படுகொலைக்கு நீதி கேட்டு அத்தகைய தீர்வு நோக்கி நகர்வோம்.....
மனித உரிமை மீறல் காவல்துறையால்
(Law enforcement deportment) இருக்க கூடாது என்பதற்காக

தொலை நோக்கு பார்வையோடு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கைது தொடர்பாக மிகச் சிறப்பாக வழிகாட்டல் செய்திருக்கிறார்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் படி சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி,
வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உயிரையும் பறிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 46(3)ன் படி,

கைது செய்யப்பட வேண்டிய நபர்,

மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்படாத நிலையில்,
அவரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவருக்கு மரணத்தை விளைவிப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை.

அதாவது, கைது செய்யப்படவேண்டிய நபர் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக சந்தேகிப்படும் நிலையில்,
அவர் தப்பியோட முயற்சித்தாலோ , கைதை தவிர்க்க முயற்சித்தாலோ அதை தடுப்பதற்காக முயற்சிக்கும் அதிகாரி தேவையெனில், கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆக சட்டம் இப்படி இருக்க

தமிழகத்தை சேர்ந்த 20 கூலித்தொழிலாளிகள் என்ன குற்றம் செய்தார்கள் அவர்களை ஏன் இந்த சந்திரபாபு நாயுடு அரசு சுட்டு கொல்ல வேண்டும் .

இந்தியாவில் உள்ள மனித உரிமை காப்பாளர்களே,ஆர்வளர்களே....

குடிமக்களை சுட்டு கொலை செய்த ஆந்திர மாநில சட்ட விரோத அரசை கலைக்க
குற்றவாளிகளை சிறையில் அடைக்க போராடுவேண்டும்

இவண்:

மு.அறிவுடைநம்பி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - கடலூர்

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்