நீதிமன்ற சாதிய பயங்கரவாதம்....
போலீஸ் மீது நீங்கள் சந்தேகப்பட்டால், நான் பாகிஸ்தான் போலீசை வரவழைத்துத்தான் விசாரிக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு உத்தரவிடவா?.....
நீதிபதி: சி.பி.ஐ. விசாரணைக்கு எல்லா வழக்குகளையும் மாற்றவிட முடியாது. குறிப்பாக சி.பி.ஐ. அதிகாரிக்கு மொழி பிரச்சனை உள்ளது. அவர்களுக்கு தமிழ் தெரியாது. இப்படிச்சொன்னால், நான் ஸ்காட்லேண்டு போலீஸ் விசாரணைக்குத்தான் உத்தரவிடவா? .......
நீதிபதியின் நக்கல் பேச்சு
வேற சாதியில் பிறந்து இப்படி யாராவது மரணமடைந்திருந்தால் நீதிபதி இப்படி பேசுவாரா?.....
விஷ்ணுபிரியா மரணத்தை அரசியல் ஆக்காதீர்கள்: ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் கருத்து
..........................................
சென்னை, அக். 9–
திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றிய விஷ்ணு பிரியா கடந்த மாதம் தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று விஷ்ணுபிரியாவின் தந்தை எம்.ரவி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ‘கோகுல்ராஜ் கொலை வழக்கில் அப்பாவிகளை கைது செய்ய தன் மகளை, உயர் போலீஸ் அதிகாரிகள் நிர்பந்தம் செய்தனர். மேலும், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என் மகள் கோழையல்ல. எனவே என் மகள் சாவில் மர்மம் உள்ளது’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். அப்போது நடந்த விவாதம்:
நீதிபதி: இந்த வழக்கிற்கு போலீசார் 4 வாரத்துக்குள் பதிலளிக்கவேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிடுகிறேன்.
மனுதாரர் வக்கீல் வில்சன்: விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காரணமான அதிகாரி செந்தில்குமாருடன் பணியில் சேர்ந்த அதிகாரி தான் இந்த தற்கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக உள்ளார். ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு கீழ் பணியாற்றிய அதிகாரி. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும்.
நீதிபதி: ஒரு இளம், திறமையான ஒரு போலீஸ் அதிகாரி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். நீதித்துறையில் ஒரு மாஜிஸ்திரேட் அல்லது மாவட்ட நீதிபதி தற்கொலை செய்துக் கொண்டால், நாமெல்லாம் எப்படி துடித்து போய்விடுவோமோ? அதுபோல, ஒரு போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டதால், காவல் துறையில் உள்ள அதிகாரிகள் எல்லாம் துடித்துப் போயிருப்பார்கள். எல்லோரையும் சந்தேகப்படக்கூடாது. சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் அக்கறை உள்ளது. அவர்கள் நியாயமாகத்தான் விசாரிப்பார்கள்.
அவர்கள் மீது நீங்கள் சந்தேகப்பட்டால், நான் பாகிஸ்தான் போலீசை வரவழைத்துத்தான் விசாரிக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு உத்தரவிடவா? மேலும், தடய அறிவியல் ஆய்வு அறிக்கை வரவேண்டும். அந்த அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தடய அறிவியல் துறை நிபுணர்களுக்கு உத்தரவிடமுடியாது. அவர்கள் ஆய்வுகளை செய்ய கால அவகாசம் வழங்கவேண்டும்.
வில்சன்: அதுவரை இந்த வழக்கை விசாரிக்காமல் சி.பி.சி.ஐ.டி. இருக்கட்டுமே?
நீதிபதி: புலன் விசாரணையை நிறுத்த வேண்டும் என்று ஒருபோதும் உத்தரவிடமுடியாது. ஒருநாள் காலதாமதம் ஆனாலும், வழக்கு ஆதாரங்கள் மறைந்து விடும். விஷ்ணுபிரியா அரசியல்வாதி கிடையாது. அவரது சாவை அரசியலாக்காதீர்கள்.
வில்சன்: அதிகாரிக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் விசாரணையை நிறுத்தவேண்டும்.
நீதிபதி: சி.பி.ஐ. விசாரணைக்கு எல்லா வழக்குகளையும் மாற்றவிட முடியாது. குறிப்பாக சி.பி.ஐ. அதிகாரிக்கு மொழி பிரச்சனை உள்ளது. அவர்களுக்கு தமிழ் தெரியாது. இப்படிச்சொன்னால், நான் ஸ்காட்லேண்டு போலீஸ் விசாரணைக்குத்தான் உத்தரவிடவா? தடய அறிவியல் துறை நிபுணர்கள் மிகவும் நேர்மையானவர்கள். அவர்களது அறிக்கை வரட்டும், அதன்பின்னர் முடிவு செய்யலாம். அதுவரை சி.பி.சி.ஐ.டி. விசாரணையை இந்த ஐகோர்ட்டு கண்காணிக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
Comments
Post a Comment