காவேரி ஆற்று பிரச்சனை
தமிழக தலித்துகள் கர்நாடகாவில் கூலி வேலை செய்தாலும், மார்கெட்டில் மூட்டை தூக்கி பிழைத்தாலும் அங்கு தமிழக சாதி வெறியர்கள் தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ்கிறார்கள்
கர்நாடகாவில் சம்பாரித்த பணத்தை வைத்து எமது மக்கள் சொந்த கிராமத்தில் நல்ல வீடு வாசல் கட்டி ஓரளவு நல்ல வாழ்க்கை வாழு்கிறோம்.
கடலூர், விழுப்பும் மாவட்டத்தை சேர்ந்த தலித்துகள் பெரும்பாலும் பெங்களூரில் வேலை செய்கிறார்கள் அவர்கள் சொந்த ஊருக்கு திருவிழா போன்ற நல்ல காரியம் கெட்ட காரியத்திற்கு வரும் போது இந்த சாதி வெறி நாய்கள் இந்த பற பசங்க உடையும் நடையும் பேச்சு பழக்கமும் பாருடா என்று நக்கலாக பேசுவான்
அங்க வேலை செய்து நம்ம முன்னேறி வருவது பிடிக்காது, ஒருத்தன் எழுதுறான் facebook ல ஏன்ட கர்நாடகாவில் வேலை செய்யுறிங்க கன்னட காரன் கொடுக்கிற கூலிக்கு என்று எழுதுகிறான் எதற்காக இப்படி எழுதுகிறான் என்று புரியவில்லை
என்னுடைய உறவினர் பலர் பெங்களூரில் தான் பிழைக்கிறார்கள் கர்நாடக தலித்துகள் வாழுகிற பகுதியில் தமிழ்நாட்டு பறையர்களான எனது சின்ன தாத்தா , அத்தை,மாமா, எனது அப்பாவின் தாய்மாமா பிள்ளைகள் எனது அக்கா வீட்டுகாரு, எனது சித்தப்பா , அத்தை பசங்க, இப்படி எனது உறவுகள் பலர் பெங்களூரில் சொந்த வீடு வாசல் என்று வாழுறாங்க , கர்நாடக அரசு ஊழியராக கூட இருக்காங்க
ஏன் 70, 80 வருஷத்திற்கு முன்னடியே கர்நாடக பத்தராவதி என்ற ஊரில் எனது தாத்தாவின் சித்தப்பா பிள்ளைகள் வீடு வாங்கி அந்த வீடு அவனுங்களுக்கே வாடகை விட்டுட்டு இங்கு நம்ம ஊரில் ஓரளவு நிம்மதியாக வாழ்கிறார்கள் இப்படி எத்தனையோ தமிழகத்தை சேர்ந்தவர்கள் கர்நாடகாவில் வசிக்கிறார்கள் அவர்கள் எல்லாம் வந்துவிடனுமா?
இனப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர என்ன வழி என்று தேடுங்க
நம்ம தமிழ்நாட்டு ஆறு, ஏறியில் தண்ணீரை சேமிக்க என்ன வழி இதையெல்லாம் அரசாங்கம் செய்யலாம் ஆனால் மணல் கொள்ளை அடிக்கிறது மலையை வெட்டி எடுக்கிறது, விவசாய நிலத்தை கெடுக்கிற வேலை செய்யுறது, தமிழகத்தையும் தமிழக மக்களையும் அரசியல் வாதிகள் நேசிக்காமல் ஊழல் செய்து இவன் குடும்பத்தினர் மட்டுமே நல்லா சொகுசா வாழுரது
தினமும் எங்களை சாதியை சொல்லி அடிப்பது கொலை செய்வது எங்கள் வீடுகளை எறிப்பது எங்கள் சொத்துக்களை சூரையாடுவது ஆண்ட சாதி பேன்ட சாதி என்று சாதி வெறி எடுத்து திரிவது ஆனால் ஒத்தா உங்களுக்கு இப்ப மட்டும் எப்படிடா தமிழன் என்று நினைப்பு வந்துச்சு. தமிழ் தமிழன் தமிழ்நாடு என்று பேச தமிழ்நாட்டில் அண்ணன் திருமாவளவனுக்கு மட்டுமே உரிமை உண்டு
தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எந்த அரசியல் பேசினாலும் சந்தேகிக்கனும்
தலித் அரசியலும் புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்தியலுமே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும்
Comments
Post a Comment