அனைத்திற்கும் காரணம் பிஜேபி
ஜெயலலிதா அம்மையார் மரணம் குறித்து பெரும் சர்ச்சையை பொய்களை கொண்டு எழுப்பி,
சசிகலா அவர்களை சாதாரண மக்களிடமும் அவரின் கட்சி தொண்டர்களிடமும் ஜெயலலிதாவின் மரணம் சசிகலாவால் ஏற்பட்டது என்பதை போல ஒரு தோற்றத்தை உருவாக்கி உள்ளார்கள்.
படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஜெயலலிதா இறப்பு சந்தேக மரணமாக நினைக்க வைத்து விட்டனர். பெண்களை வைத்து ஒரு பெண்ணை கடுமையான சொற்களால் திட்ட வைத்துள்ளார்கள்.
நாட்டின் முதல்வர் எத்தகைய பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பார் என்பது கட்டாயம் அதிகாரிகள் முதல் ஆட்சியாளர்கள் வரை அனைவருக்கும் தெரியும் அப்படி இருக்கும் போது எப்படி ஒரு முதல்வரை மர்மமாக கொலை செய்யமுடியும்.
வெறுப்பு அரசியலின் உச்சம்தான் இன்றைய தமிழக அரசியல் இவையெல்லாம் செய்துகொண்டு இருப்பது பிஜேபி யும் அதன் சங்க பரிவாரங்களும் என்பதை மறந்து விடக்கூடாது.
ஒருவரை அரசியலில் இருந்து எப்படி தனிமை படுத்துவது அவர்களை எப்படி தன்னிடம் சரண்டராக வைப்பது என்ற வித்தையை இந்துத்துவ பிஜேபி கும்பல் மிக சிறப்பாக கற்றுக் கொண்டுள்ளது.
எப்படி பிரச்சாரம் செய்வது என்கிற யுத்திதான் அது
இதே யுத்தியைத்தான் தேர்தலில் கடைபிடித்தார்கள் ஆக இந்த வித்தயை கொண்டு சோனியா, ராகுல் இப்படி எவரும் தலை தூக்க விடாமல் செய்வார்கள் என்பது தெள்ளத் தெளிவு.
சமூக ஊடகங்களில்
கட்சி, அமைப்பு அடையாளங்கள் தவிர்த்து பொதுவான நபர்கள் போல் திட்டமிட்டு பெரும்பான்மையாக இயங்குவது இந்த பிஜேபி ஆதரவு கும்பல் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
பிஜேபி கும்பல் திட்டமிடுகிற நிகழ்ச்சி நிறல்கள்தான் ஊடகங்களின் செய்திகள், விவாதங்கள், கட்டுரைகள், நேர்காணல்கள் என்பதை மறந்து விடவேண்டாம் நாளை அனைத்து கட்சிகளையும் இப்படி பொய் கொண்டு அழிக்க திட்டமிடுவார்கள் ஜாக்கிறதை
ஜெயலலிதாவின் மரணம் கொலை என்றால் மாநில ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு தெரியாமலா இருக்கும் ஏன் இவர்கள் வதந்திகளுக்கு முடிவு கட்டவில்லை வதந்திகளுக்கு பிரதமர் தலைமை தாங்குகிறார் பன்னீர் ஆதரவாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்
ஜெயலலிதா மரணம் குறித்து முதலில் தமிழக மக்களுக்கு ஆளுநர் விளக்கம் சொல்லட்டும் அதற்கான பொறுப்பு இவருக்குதான் உண்டு எனவே ஆளுநரிடம் விளக்கம் கேளுங்கள் பிறகு மரணம் குறித்து விவாதியுங்கள்.
ஒரு பெண்ணை இப்படி துன்ப படுத்துவது சரியல்ல.
ஊழல் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கிறார் அது சரி,
ஆனால் ஒரு பெண்ணை பொதுவாழ்க்கைக்கு வர விடாமல் தனிநபர் விமர்சனம் ,அவதூறு கொலை பழி இப்படி பொய்யான செய்திகள் மூலம் பொதுமக்களிடமிருந்து புறக்கணிப்பு செய்வதற்கு வழி செய்வது மனித தன்மையற்ற செயல் என்பதே என் எண்ணம்.
Comments
Post a Comment