9 ஆம் ஆண்டு நினைவு நாள்

கடந்த 6 ஆம் தேதி எனது தந்தையின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள்.

அவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் வேளையில் புதுச்சேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

கடுமையான தலைவலி வரும்போது அவர் தன்னுடைய சுய நினைவை இழப்பார்
வலி குறைந்து மீண்டும் சாதாரண நிலைக்கு வரும் போது வாடா வீட்டுக் போவோம்  என்பார் இப்படியான நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் வாங்கு போவோம் என்று தொல்லை தருவார் , மருத்துவ மனையில் இருக்கவே முடியாது வீட்டுக்கு அழைத்துபோ எனக்கு உடல் நலம்பெரும் என்பார்.
நாங்கள் அறுவை சிகிச்சை முடிந்து போகலாம் என்று மருத்துவ மனையில் வைத்து இருந்தோம் ஆனால் அவர் அறுவை சிகிச்சை செய்தால் நான் பிழைப்பேனா என்று தெரியாது நான் உயிருடன் இருக்கும் வரை வீட்டில் உங்களுடன் இருந்து இறந்து விட்டு போகிறேன் என்றார்

நானும் எனது அண்ணனும் பல மருத்துவரிடம் ஒப்புதல் கேட்டோம் மூளை அறுவை சிகிச்சைக்கு பின் 10 சதவீதம் பிழைப்பதற்கு வாய்ப்பு இருக்கு,சொல்லவும் முடியாது வயதானவர் என்பதால் அறுவை சிகிச்சை செய்யும் போதே உயிர் போகவும் வாய்ப்பு உள்து என்று மருத்துவர்கள் கூறினார்கள்

எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எனது தந்தையின் இறப்பு உறுதி செய்யப்பட்டது புதுச்சேரி மருத்துமனை எதிரே உள்ள பூங்கா சாலையில் அழுது புரண்டேன் நானும் என்அண்ணனும் எங்க அம்மா கிட்ட எப்படி செல்வது என்று தெரியாமல் தவித்தோம்

அவர் இயற்கையாக உயிர் போகும் வரை நம்முடன் இருக்கட்டும் என்று அவரை வீட்டுக்கு அழைத்து வந்தோம் 

என்அப்பா எங்களுக்காக உழைத்ததை நினைத்து நினைத்து அழுது அழுது பைத்தியமாகவே மூன்று மாதமாக திரிந்தேன்

எனது அம்மா புரிந்து கொண்டார்.
சொல்ல முடியாத துயரத்தை மனதில் தாங்கி என்னை பார்த்துகொள்வதில் மிகவும் கவனம் செலுத்தினார்

தினமும் எங்கள் குடும்பம் அழுவோம் சாப்பிட கூட எங்களுக்கு பிடிக்காது எனது அம்மா சப்பிடுவதே கடினம்

எனது தந்தை மருத்துவமனையில் இருக்கும் அவருக்கு படிப்பதற்கு நக்கீரன் புத்தகமும் ஜூனியர் விகடன் புத்தகம் வாங்கி கொடுத்தேன் அவர் அதை படித்துவிட்டு இரவு நான் பார்த்துகொள்வதற்கு போனேன் அப்போது என்னை பார்த்து கேட்டார் ஏன்பா  அண்ணன் காலவரையற்ற உண்ணா விரதம் இருக்காரு நமக்கு இருக்கிறது ஓரே தலைவர் அவர். அவரு ஏன் உண்ணாவிரதம் இருக்கனும் கட்சிகாரங்க எல்லாம் இருங்கள் அண்ணன் உண்ணாவிரதம் இருக்கவேண்டாம் என்று சொல்லுங்க என்றார்.

அவ்வப்போது தலைவலி கடுமையாக எனது அப்பாவிற்கு வரும் போதும் உயிருக்கு ஆபத்தான நிலை வரும்போதெல்லாம் அருகிலுள்ள கண்ணன் மருத்துவமனையில் சேர்ப்போம் மீண்டும் சரியான பிறகு வீட்டுக்கு அழைத்துவருவோம் இப்படியாக மருத்துவ மனை, வீடு என்று மூன்று மாதத்திற்கு மேலாக எனது தந்தையின் உயிரை காக்க அலைந்து கொண்டு இருந்தோம்.

கண்ணன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இருந்த போது அண்ணன் திருமா அவர்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் தலைவர் அவர்களும் அதே வாரத்தில் அந்த மருத்துவ மனைக்கு வந்தார் ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தன் உடலுக்கு தீயிட்டு கொளுத்தி கொண்ட அருள் ஜோதி என்பவரை பார்க்க வந்தார்

அதே மருத்துவ மனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த என்னால் கட்சிக்கு வரப்பெற்ற ஒரு தோழரை கூட தலைவர் அவர்கள் உடல் நலன் விசாரித்தார் ஆனால் எனது தந்தை உயிருக்கு போராடி கொண்டு இருந்த நேரத்தில் கூட அண்ணன் திருமாவை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்வர் ஆனால் அண்ணனை என் தந்தையை பார்க்க வைக்க முடியவில்லை எனது அம்மா நான் கூப்பிடுகிறேன் என்றார் எனது அண்ணன் எனது அக்கா மகன் அனைவரும் தலைவர் காரை மறித்து நான் அழைக்கிறேன் என்று மருத்துவ மனைக்கு வெளியே ஓடி வந்தார்கள் நான் எனது குடும்பத்தினரிடம் சொன்னேன்,
தலைவரிடம் அருகில் நிட்பவர்கள், உடன் வந்துள்ள நிர்வாகிகள்,  கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும் இதே மருத்துவ மனையில் தான் அறிவுடைநம்பியின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார் என்று அவர்கள் தலைவரிடம் சொல்லி இருக்க கூடாதா...

விடுங்க என்றேன் அதற்கு உன்னை விட எவன்டா இந்த கட்சிக்காக சாதிக்காக கேஸ் வாங்கனவன் அவனெல்லாம் கட்சியில் முக்கியம் நம்ம கிடையாத என்றனர்

நான் மீண்டும் சொன்னேன் தயவு செய்து விடுங்கள் என்றேன் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதேன் சரி விடு என்று என்னை என் தந்தை இருக்கும் அறைக்கு அழைத்து வந்துவிட்டனர் , அப்போது என் தந்தை கேட்டார் அண்ணன் திருமாவா வந்துள்ளார் என்று கேட்டார் நான் உடனே சொன்னேன் இல்லை அய்யா...நம்ம கட்சி பையன்
ஒருத்தர் தீ குளித்துவிட்டார்
அவரை பார்க்க
வைகோ வந்தார்
என்றேன் அண்ணன் மருத்துவ மனைக்கு வந்த்தையே மறைத்தேன்.

ஆனால் என் தந்தையின் நினைவுநாளில் என் உயிருக்கு மேலான சிறுத்தைகள் பலர் நினைவு கூர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பார்த்து மிகப் பெரும் மகிழ்ச்சி அடைத்தேன் எனது குடும்பத்தினர் அனைவரும் என் அம்மா உட்பட அனைவரும் பெருமைப்பட்டடார்கள்

எனது குடும்பத்தினர் சார்பில் உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த நினைவு நாளில் என் தந்தையை மருத்துவ மனையில் வைத்திருக்கும் போது எனக்கு உதவி செய்த அண்ணன் சி.வள்ளுவன் மற்றும் அவரின் வழியாக உதவி புரிந்த அண்ணன் அழகப்பன் மற்றும் புதுச்சேரி மருத்துவ மனையில் என் தந்தையை வைத்திருக்கும் போது பார்த்து ஆறுதல் கூறிய அண்ணன் தாமரைச்செல்வன் ஆகியோருக்கும் எனக்கு ஆறுதலாக எனக்கு துணையாக நின்ற என் தோழமைகளுக்கும் இப்பதிவின் ஊடாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்........

என் தந்தையின் நினைவுகள் ஒவ்வொரு அணு பொழுதும் என்னுள் எழுகிறது
என்றும் உங்கள் நினைவுடன்

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்