விழிப்புணர்வு அடைய வேண்டும்....
ஒவ்வொருவரும் தலைவராக வேண்டும், மக்களை தலைவராக்க வேண்டும் இதுதான் #டாக்டர்_தொல்_திருமாவளவன் அவர்களின் கனவு, இதற்காகத்தான் தலைவர் உழைத்து கொண்டிருக்கிறார்.
தலைவர் பஞ்சம் உள்ள
ஒரே சமூகம் சேரி சமூகமாகத்தான் இருக்கிறது ,
ஆகவே தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான்
#அண்ணன்_எழுச்சித்தமிழர் அவர்களின் லட்சியம், அதற்காகத்தான் இரவும்,பகலும் உழைக்கிறார்.
அம்பேத்கரியல், பெரியாரியல் மார்க்ஸியம் , மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து முற்போக்கு கருத்தியலையும் படித்து நம்முடைய நிர்வாகிகளுக்கு போதிக்கிறார்,
மக்களிடம் எப்படி அணுக வேண்டும், எப்படி நடந்தகொள்ள வேண்டும், என்று கூட நிர்வாகிகளுக்கு சொல்லி கொடுக்கிறார்.
தலைவரின் அனுபவத்தை அவரின்
கால் நூற்றாண்டு களப்பணி படிப்பினையை ,
கருத்தியல் நடைமுறையை கூட தொகுத்து நமக்காக 'அமைப்பாய் திரள்வோம்" என்ற நூலையும் கொடுத்து இருக்கிறார்.
தலைவராக உருவாக வேண்டுமென்பது தனிகட்சி ஆரம்பித்து கொண்டு தலைவராக அறிவித்து கொள்வது அல்ல பொருள் .
அரசின் அடுக்குமறையாக இருந்தாலும் , சாதிய அடக்குமுறையாக இருந்தாலும் அனைத்தையும் எதிர்கொள்ள,
மக்கள் மேம்பாட்டுக்கு உழைக்க,
மக்களை காக்க, நமக்கான உரிமையை மீட்க, தகுதியான ஆளுமையை வளர்த்து கொள்ளவேண்டும் என்பதுதான் அதன் பொருள்.
எவரிடமும் சேர்ந்து வாழலாம், எவரையும் சார்ந்து வாழக்கூடாது என்பதுதான் தலைவரின் கருத்தியல்.
நாமே நாம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க, ஆளுமையை ,வளத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்
நம்முடைய ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், முகாம் செயலாளர் மாவட்ட ஆட்சியர் முதல் காவல்துறை கண்காணிப்பாளர் வரை அனைத்து அதிகாரிகளையும் தானே அணுகி மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அதற்கான தலைமை பண்பை கற்று கொள்ள வேண்டும்.
காவல்துறை கண்காணிப்பாளரிடம், துணை கண்காணிப்பாளரிடம், ஆய்வாளரிடம், உதவி ஆய்வாளரிடம், ஏன் தலைமை காவலரிடம், கிராம நிர்வாக அலுவலரிடம் கூட தலைவரை பேச சொல்லி நமது நிர்வாகிகள் தலைவரை பேச வைப்பது , மாற்று கட்சி நிர்வாகிகளிடம் போன் போட்டு கொடுத்து இவர்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க சொல்லி பேச வைப்பது என்ன அணுகுமுறை இது,
நாம் என்ன கற்று கொண்டோம்.
என்ன பிரச்சினையோ
அந்த பிரச்சினையை தீர்க்க நாம்,
நமது நிர்வாகிகள் தகுதி வளர்த்துகொள்ளவேண்டும்,
அதுதான் அண்ணன் அரசியலை புரிந்து கொண்டதாக, கற்று கொண்டதாக அர்த்தம்.
எதற்கு எடுத்தாலும் தலைவரை தொந்தரவு செய்வது என்பது ஆளுமையில்லாதவன் என்று பொருள் .
தலைவர் கொடுத்த அரசியல் ,கருத்தியல் என்னை எப்போதும் எவரிடமும் உதவிக்கு அனுப்பாது ,
இவரால் தான் இதுமுடியும் ,
நம்மால் முடியாது என்ற
என்னம் எனக்கு வரவே,வராது.
நானே 100 சதவீதம் ஒரு பிரச்சனையை தீர்த்து வைப்பேன். எழுச்சித்தமிழர் அண்ணன் எனக்கு கொடுத்த விழிப்புணர்வு இது.
நேரம் இல்லை மீண்டும் திருத்தி
மேலும் எழுதுவேன்.
ஞானம் மு.அறிவுடைநம்பி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி- கடலூர்
Comments
Post a Comment