சாதிகளான இந்து மதத்தை அழித்தொழிக்க வேண்டும் .- புரட்சியாளர் அம்பேத்கர்

___________________________
மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் கூறினேன். நான் சிலருக்கு கலகம் விளைவிப்பதாகத் தோன்றலாம்.
சிலருக்கு புரட்சிகரமாக தோன்றலாம். ஆகவே , என் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கி விடுகிறேன்.

கொள்கைகளுக்கும் விதிகளுக்கும் இடையே வேற்றுமை உண்டென்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதை நான் அறியேன். வேற்றுமை உண்டென்றே நான் எண்ணுகிறேன்.
அது மட்டுமல்ல  இந்த வேற்றுமை உண்மையானது, முக்கியமானதென்றும் நான் கூறுகிறேன் . விதிகள் நடைமுறையை ஒட்டியவை. ஏற்கெனவே நிர்ணணயித்தபடி நம் வேலைகளைச் செய்து முடிப்பதற்கான பழகிப்போன வழிமுறைகளே அவை.   கொள்கைகளோ அறிவு ரீதியானவை. ஒரு விசயத்தைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கும் சரியான முறைகள் : ஒருவன் ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்கான வழிமுறை என்ன என்பதை விதிகள் விளக்கிக் கூறுகின்றன. கொள்கைகள் அப்படி எந்த ஒரு குறிப்பிட்ட வழிமுறையையும் விளக்கி கூறவில்லை.

விதிகள் சமையல் குறிப்புகளைப் போல. என்ன செய்ய வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே கூறுகின்றன. கொள்கைகள் (எடுத்துக்காட்டாக நீதி) ஒருவர் தன் விருப்பங்களையும் நோக்கங்களையும் எதை ஒட்டி அமைத்துகொள்ளவது என்ற பார்வைக் குறிப்பை தருகிறன.

ஒருவர் தன் பணியைச் செய்து முடிக்க முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை? மனதிலே ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டியவை எவை? என்பதில் ஒருவருடைய சிந்தனைக்கு வழிகாட்டுவது கொள்கை.

ஆக விதிகளுக்கும் கொள்கைகளுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. அதாவது விதிப்படி செய்யும் செயலுக்கும் கொள்கைப்படி செய்யும் செயலுக்கும் இடையில் - அளவிலும் பண்பிலும் வேறுபாடுள்ளது என்பதே உண்மை . ஒர கொள்கை தவறானதாக இருப்பினும் அந்த கொள்கை வழிநின்று செய்யும் செயல் மனமறிந்து செய்யப்படுவதும் பொறுப்புணர்ச்சியோடு கூடியதும் ஆகும். விதி என்பது சரியானதாக இருக்கலாம். ஆனால், விதிப்படியான செயல் எந்திர கதியில் ஆனது.

மதச் செயல்பாடு சரியான செயல்பாடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் பொறுப்புணர்ச்சி உள்ள செயல்பாடாக அது இருக்வேண்டும். மதம் கொள்கைகளால் மட்டுமே ஆனதாக இருந்தாக வேண்டும். விதிகளால் ஆனதாக இருக்க முடியாது. மதம் என்று அழைக்கப்படுவதற்கான அருகதையை இழந்து விடுகிறது. ஏனென்றால் உண்மையான மதச் செயல்பாட்டின் சாரம்சமாகிய பொறுப்புணர்ச்சியே அது அழிந்து விடுகிறது. இந்த இந்து மதம் என்பதுதான் என்ன ?கொள்கைகளின் தொகுப்பா அல்லது விதிமுறைகளா?   விதிகளால் ஆன ஒரு மதத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன், என்பதால் மதமே தேவையில்லை என்று நான் கருதுவதாக எண்ணிவிட வேண்டாம். இந்த பழமையான விதிகளால் ஆன மதம் அழிக்கப்பட வேண்டும் என்று கூறும் அதே வேளையில், அதன் இடத்தை கொள்கைகளால் ஆன மதம் ஒன்று இட்டு நிரப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கொள்கைகளால் ஆன மதத்தையே உண்மையான மதம் என்று கூற முடியும் .

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நூலிருந்து

*மு.அறிவுடைநம்பி*
_விடுதலைச் சிறுத்தைகள் கட்சி_

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்