பறையர் அல்ல பரையர்
பரை-பரையர்
ஏழு தலைமுறை, ஈரேழு தலைமுறை, ஏழேழு தலைமுறை, என்பதெல்லாம் தமிழரிடையே வழங்கிவந்த தலைமுறை கணக்கு.
மகன் - மகள் என்பது முதல் தலைமுறை, தந்தை_தாய் என்பது இரண்டாம் தலைமுறை, பாட்டன்_பாட்டி என்பது மூன்றாம் தலைமுறை பூட்டன்_பூட்டி என்பது நான்காம் தலைமுறை சேயான்- சேயாள் என்பது ஐந்தாவது தலைமுறை,
ஓட்டன்- ஓட்டி என்பது ஆறாம் தலைமுறை, பரன் - பரை என்பது ஏழாம் தலைமுறை என்றமைந்ததே தமிழரின் தலைமுறை அடுக்கு. அதன்படி ஏழாம் தலைமுறை ஆன பரன் - பரை என்பதே பரம்பரை எனும் சொல்லானது.
பரையர்கள் பரை' யாகிய முதல் தாயின் வழிவந்த மக்கள் என்ற பொருளில் பரையர் என்று அழைக்கப்பட்ட பரையர் தொல்குடியின் தமிழ் மண்ணை பிடித்த வடுகர்கள் பறையர் என்று திரித்து சொல்லி பறையைக் கொட்டும் இழிந்த சாதியினர் என்று வரையறுத்துள்ளனர்.
பரையரை ஒரு சாதி என்பதைவிட அவர்கள் தொல்குடி என்றுதான் வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அத் தொல்குடியும் காலப்போக்கில் தொழில்வழியில் வகுக்கப்பட்டது.
(மண்ணாண்ட ) அரச பரையர், ( உழவடை செய்துவந்த) உழு பரையர், (கோட்டை அரண்களின் காவல் பணிபுரிந்த ) கோட்டைப் பரையர்,
(வில்போர் புரிந்து வந்த) அம்பு பரையர்,
(இரும்பு உருக்கி எஃகு ஆக்கிய) கட்டி பறையர், (ஆற்றில் மணலை அலசிப் பொட்டுத் தங்கம் எடுத்த) அரிப்பரையர், (நெசவுத் தொழில் செய்து வந்த ) கோழியப் பரையர் , (தச்சுத் தொழில் செய்து வந்த) தச்சுப் பரையர் (சுண்ணாம்பு சூளை வைத்திருந்த) சுண்ணாம்பு பறையர் (முரசு அறைந்து வந்த) முரசுப் பரையர், குறவப் பரையர், வலகப்பரையர் எனத் தொழில்வழியில் பரையர்கள் பல்வகை பட்டனர் , இவர்களில் முரசு பறையர்களின் வழிவந்த சிறு பிரிவினர் மட்டுமே விழாக்களுக்கும் , சாவுக்கும் பறை அடிப்பதற்கு பிற்காலத்தில் வலுகட்டாயமாக்கப்பட்டனர்.
புறநானூறு, ஞானவெட்டியான் முதல் திருமூலர், திருஞானசம்பந்தர் உள்ளிட்டவர்களின் நூல்களில் தமிழ் இலக்கியங்களில் கல்வெட்டுகளில் முழுவதிலும் பரையர், பரை என்றுதான் இருக்கின்றதேயன்றி பறையர் என்று இல்லை பரையர் என்றுதான் இருக்கிறது.
*பரையர்* என்று அடையாளப் படுத்துவோம்.
கடைக்கழக காலமாயினும், இடைக்கழக காலமாயினும் இன்ன சாதியினர்தான் பறை இசைக்க வேண்டும் என்பது ஒரு சமூக விதியோ, வழக்காறகவோ இருக்கவில்லை இதனால் பறையர் என்று பிற்காலத்தில் இழுத்துரைக்கப்பட்டோர் எல்லோருமே பறை அடிப்பது மட்டுமே தொழிலாகக் கொண்டவராய் அன்றும் இல்லை ,இன்றும் இல்லை.
தொல்குடியான பரையர்களை முரசு கொட்டுபவர்களின் வழிவந்தோர்களை வைத்து வடுக படையெடுப்பாளர்கள் மறையர்களான மூலப்பார்ப்பாரையும், பறையர் என்று பழித்தும் இழித்தும் அழைத்திருக்கிறார்கள்.
புறநானூற்றுப் *பரையர்* பறையராக்கப்பட்டது வடுகர் ஆட்சியில் தான். வடுகர் ஆட்சியில் தொல்குடிகள் பலரை பறையர் என்ற பொதுப்பெயரில் இணைத்து பறையராக்கப்பட்டார்கள்.
பரையர்கள் தொல்குடியினர் ,தமிழினத்தின் மூத்த குடியினர் என்பதை மறந்துவிடாதீர்கள்.
Comments
Post a Comment