பரையர் சாதி அல்ல பேரினம்
இனம் என்பது தங்களுக்குள் கலந்து இளம் உயிரிகளை உருவாக்கக் கூடிய உயிர்களின் தொகுதி என அறிவியல் படி வரையறுக்கப்படுகின்றது.
நாய் பேரினத்தில் உள்ள சில இனங்கள் நாய்கள் ,ஓநாய்கள், நரிகள் ஆகும் .
பூனை பேரினத்தில் அடங்கியுள்ள இனங்கள் பூனைகள் புலிகள் சிங்கம் சிறுத்தை இனங்களாகும் ,
ஓர் உயிருக்கு இரண்டு பெயர்களில் ஒன்று பேரினத்தின் பெயர், இரண்டு சிறப்புப்பெயர் அதாவது ஹோமோ சேப்பியன்ஸ் இதில் முன்னது பேரினத்தின் பெயர் பின்னது சிறப்புப்பெயர், இப்பெயரை அறிமுகப்படுத்தியவர் லின்னேயஸ் இது ஓர் அறிவியல் பெயர், இப்பெயரை அனைத்துலகம் பயன்படுத்துவது என்பது குறிப்பிடத்தக்கது.
#பேரினம்*
உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பெயரீட்டு தரநிலை
பல உயிரினங்கள் அடங்கியது ஒரு பேரினம்.
சிங்கத்தின் பேரினப் பெயர் பாந்த்தரா லியோ , பாந்த்தரா என்பது பேரினப்பெயர், லியோ என்பது சிங்கத்தின் பெயர்...
*மனிதர்களாகிய நம்மை அழைப்பது குறித்து*
ஹோமே என்பது பேரினத்தின் பெயர் சேப்பியன்ஸ் என்பது மனிதர்களின் பெயர்.
#ஹோமோ_சேப்பியன்ஸ்
ஹோமோ - பேரினம்,
சேப்பியன்ஸ் - மனிதன் , (ஹோமோ பேரினத்தைச் சேர்ந்த விலங்கு)
25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரலோபி திகஸ் ( தென்னக மனித குரங்கிலிருந்து உருவானார்)
ஹோமோ நியாண்டர்தால், ஹோமோ எரக்டஸ், ஹோமோ சேலோ என்சிஸ் , ஹோமோ ஃபுளோரோசியன்ஸ், ஹோமோ ரூடாலஃ பென்சிஸ், ஹோமோ எர்கேஸ்டர்,
ஹோமோ பேரினத்தில் இப்படி பல்வேறு இனத்தினரும் இருந்திருந்தனர், இவர்கள் அனைவரும் ஹோமோ பேரினத்தை சேர்ந்தவர்கள்,
ஹோமோ சேப்பியன்ஸ்க்கு மட்டுமே இப்போது வாழ்ந்து வருகிற விலங்கு (மனிதன்) மற்ற சேப்பியன்ஸ் அல்லாத மனிதர்கள் இப்போது இல்லை, அதிக ஆண்டுகள் பூமியில் அழியாமல் வாழும் உயிரினம் (சேப்பியன்ஸ்) மனிதன் மட்டுமே...
#பரையர்_பேரினத்தவர்
#பரையர் (அ) #பறையர்_பேரினம்
ஏழு தலைமுறை, ஈரேழு தலைமுறை, ஏழேழு தலைமுறை, என்பதெல்லாம் (பரையர்) தமிழரிடையே வழங்கிவந்த தலைமுறை கணக்கு.
1.மகன் - மகள் என்பது முதல் தலைமுறை,
2.தந்தை_தாய் என்பது இரண்டாம் தலைமுறை,
3.பாட்டன்_பாட்டி என்பது மூன்றாம் தலைமுறை,
4.பூட்டன்_பூட்டி என்பது நான்காம் தலைமுறை.
5.சேயான்- சேயாள் என்பது ஐந்தாவது தலைமுறை,
6.ஓட்டன்- ஓட்டி என்பது ஆறாம் தலைமுறை,
7.பரன் - பரை என்பது ஏழாம் தலைமுறை என்றமைந்ததே தமிழரின் தலைமுறை அடுக்கு. அதன்படி ஏழாம் தலைமுறை ஆன பரன் - பரை என்பதே பரம்பரை எனும் சொல்லானது.
பரையர்கள் பரை' யாகிய முதல் தாயின் வழிவந்த மக்கள் என்ற பொருளில் பரையர் என்று அழைக்கப்பட்ட பரையர் பேரினத்தினை பறையர் என்று திரித்து இழி செய்தும், ஓர் பேரினத்தை அல்லது தனது மூதாதையர் பரையர் பேரினத்தில் இருத்துதான் பல இனங்களாக, சாதிகளாக, குலங்களாக, நாம் உருவாகினோம் என்ற வரலாறு தெரியாமல் அல்லது அறிவியல் புரியாமல் மனிதன் தலையில் இருந்து தோன்றினான் என்றும், தோளில் இருந்து தோன்றினான் என்றும் ,தொடையிலிருந்து தோன்றினான் என்றும், பாதத்தில் இருந்து தோன்றினான் என்றும் கூறுவது அல்லது நம்புவது எத்தகைய முட்டாள்தனம் சிந்திக்கும் மனித விலங்குகளே...
நீ கீழ் என்று நினைப்பவர்கள் உனது முன்னவர்கள் தோன்றிய பேரினம் என்பதை மறவதே....
2021 புத்தாண்டு வாழ்த்துகள்....
இவண்: வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி விசிக கடலூர்
Comments
Post a Comment