தமிழா ஒன்றுபடு

மனிதன் வாழ்வதற்கு ஏதுவாக இந்த நிலப்பரப்பை  பூர்வ குடி மக்களால் சீரமைத்து உருவாக்கப்பட்டது, இந்த அரசு, அரசின் நிர்வாக கட்டமைப்புக்கள், சட்டம், விதிகள் ஆணை அனைத்தும் மனிதர்களுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்டது ஆனால் இந்த சட்டங்களும் விதிகளும், ஆணைகளும், உத்தரவுகளும்,  மனிதனுக்கு எதிராக இருக்குமேயானால் அதனை தூக்கி எரிவதும் ,எரிப்பதுமே தான் சரியானது.

மனித குலத்திற்கு விரோதமாக நீதிமன்றமாக இருந்தாலும், ராணுவமாக இருந்தாலும், சட்டமாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் அதனை அழித்து ஆதரவானதாக உருவாக்க வேண்டும்.

மனிதன் வாழ்வதற்கு வீடு இல்லை பிறகு எதற்கு அரசு, அரசாங்கம்? என்றைக்காவது இந்த நீதிமன்றம் வீடு இல்லாதவர்கள் நிலை குறித்து யோசித்து வீடற்ற அனைத்து குடிமக்களுக்கும் வீடு வழங்க அல்லது மனை வழங்க ஆட்சியாளர்களை நீதிமன்றம் எச்சரித்து இருக்கிறதா அல்லது உத்தரவிட்டு இருக்கிறதா? குடி மக்களுக்கு வீடு இல்லை, வீட்டு மனை இல்லை அதை அரசு தரவில்லை என்பது வெட்கமில்லையா, இதற்கு எதற்கு அரசு ,அரசாங்கம் ,சட்டம் மயிரு மட்ட எல்லாம், குடிமக்களுக்கு வாழவே வீடு இல்லை என்பது அவமானம் இல்லையா இதற்கு எதற்கு அரசு அரசாங்கம்...? 

இந்தியன் என்ற உணர்வை பாய்ச்சி தமிழன் நிலப்பரப்பிற்குள் மார்வாடி குஜராத்தி பணியா பேன்ற பிற மொழி பேசுகின்ற மக்கள் அனைவரையும்  குடியேறினார்கள்,  இன்று திராவிடன் என்று சொல்லி மலையாளி தெலுங்கர் கன்னடர் அனைவரையும் தமிழ் மண்ணை ஆள வைத்தீர்கள், இந்த மண்ணை மொத்தமாக தமிழர் அல்லாதவர் அனைவரைக்கும்  தாராவார்த்தீர்கள்,  இன்றைக்கு பூர்வ குடி மக்களுக்கு வாழ்வதற்கு ஒரு சென்ட் நிலம் இல்லை, இது என்ன சுதந்திர இந்தியா, இது என்ன திராவிட மாடல்,
விரைவில் தமிழ்நாடு என்பது கூட திராவிட நாடு என்று பெயர் மாறினாலும் மாறும், 

இங்கு தமிழனுக்கு வாழ்வதற்கு உரிமை இல்லை ,நிலம் இல்லை, மனை இல்லை, வீடு இல்லை என்று யாருக்கும் கவலை இல்லை , ஒரு பக்கம் நான் அக்கினியில் இருந்து பிறந்தவன் என்று பூர்வகுடி தொல் தமிழர்களை எதிர்த்து சாதி ஆதிக்கம் செய்வதும், இன்னொரு புறம் புதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக என்று சொல்லி கொண்டு, தமிழ் நிலப்பரப்புக்குள் தமிழ்தேசிய மக்களுக்குள் இருக்கும் சாதிய ஆதிக்கம், அரச பயங்கரவாத அடக்குமறைகள், பூர்வகுடிகள்  வாழ்வுரிமை  உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளை  குறித்து இவர்கள் பேசுவதில்லை, இன்னொரு பக்கம் பிராமணிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, மதவாத எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு பிராமணியத்திற்கு (சனாதனம்) சேவை செய்வதும், சனாதன சக்திகள் செய்ய வேண்டிய வேலைகளை பகுத்தறிவு முகமூடி போட்டுக் கொண்டு சமூக நீதி பேசி கொண்டு அவர்களுக்காக செய்வதே வேலையாக வைத்துக்கொண்டு இந்த தமிழனின் வாழ்வுரிமையை பறிக்கிறார்கள்,
தமிழர்களே சிந்திப்பீர்...!

ஒரு நாள் சாதி துறந்து, தமிழன் அனைவரும் தமிழனாக ஒன்றிணைவோம் அன்று நீங்கள் யாரும் இருக்க மாட்டீர்கள்...

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்