தற்போதைய சூழ்நிலையில் SC/ST மக்களுக்களின் விவாத்திற்கு...
Mu Arivudainambi 2018 பதிவு. தற்போதைய சூழ்நிலையில் SC/ST மக்களுக்களின் விவாத்திற்கு...
______________________
இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு மட்டுமே 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குகிறது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகப் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பினருக்கு 20 சதவீதம்,
ஆதி திராவிடர் வகுப்பினருக்கு 18 சதவீதம் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீதம் என்று இட ஒதுக்கீடு வழங்கபடுகிறது.
அரசியல் அமைப்பு சட்டத்தையும் மீறி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டப்படி வழங்குவதற்கு ஆராய்ந்து , தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து செயல்படுத்த ஏதுவாக, 1993 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசால், தமிழக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் (கல்வி நிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்ட முன்வடிவு 31.12.1993 அன்று சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு சட்டமாகியது.
பின்னர் இச்சட்டம் #அரசியலமைப்பு #சட்டத்தின் பிரிவு 31B-ன் கீழ் பாதுகாப்பு பெறும் பொருட்டு 1994 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் (76-வது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
#மகிழ்ச்சி
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க போராடியவர்கள் பாதுகாக்க போராடியவர்கள் போராடி கொண்டிருப்பவர்கள், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை உயர்த்தபடாமல் பார்த்துக் கொள்வார்கள்,
BC,MBC அனுபவிக்கும் 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரும் போது சமூகநீதி என்று அதற்கு பெயர் வைத்து பட்டியல் சாதியினரையும் போராட வைப்பார்கள் ஆனால் பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை உயர்த்த வழி தேட மாட்டார்கள்,
50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை 69 சதவீதமாக அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் உயர்த்தி கூடுதலாக வழங்கப்படும் 19 சதவீத இட ஒதுக்கீட்டை SC,ST,MBC,BC மக்களுக்கும் சரி பாதி நான்காக பகிர்ந்து கொடு (4.75) இதுதான் சமூக நீதி. 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் கூடுதலாக உள்ள 19 சதவீத இட ஒதுக்கீட்டை இரண்டு வகுப்பினர் அனுபவிக்கபடுவது சமூக நீதி அல்ல 19 விழுக்காட்டை நான்காக பிரித்து வழங்குவது தான் சமூக நீதி .
Comments
Post a Comment