பறையர் வரலாறு எட்கர் தர்ஸ்டன்...

மலபாரையும் கொச்சியினையும் சேர்ந்த பறையர்கள் பில்லிசூன்யம் வைப்பதில் கைதேர்ந்தவர்கள்.

திருட்டு , பேயோட்டுதல் , பகைவரை அழிக்கப் பில்லி சூன்யம் வைத்தல் ஆகியன பற்றி ஆலோசனை கேட்கப் பலரும் இவர்களை நாடி வருகின்றனர் . ஏதாவது திருட்டுப் போகுமானால் பறையரான மந்திரவாதியிடம் சென்று அதுபற்றிக் கேட்டறிவர். திருட்டுப்போன பொருளை மீட்டுத் தருவதாக நம்பிக்கையூட்டியவராக அவர் தன்னிடம் வந்தவரிடம் கொஞ்சம் நெல்லையும் சில பணங்களையும் பெற்று அவற்றைக் கொண்டு வாழைப்பழம் , தேங்காய்,  கள் , கற்பூரம் , சாம்பிராணி , அரிசி மாவு ஆகியன வாங்குவார். குளித்தபின் அவர் அவற்றைத் தன் வழிபடு தெய்வமான பறக்குட்டிக்குப் படைப்பான். அது ஒரு கல்லுருவில் அவன் குடிசையின் முன் நடப்பட்டிருக்கும். இரும்பாலான கிலுகிலுப்பையை ஆட்டியபடி தன்  குரல் உடையும்வரை அவன் அத்தெய்வத்தின் அருளைப் பெறப் பாடுவான் . இழந்த பொருளானது வந்து சேரவில்லையாயின் அவன் தெய்வத்தை அவன் தீவிர வழிபாட்டில் ஈடுபடுவதோடு தெய்வ ஆவேசம் உற்றவனாக மூக்கிலும் வாயிலும் குருதி வரப் பெற்றவனாவான். 
ஒருவன் நோயுறப் பெறுவானாயின் முதலில் ஒரு சோதிடனையும் பின்னர் அவன் கூறும் மந்திரவாதியினையும் அணுகி நோயின் காரணத்தை அறிய முற்படுவர் . மந்திரவாதி ஒரு பனையோலை அல்லது செம்புத்தகடு அல்லது வெள்ளித் தகட்டில் இயந்திரம் எழுதி , மந்திரம் ஓதி , அதனை மடித்துச் சுருட்டி ஒரு கயிற்றில் கட்டி , நோயுற்றவர் பெண்ணாயின் கழுத்திலும் , ஆணாயின் அரைஞாண் கயிற்றிலும் அணிவிப்பான் . சிலபோது மந்திரம் செபித்தபடி விபூதியினை நோயுற்றவர் மீது போடவோ நெற்றி அல்லது மார்பில் பூசவோ செய்வர் .. இவர்கள் கூறும் மந்திரங்களுக்குப் பின்பவருவனவற்றை உதாரணமாகக் கூறலாம் . ' ஆயிரம் சடையுடையவளுக்கு என் வந்தனம் . ஆயிரம் கரங்களாலும் மூன்று உலகங்களையும் நிறைந்து வெளிப்படச் செய்பவளுக்கு என் வந்தனம் . ஓ ! தாயே ! தேவி , உன் பேரருள் நிரம்பிய ஆன்மாவிலிருந்து இங்கு எழுந்தருள்வாயாக . ஓ ! சுந்தர யக்ஷ்சி சுவாஹா " " தெய்வத்திற்கு வந்தனம் . தலையில் சிங்கத்தைத் தாங்குபவனே அல்லது உடலின் மேற்பகுதி சிங்க உருவாக இருப்பவனே ! உன் மூலதாரத்தில் பறவைகளின் அரசனும் விட்டுணுவின் வாகனமுமான கருடன் வீற்றிருக்கின்றான் . இலட்சுமணனை இடப்பக்கத்திலும் கொண்டுள்ளான் . அவனைச் சுற்றிலும் மேலும் கீழும் எங்கும் ஸ்ரீ நாராயணனைக் கொண்டுள்ளான் . சுவாஹா ! நீ எங்களைக் கண்பார்த்துக் காப்பாயாக.
            பகைவரைக் கொல்லும் மரணக் கிரியைகளை நடத்துவதில் பெயர்போனவர்கள் பறையர்கள் . இதற்காகப் பலவழிமுறைகளை இவர்கள் கையாளுகின்றனர் . பின்வருவன அவற்றுக்கான எடுத்துக்காட்டுகளாம்: 
            1. பகைவனின் உருவினை மெழுகால் செய்தல் . அதனை வலது கையில் ஏந்தியபடி பாசிமணி மாலையினை இடக்கையில் எடுத்துக் கொள்ளுதல் . உரிய சடங்கு முறைப்படி பின் அந்த மெழுகு உருவத்தை எரித்தல் . இதற்குப் பின் இருவாரங்களுக்குள்ளாகப் பகைவன் இறப்பான் .
             2. சுடுகாட்டிலிருந்து மனித எலும்பு ஒன்றினை எடுத்துக் கொள்ள வேண்டும் . அதனை வைத்துப் பின்வரும் மந்திரத்தினை ஆயிரம் முறை ஓத வேண்டும் : - " ஓ ! பன்றி போன்ற முகத்தையுடைய தேவியே ! அவனைப் பிடிப்பாயாக . அவனை உனக்கு உரிய பலியாகக் கொள்வாயாக ! அவன் குருதியினைக் குடி ; அவன் மாமிசத்தைப் புசி . சாவின் உருவான மலையாள பகவதி " இதன்பின் அந்த எலும்பினை எதிராளியின் வீட்டினுள் வீசியெறிந்து விட்டால் அவன் கேடுறுவது உறுதி..
            பறையர் மேற்கொள்ளும் மனிதர் உடலை ஒடிக்கும் மாந்திரிகம் ஒடி எனப்பெயர் பெறுகின்றது . இந்த மாந்திரீகத்தில் கைதேர்ந்தவர்கள் தங்களைக் கண்ணுக்குப் புலனாகாதபடி மறைத்துக் கொண்டு , காளை , பூனை , நாய் போன்ற உருவங்களைத் தாங்கித் திரியும் ஆற்றல் பெற்றவர்கள் . நள்ளிரவில் கருவுற்றிருக்கும் பெண்களை அவர்களுடைய வீட்டை விட்டு வெளியே வரும்படி செய்து அவர்கள் கருப்பையில் உள்ள கருவினை வெளியே எடுத்தபின் அதில் வேறு பொருட்களைத் திணித்து நோயுற்று இறக்கும்படி செய்வர் . இதேபோல மக்களை ஓரிடம் விட்டு மற்றோரிடத்திற்குக் கடத்தும் ஆற்றல் பெற்றவர்கள் . இந்த மாந்திரீக முறையினை மேற்கொள்ள விரும்பும் ஒரு பறையர், ஒரு குருவினைத் தேடிப் பிடித்து , அவர் கால்களில் விழுந்து வணங்கித் தனக்கு இக்கலையினைக் கற்றுத் தரும்படி வேண்டுவான் . அவர் அவனிடம் இதனை மேற்கொள்ள வேண்டாம் எனக் கூறி முதலில் அவன் மனதை மாற்றப் பார்ப்பார் . சீடன் விடாப்பிடியாக இதனைக் கற்கத் தனக்கு உள்ள விருப்பத்தை வெளிப்படுத்தியபடி இருப்பான் . பின் அவன் இதற்குத் தகுதி வாய்ந்தவனா என்பதனைக் குரு பல சோதனைகளின் வழி ஆராய்வார் . அவன் நள்ளிரவில் காடுகளுக்கும் மக்கள் நடமாட்டமற்ற இடங்களுக்கும் தன் குருவின் பின் செல்வான் . அவனுடைய குரு திடீரெனத் தன்னை மறைத்துக் கொண்டவராக சினங்கொண்ட காளையாக , வெறிநாயாக , மதங்கொண்ட யானையாக அவன் முன் தோன்றுவார் . புதிதாக இக்கலையினைக் கற்றுக்கொள்ளப் புகுந்த அவன் இந்தக் காட்சிகளால் மனம் நடுக்குறாதவனாக உறுதியாக நிற்றல் வேண்டும் . விசித்திரமான அஞ்சத்தக்க ஒலிகள் மிச்சமிருக்கும் என அவர் நம்பும் காட்டில் அவனை அவன் குருவானவர் ஒரு இரவுகள் தனித்து இருக்கும்படி ஏவுவார் . அந்த ஒலிகளால் மனம் கலங்காதவனாக  அவன் இருத்தல் வேண்டும்.  இத்தகைய சோதனைகளுக்கு ஈடுகொடுத்தவனாக அவன் . தான் விரும்பிய அந்தக் கலையைக் கற்றுக் கொள்ளத்தகுதி வாய்ந்தவன் என்பதனை மெய்ப்பிக்க வேண்டும் . அதன்பின் அவனுடைய குரு ஒரு நல்ல நாளில் அவர் வழிபடும் தெய்வமான , அவருக்கு மாந்திரீகத்தில் உதவும் நீலிக்கு கல்லடிக்கொடெ நீலி எனவும் படுவாள் - வழிபாடு நிகழ்த்தி அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொள்வார் . அவர்கள் இறைச்சியினைத் தின்பதோடு மதுவினையும் பருகுவர் . அதன்பின் அவர் தன்சீடனுக்கு மாந்திரீகம் செய்ய உரிய சக்தியினைத் தருகின்ற பிள்ளைத் தைலம் மற்றும் அங்கொலத் தைலம் ஆகியவற்றைத் தயாரிப்பது எப்படி எனக் கற்றுத் தருவார் . பிள்ளைத் தைலம் தயாரிக்க மந்திரவாதியின் சாதியினைச் சேராத ஒருத்தியின் கருப்பையிலிருந்து எடுக்கப்படும் ஆறேழு மாதக் கரு தேவைப்படும் . நல்ல சகுனங்கள் தோன்றுவதாக நிச்சயித்தபின் நள்ளிரவில் புறப்பட்டுத் தான் முன்பே கண்டு முடிவுசெய்திருக்கும் கருவுற்றுள்ள பெண்ணின் இல்லத்தை அடைவான் . அங்கு . அவன் மஞ்சளும் எலுமிச்சம்பழச்சாறும் உள்ள தேங்காயினை ஆட்டியபடி தேவதையின் அருளை வேண்டி . மந்திரம் செபித்தவனாக அந்த வீட்டைச் சுற்றி நடந்தபடி இருப்பான் . தரையில் யந்திரங்களையும் வரைவான் . அவன் மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டவளாக அந்த வீட்டில் உள்ள பெண் வெளிப்படுவாள் . வீட்டின் கதவு பூட்டப்பட்டிருப்பினும் தன் தலையால் கதவை மோதி இடித்து அதனைத் திறந்தவளாக அவள் வெளிப்படுவாள் . மந்திரவாதி அவளைத் தனியே ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று அவளை நிர்வாணமாக்கித் தரையில் படுக்கச் செய்வான் . ஒரு சுரைக்குடுக்கையினை அவன் அவள் பெண்குறியருகே பிடிப்பான் . அவள் கருப்பை சுருங்கி அதிலுள்ள கரு சுரைக்குடுக்கையில் விழும் . சில சமயங்களில் கருப்பையில் குப்பையைத் திணிப்பான் எனவும் அதற்கு உள்ளாகின்ற பெண் உடனே இறப்பாள் எனவும் கூறப்படுகிறது . கருப்பையிலிருந்து வெளியாகும் கருவானது தரையில் படுமானால் அதனைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்தின் ஆற்றல் குறையும் என்பதால் அதனைத் தரையில் படாதபடி பார்த்துக் கொள்வர் . அந்தக் கருவை சிறு துண்டங்களாக்கி நெருப்பில் வாட்டுவர் . பின் துளையோடு கூடிய ஒரு பாத்திரத்தில் அதனையிட்டு அதன் கீழ் மற்றுமொரு பாத்திரத்தை அமைத்து அந்த இரண்டு பாத்திரங்களையும் தண்ணீருள்ள பெரிய பாத்திரம் ஒன்றில் வைத்து அதனை அடுப்பில்  ஏற்றிச் சூடேற்றுவர் . கருத்துண்டங்களிலிருந்து கசியும் சாறானது கீழே உள்ள பாத்திரத்தில் சொட்டும் . மனிதன் மண்டையோடு ஒன்றினைத் தூளாக்கி அதனை அந்தச் சாறின் ஒரு பகுதியோடு கலப்பர் . இந்த கலவையால் மந்திரவாதி தன் நெற்றியில் பொட்டிட்டுக் கொள்வான் . கொஞ்சத்தை உடலின் பல பகுதிகளிலும் பூசிக் கொள்வான் . பின் சிறிது பசுஞ்சாண நீரைக் குடிப்பான் . அதன்பின் அவன் தான் விரும்பிய விலங்கின் உருவத்தை எடுத்துத்தான் யாரைக் கொல்ல வேண்டும் அல்லது காயமுறச் செய்ய வேண்டும் எனக் கண்டு கொண்டு அவர்களுக்குத் தீங்கிழைப்பான் . மந்திர சக்தி வாய்ந்த அங்கொலத் தைலம் அழிஞ்சில் ( Alangium lemarcii ) மரத்திலிருந்து எடுக்கப்படுவது . இந்த மரத்தில் பழங்கள் மிகுதியாக இருக்கும் . இவற்றுள் ஒன்று இடம்விட்டு இடம் பெயரக் கூடியதாகவும் உயிராற்றல் உடையதாகவும் இருக்கும் என நம்பப்படுகிறது . இரவில் அத்தகைய பழம் மரத்திலிருந்து தரைக்கு வந்தபின் மீண்டும் மரத்தில் உரிய இடத்தில் சென்று ஒட்டும் என நம்புகின்றனர் . அத்தகைய பழம் எது என்பதைப் பேய்கள் அறிந்திருக்கும் . அல்லது திறமைவாய்ந்த ஒருவன் இரவில் மரத்தடியில் கண்காணித்தவனாக இருந்து அதனைக் கண்டுபிடிக்கலாம் . அந்தப் பழத்தைக் கண்டு எடுத்தவுடன் அதிலிருந்து பிள்ளைத் தைலம் தயாரிப்பது போலவே தைலம் தயாரிக்க வேண்டும் . அதனை ஏழு மணி நேரத்திற்குள்ளாகச் செய்து முடிக்க வேண்டும் . அந்தத் தைலத்தை கொண்டு நெற்றியில் பொட்டிட்டுக் கொள்பவர்கள் விரும்பிய வண்ணம் விலங்குகளின் உருவத்தை எடுத்துக் கொள்ளலாம். 
ஒருவனுக்குத் தொலைத்துக் கட்ட வேண்டிய பகைவன் இருப்பானாகில் அவன் பறையர் சாதியினைச் சேர்ந்த மந்திரவாதியினை அணுகி அவனிடம் அந்தப் பகைவனுடைய பெயரைத் தெரிவிப்பான் . அவனுடைய வீடுள்ள இடத்தை முதலில் தெரிந்து கொண்டு இரவில் அவ்விடத்தை நோக்கிப் புறப்படும் பறையர் எதிரில் வருபவர்களை ஒரே அடியில் கொன்று வீழ்த்துவான் . அந்தப் பகைவன் வீட்டினைப் பறையர் அடையும்போது அவன் திகைத்த ஒரு நிலையில் வீட்டைவிட்டு வெளியேறுவான் . தலையில் ஒரு போடுபோட்டு அல்லது இரண்டு குச்சிகளுக்கிடையே கழுத்தை நெரித்து அவனைக் கொல்வான். சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒடி மாந்திரீகத்தை கொச்சி : மாநிலத்தின் வட பகுதிகளிலும் மலபார் மாவட்டத்தின் பாலக்காடு, 
4 வள்ளுவநாடு வட்டங்களிலும் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகத் தெரிகின்றது . இன்றும் அதனை முற்றுமாகக் கைவிட்டு விட்டனர் எனக் கூறமுடியாது . கருவினை வெளிப்படுத்துவதும் ஆட்களைக் கொன்று போடுவதும் பற்றியதாகத் தகவல்கள் அரசு அலுவலர்களிடமும் பண்ணையார்களிடத்தும் மற்றவர்கள் மேலும் கொண்டுள்ள அச்சங்காரணமாக வெளியாவதில்லை . நாயர் ஒருவன் இரண்டு நல்ல எருதுகளை உடையவனாக இருந்தான் . அவற்றை ஒரு மாப்பிள்ளா விலைக்கு வாங்க விரும்பினான் . அந்த நாயர் அவற்றை விற்க விரும்பவில்லை . அந்த மாப்பிள்ளா அவற்றைக் கவர்ந்து வரச் சிலரை ஏற்பாடு செய்தான் . அந்த நாயர் வீட்டில் இல்லை என்பதனைத் தெரிந்துகொண்ட அவர்கள் அவன் வீட்டிற்குச் சென்றனர் . அங்கே ஒரு பறையரும் அவர் மனைவியும் ஒடி மாந்திரீகம் செய்தவர்களாக ஒரு இளம் பெண்ணை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து தரையில் படுக்குமாறு வற்புறுத்தக் கண்டனர் . அவர்கள் அந்தப் பறையரைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டனர் . அவருக்கும் அவர் மனைவிக்கும் நல்ல அடியுதை  தரப்பட்டது . இதனால் தன் மனைவி காப்பாற்றப்பட்டதற்கு மகிழ்ந்த அந்த நாயர் திருட வந்த அவர்களுக்குத் தன் எருதுகளைப் பரிசாகக் கொடுத்துவிட்டான் என்ற இந்தக் கதை இப்பொழுதும் மக்களிடையே வழங்கி வருகின்றது.

காந்தாரா திரைப்படத்தில் வரும் கதையின் நாயகனைப் போல அப்போது பறையர் ஒருவர்  சாமி வேடம் போட்டுள்ள புகைப்படத்தை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் எடுத்துள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்