புத்தாண்டு வாழ்த்துகள்

ஒவ்வொரு ஆண்டும் எனது இந்த பதிவு பொருந்துகிறது அதனால் இந்த 2023  ஆண்டும் உங்களுக்காக பதிவிடுகிறேன், இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

#எதிர்_நடவடிக்கைகளும், 
#நியாயமில்லாத_அதிருப்தியும், 
#என்னை_சீண்டும்
#சுடு_சொற்களும்_என்னை_ஒன்றும் #செய்துவிடவில்லை.
#அவர்கள்_என்_கொள்கைகளை #தாக்குகிறார்களே_ஒழிய_என்னை #தாக்கவில்லை,
அவர்களை நான் நினைத்துக் கூட பாக்க மாட்டேன் ஏனெனில் எனக்கு அண்ணலும், அண்ணன் திருமா கொடுத்த அரசியல் தெளிவும்  இருக்கிறது.
நான் யாருடைய அபிப்பிராயமும் பெரிது என்று நினைத்து என்னை தாழ்த்திகொண்டும், பிறர் கூறும் பாராட்டையும், புகழையும், ஆமோதிப்பையும் எதிர்பார்த்து என் பணியை செய்யவில்லை. 
அப்படி நான் எதிர்பார்த்து பணி செய்வது  பிறரால்  ஆட்டுவிக்கப்படும் பாதையில் பயணிப்பேன் என்பதை நான் அறிவேன்  ஆக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் என் அண்ணன் திருமாவின் கொள்கையும் கோட்பாடுமே என்னை வழி நடத்தும். 
என் எண்ணம்  எதுவோ அதுவே என் சூழ்நிலை அதற்கான குணநலன்களுடன் நான் எமது போராட்ட பாதையில் செல்கிறேன்.
சிலரை  வேண்டுமென்றே எதிர்க்கிறேன் என்று பிறர் நினைக்ககூடும்.
தோழர்களே உங்களை திருப்திப்படுத்துவதற்காக நான் என் நடைமுறையை மாற்றிக்கொள்ளமுடியும். அப்படி மாற்றினால் அப்போது நான் உண்மையானவனாக இருக்கமாட்டேன் அதை நீங்கள் (சரியானவர்கள்) விரும்பமாட்டீர்கள்.
சில சூழ்நிலைகள் எனக்கு எதிராக இருக்கலாம் ஆனால் அது நிரந்தரமில்லை,
இத்தகைய சூழ்நிலைகளை வெல்லும் அறிவியலையும் அரசியலும், அண்ணனிடம் கற்றுக்கொண்டுள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். 
வெறும் விவாதத்தினால், அல்லது ஆதாரம் காட்டியோ 
இச்சூழ்நிலையிலையை வெல்ல இது சரியான நேரமில்லை 

ஏனெனில் எதிரிகள், சில நண்பர்கள் எந்த வாதத்தையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இல்லை, அவர்கள் மனத்திலே அறிவுக்கு முன் சுவர் எழுப்பி அமர்ந்துள்ளார்கள் இந்த நிலையில் அவர்களின்  ஆமோதிப்பை பெற முயல்வது வீண்வேலையாக அமையும்
இருப்பினும் தோழமை கூறுகளை செழுமை படுத்த பாடாற்றுவேன். 
நன்றி! நன்றி!! நன்றி!!!
#இனிய_புத்தாண்டு_வாழ்த்துக்கள்...
தோழமையுடன்: 
ஞானம் #மு_அறிவுடைநம்பி 
விசிக கடலூர்-1

என் செயல்களின் நடைமுறையில் தவறுகள் இருந்தால் திருத்தி கொள்கிறேன்.
_____।____।____

விமர்சனம் என்பது அறிவின் உணர்ச்சியல்ல. அது உணர்ச்சியின் அறிவு. அது ஒரு பெரிய ஆயுதம்.
எப்போதும் நாம் நுட்பமான,
யதார்த்த நிலைமைகளைப் பரிசீலிக்க வேண்டும். இத்தகைய பரிசீலனை மற்றும் தேர்வுகளின் அடிப்படையில் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். 
-காரல்மார்க்ஸ்

Happy new year 2023

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்