பறையர்

பிப்ரவரி 16 
மெட்ராஸை கைப்பற்ற நடந்த போரில் பிரெஞ்சு படையை தோற்கடித்து வீரப் பறையர்கள்
வெற்றி பெற்ற 260 வது ஆண்டு விழா
மற்றும்

*மெட்ராஸை காக்க வீர மரணமடைந்த வீரப் பறையர்களின் 260 வது ஆண்டு நினைவேந்தல்*

ஐரோப்பியாவில் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே போர் நடைபெற்றதால் இங்கேயும் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுகார்களுக்கும் போர் மூண்டது.

கடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையில் இருந்து 1745 முதல் 1758 வரை ஆங்கிலேயர்கள் தமிழகத்தின்  முதல் தலைநகரமாக கடலூரை பயன்பாடுத்தினார்கள்.

பிரெஞ்சு படைத் தலைவரும் கவர்னருமான டுப்ளே (Dupleix) என்பவர் மட்டும் நான்கு முறை கடலூர் புனித டேவிட் கோட்டையின் மீது  தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

லாலி (lally) என்னும் பிரெஞ்சு படைத் தலைவர் 1758 சூன் 2 ஆம் நாள் பிரிட்டிஷார் கட்டிய முதல் கோட்டையான கடலூர் புனித டேவிட் கோட்டை மீது பெரும் தாக்குதல் நடத்தி கடலூரை கைப்பற்றினார்.

பிரெஞ்சுகாரர்கள் கடலூரை கைப்பற்றியதால் மெட்ராஸ் புனித ஜார்ஜ் கோட்டை பிரிட்டிஷ் ஆட்சிக்கு முக்கிய இடம் வகித்தது.

எனவே பிரெஞ்சுப்படை சென்னைக்குள் நுழைந்தனர்,  செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சு படை முற்றுகையிட்ட நிலையில் பிரிட்டிஷாரிடம் போதுமான துருப்புக்கள் இல்லாத நிலையில் ஜெனரல் பிகோட் என்பவர் பிளாக் டவுன் என்று அழைக்கப்பட்ட பறையர் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பாதுகாக்க பறையர் சமூக தலைவர்களிடம் உதவிகேட்டார் இதனடிப்படையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பறையர் பேரினத்தின் இளைஞர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சென்று பிரிட்டிஷ் படையினருடன் சென்னையை காக்கப் போரிட்டனர். பிரெஞ்சு படையினரால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை தகர்க்வோ மெட்ராஸை கைப்பற்றவோ முடியாமல் சுமார் மூன்று மாத கால போருக்குப்பின் 1759 பிப்ரவரி 16 அன்று பறையர் படையிடம் தோற்று பின்வாங்கி சென்றது பிரெஞ்சு படை.

நடைபெற்ற போரில் நூற்றுக்கணக்கான பறையர்கள் வீரமரணம் அடைந்தனர். பறையர்களால் பிரிட்டிஷ் ஆட்சி நிலைப்பெற்றது. இதனால் பறையர்களின் வீடுகளுக்கு பிரிட்டிஷார் வரிவிலக்கு அளித்தனர்.

பீமா கோரேகான் யுத்தம் நடப்பதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் பறையர்கள் பிரெஞ்சு படையினரிடம் யுத்தம் நடத்தி சென்னையை காத்துள்ளனர், வீரம் செறிந்த போரை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய போர் பறையர்களின் வீரத்தை நாம் பெருமையாக போற்றுவோம்.
பறையர் பேரினத்தின் வீரத்தை இன்றைய தலைமுறைக்கு எடுத்து செல்ல நாம் அப்போரில் மடிந்த பறையர் இனத்தின் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்னை போர் நினைவு சின்னத்திற்கு செல்வோம்

வீரப் பறையர் இனமே வரலாற்றை மீட்டெடுப்போம் வாருங்கள்......

தோழமையுடன்...
ஞானம் *மு.அறிவுடைநம்பி* விசிக கடலூர். 1

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்