பண்பாட்டு புரட்சி தேவயை உணர வேண்டும்
அம்பேத்கரியலின் வழியே அரசியல் அதிகாரம்,பொருளாதார உரிமைகள், சமூக விடுதலை அடைய முடியும்.
பொருளாதாரம், சமூகவியல், பண்பாட்டு கட்டமைப்புகளில் மாற்றங்கள் நிகழ வேண்டும் அதற்கான போராட்டங்களை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
இவை அனைத்தையும் அடைய நாம் போராடும் இதே வேளையில் மிக முக்கியமான கடமை
மக்களிடையே நிகழ்த்த வேண்டியது பண்பாட்டு புரட்சி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இதுதான் அம்பேத்கரிசம் என்பதை நாம் தெளிவு பெறவேண்டும்.
அம்பேத்கரிசத்தை மற்றவர்கள் படித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தி கொள்கிறார்கள்.
இந்த வேலையை நாம் தமிழர் கட்சி சீமான் அவருக்கு ஏற்றவாறு அவர்களை பலபடுத்தி கொள்ள பண்பாட்டு தளத்தில் கவனம் செலுத்துகிறார் நாம் அதை விமர்சிக்காமல்
நாம் என்ன வேலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து பணியாற்ற வேண்டும்.
பண்பாட்டு புரட்சி அரசியல் புரட்சியாக மாறும்
Comments
Post a Comment