மண்ணின் மைந்தர்கள் வெளியேற்றம்
சென்னையில் சேரி மக்களை வெளியேற்றும் தமிழக அரசு
-----------------------------
தெலுங்கர்கள் கன்னடர்கள்,மலையாளிகள்,மார்வாடிகள், மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் அவர்களின் குடும்பங்கள் உறவுகள் மற்றும் அவர்களின் சாதிகளின் கையில் தமிழக நகரங்கள், பொருளாதார மையங்கள் அனைத்தும் இருக்கிறது .
அரசு சொத்துக்கள் அரசு வணிக வளாகங்கள், மொத்தத்தில் திராவிட , தமிழ் அரசியல் என்று சொல்லி தலித்துகளை ஏமாற்றி தமிழக அரசையே அவர்களின் கட்டுப்பாட்டில் மாறி மாறி வைத்துக்கொண்டு தனது சாதியை வளர்த்து வருகிறார்கள்.
இன்று சென்னையில் பூர்வகுடி மக்களுக்கு வாழ்வதற்கு உரிமையில்லை
நாளை தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களை விட்டு,பேரூராட்சிகளை விட்டு, ஊராட்சிகளை விட்டு வெளியேற்றுவார்கள் எச்சரிக்கை தேவை ஆழமான அழுத்தமான உணர்வு பூர்வமான அறிவு பூர்வமான தலித் சிந்தனையில் அணி திரள வேண்டும் சிறுத்தையாய் சீற்றம் கொள்ளவேண்டும் .
தலித் அரசியலே பொது (மைய)அரசியலாக மாற வேண்டும் அதுவே ஆட்சி அதிகாரத்தை நோக்கி நகர்த்தும்
இன்றைக்கு இருக்கும் பொது அரசியல் என்பது தலித் அல்லாத சாதி நலன் அரசியல் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
தலித் கோரிக்கைகள் பொது கோரிக்கையாக மாற்ற வேண்டும் போராடுங்கள்
Comments
Post a Comment