நீதிமன்றமும் தலித்துக்களும்

நீதிமன்றமும் தலித்துக்களும் என்ற தலைப்பில் தலித் வழக்கறிஞர்கள் விவாதம், கலந்துரையாடல், கருத்தரங்கம், ஆய்வுகள் செய்யுங்கள் நமக்கு இழைக்கப்படும் அநீதி புரியும்..... நமது கோரிக்கை என்ன என்பது புரியும்.

சாதிய வாதிகள்  நீதிபதிகளாக அமர்ந்து கொண்டு இருப்பவர்களிடம் தமிழ் மொழியில் வழக்காடினால் நீதி கிடைத்துவிடுமா?

பஞ்சமி நில உரிமைக்காக, தனியார் பள்ளிகள் , கல்லூரிகள், தனியார் மருத்துவ மனையில் அடிக்கும் கொள்ளைகளுக்கு எதிராக தலித் வழக்கறிஞர்களே போராடுங்கள்,

இந்து அறநிலைய துறை சொத்துக்களை  , உள்ளாட்சி அமைப்புகள் கீழ் உள்ள சொத்துகள், பொதுவாக அரசு சொத்துகள் தமிழக முழுக்க தலித் அல்லாதவர்கள் மட்டுமே அனுபவிக்கிறார்கள் இதை குறித்து உங்களால் போராட முடிந்ததா ....
தமிழ் மொழி, ஈழம், தமிழ் தேசியம் போன்றவற்றை எல்லாம் பேசுகிற நீங்கள் தலித்துக்களுக்காகவும் பேசுங்களேன்....

வன்கொடுமை வழக்குகள் அனைத்தும் கீழை நீதி மன்றங்களில் தள்ளுபடி செய்யப்படுகிறது அவ்வழக்குகளை அரசு மேல்முறையீடு செய்ய எதையாவது செய்யலாம் அதனை விடுத்து தேவை இல்லாத கோரிக்கைக்கு அழுத்தம் தருகிறிர்கள்

எது தமக்கான கோரிக்கை என்பதை தேடுங்கள்.....

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்