பாரட்டுதல்
#பாராட்டுதல்_என்பது_மனித #மேம்பாட்டுக்கான_ஒரு_மாபெரும் #மருந்து.
பாராட்டுகளும் பிறரை நேசிப்பதும் தமிழ்சமூகத்தில், கல்வி நிறுவனத்தில் சமூக மாற்றத்திற்கு போராடும் இயக்கங்களுக்குள், ஒருவர் ஒருவருக்குள் அறவே இல்லை பாரட்டுதல் இருக்கும் குடும்பத்தில் மாணவர்கள் நல்ல ஆரோக்கிய சிந்தனையுடன் வளர்ச்சி அடைவார்கள், பல வெற்றிகளை பெறுவார்கள் என்பது அறிவியல் உண்மை.
20 ஆண்டுகளுக்கு முன்பு சக தோழன், சக மனிதன் , தன் உறவுக்காரன் நண்பன் தனது கட்சிக்காரர் சோர்வாக, சோகமாக, முக மலர்ச்சி இன்றி அதாவது மகிழ்ச்சி இன்றி காணப்பட்டால் என்னப்பா ஆச்சி ஏன் இப்படி இருக்க என்று கேட்கிற மன நிலை இருந்தது, ஏன் என்று கேட்கிற மனம் இருக்கே அது அனைத்து பிரச்சினைகளையும் , துன்பத்தையும் சரி செய்யும் மருந்தாகும் ஆனால் இப்போது சக தோழனின் முகத்தில் இரத்தம் வடிந்தால் கூட என்ன நடந்தது என்று கேட்க கூட மனம் இல்லை, பணம் கொடுக்க வேண்டாம் ,பொருள் கொடுக்க வேண்டாம், என்னப்பா ?ஏன் ? என்ன பிரச்சினை? நலமா? சாப்பிட்டியா இப்படி நல்ல மனதோடு குணத்தோடு பிறரை நேசிக்க கற்று கொள்ள பழகுங்கள்.
அன்பு இல்லாத, பொதுநலன் இல்லாத எதுவும் அழிந்து போகும். அழிவை நோக்கிய சமூகமாக நாம் நகர்ந்து கொண்டு இருக்கிறோம் மாறுங்கள் பிறரை நேசியுங்கள் அனைத்தையும் அரசியலாக அணுகுகிறோம்.
அன்பினால் இனைவோம் எமது தோழர்களுக்கு
#காதலர்_தின_வாழ்த்துகள்
தோழமையுடன்:
#ஞானம் #மு_அறிவுடைநம்பி
#விடுதலைச்_சிறுத்தைகள்_கட்சி
கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர்
Comments
Post a Comment