பனங்காட்டு காலனி வரலாறு
Mu Arivudainambi
42 mins · Edited ·
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரஞ்சுகாரர்கள் கைபற்றிய போது ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களின் ஆளுமையின் கீழ் இருந்த கடலூர் நகரை புனித டேவிட் கோட்டையை விலைக்கு வாங்கினார்கள்.
அதன்பிறகு கடலூரை தென்பிராந்தியத்தின் தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.
ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் ஹைதர் அலி கட்டுபாட்டில் இருந்தது, அவர்களின் கட்டுப்பட்டில் இந்நகர் இஸ்லாமா பாத் என்றும் வழங்கப்பட்டது.
1783 கடலூர் போருக்கு பின் கடலூர் நகரை ஆங்கிலேயர்கள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
கடலூர் நகராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களின் பழமையான கிராமம் பனங்காட்டு காலனி , இந்த சேரிக்கு மற்றொரு பெயரும் உண்டு தூக்குமரத்து சேரி என்பது, ஆங்கிலயே ஆட்சி காலங்களில் இப்படித்தான் அழைப்பார்கள்.
300 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பறையர் குடிகள் வாழ்ந்து வருகிறார்கள் .
ஆங்கிலயே காலம் தொட்டு இன்று சுதந்திர இந்தியா வரை
ஆட்சியாளர்கள் பனங்காட்டு காலனி மக்களை குற்ற குணத்தவராக பார்த்ததால் அணுகியதால் பல பொய்யான வழக்குகள் புனைந்ததால் அச்சேரியைவிட்டு மக்கள் பலர் வெளியேறினர்.
ஒடுக்கப்பட்ட மக்களான அருகில் உள்ள குப்பத்துமக்களின் கிராமங்கள் அவ்வப்போது ஒன்று சேர்ந்து அடிக்கடி தாக்குதல் தீவைப்பு நடத்தியதாலும் அங்கு வாழ்ந்த பூர்வகுடி வேறு இடங்களுக்கு புலம்பெயர்தனர்
அருகில் உள்ள சேரிகளுக்கு தாய்கிராமம் பனங்காட்டு காலனியே ஆகும் .
தற்போது 180 குடும்பத்தினர்தான் அங்கு வசித்து வருகின்றனர். மனிதன் வாழ தகுதி இல்லாத அந்த காட்டை திருத்தி, மேடு, பல்லத்தை சமமாக்கி மனிதன் வாழ்வதற்கான ஏதுவான இடமாய்
சேரி மக்கள் மற்றிய பிறகு கடந்த 10 ஆண்டுகளாக தொடர்கிறது அரசின் ஆக்கிரமிப்பு,
பல சமூக மக்களை குடியமர்த்தி வருகிறது அடுக்கு மாடி கட்டிடங்களும் கொண்டுவர இருக்கிறது .
மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக அவ்விடத்தில் வாழும் மக்களுக்கு பட்டா கூட இன்று வரை வழங்கவில்லை ஆகையால்
பனங்காட்டு சேரி மக்களுக்கு அம்மண் உரிமையில்லையாம்
அரசுக்குத்தான் உரிமையாம்,
கூடலூராக இருந்தபோதும், கூடல்மாமங்கலமாக இருந்தபோதும், இஸ்லாமாபாத்தாக இருந்தபோதும், கடலூராய் இருந்து கொண்டு இருக்கும் போதும் வாழ்ந்துகொண்டு இருக்கும் பூர்வ குடி பறையர்களை விரட்டியடிக்க முயற்சிப்பதை தடுப்போம்
அரசு கட்ட இருக்கும் வீடுகளில் 300 வீடுகள் தலித் மக்களுக்கு வழங்க கோரியும்,
வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க கோரியும்,
குடி நீர் உள்ளிட் அடிப்படை வசதிகள் கேட்டும் போராட அணி திரள்வோம் . தோழமையுடன். மு.அறிவுடைநம்பி
Comments
Post a Comment