முக நூல் பதிவுகள்

Mu Arivudainambi
November 4, 2012 at 2:24pm · Edited ·
எனது தோழன் முகநூல் வழியாக
கேட்ட கேள்விக்கு சுறுக்கமான பதில்......

முரண்பாட்டுக்கு மூலம் வேறுபாடு ஆகும் அதுதான் துவக்க நிலையாக இருக்கின்றன,

சில வேறுபாடுகள் முரண்பாடுகள் நிலை எட்டமால் இருக்கவே செய்கின்றன,

எல்லா வேறுபாடுகளும் முரண்பாடாகி விடுவதில்லை,

வேறுபட்ட போக்குகளை கொண்ட வேறுபாட்டையே முரண்பாடு என்கிறோம்,

உதறித்தள்ள வேண்டிய ஒழித்துக் கட்டவேண்டிய வேறுபாடுகள்தான் முரண்பாடாகின்றது,

மாற்றங்களையும் வளர்ச்சியையும் உள்ளடக்கிய வேறுபாட்டையே முரண்பாடு என்கிறோம்,

முரண்பாடுகள் எங்கும் நிறைந்தவை என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். .__ __
முரண்பாடு என்பது
எதிரெதிர் சக்திகளின் பரஸ்பரச் செயல்பாடாகும்.

ஒரு எதிர்சக்தி தனது எதிர் சக்தியின் மீது செயல்படுவதே பரஸ்பரச் செயல்பாடு ஆகும். இந்த எதிரெதிர் சக்திகள் தொடர்ச்சியாக மோதுகின்றன இறுதியில் ஒன்றையொன்று கடந்து மேம்பட்ட வடிவங்களுக்கு செல்வதன் மூலம் இயற்கையின் வாழ்வை நிர்ணயிக்கிறது என்று - எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து பேசுவோம் வருகை தாருங்கள் தோழா...........

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்