விடுதலைச் சிறுத்தைகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல். ...

கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சிலைக்கு இரும்பு வேலி அமைக்க காவல்துறை அதிகாரிகள் கேட்டுகொண்டதற்காக வெல்டிங் வேலை செய்யும் ஒருவர் இரும்பு வேலி அமைக்க அவ்விடத்தை அளந்து கொண்டு இருந்தார்.
அவரிடம் நம் தோழர்கள் சென்று கேட்டதற்கு காவல்துறை அதிகாரிகள் இரும்பு வேலி அமைக்க எவ்வளவு ரூபாய் செலவாகும் அதற்கான விலை மதிப்பீடுஎங்கள் முதலாளியிடம் கேட்டார்கள் அதற்காகத்தான் அண்ணா அளவு எடுத்தேன் என்று கூறியுள்ளார்.

இதை அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் இன்று கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை பாசறை மாவட்ட அமைப்பாளர் மு.அறிவுடைநம்பி, வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ப.நாகவேந்தன், முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட துணை அமைப்பாளர் ப.தமிழ்ஒளி, வழக்கறிஞர் ச.விஸ்வநாதன், வழக்கறிஞர் அ.உத்திரவேல், வழக்கறிஞர் பி.பிரகாஷ், முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட துணை அமைப்பாளர் ஜ.சுபாஷ், முன்னணி தோழர் கு.இம்மாணுவேல், செல்வம், கெளதம், உள்ளிட்ட 10 தோழர்கள் பொது நல வழக்காக நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார்கள்.

மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர், உதவி இயக்குநர் ( ஊராட்சிகள் ) ஆகியோர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சாதி தலைவராக முடிவு செய்து
அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தையை சாதி தலைவராக சித்தரித்து,
இரும்பு வேலி அமைப்பது சட்ட விரோத நடவடிக்கை ஆகும்
இரும்பு வேலி அமைக்க கூடாது என்றும்

மற்ற தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு தரும் அரசு ,
அம்பேத்கர் அவர்கள் சிலைக்கு மட்டும் பாதுகாப்பு தராமல் இரும்பு வேலி அமைப்பது ஏன் ? புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் இத்தகைய செயலை மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு இனங்க மற்ற அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.

ஆகவே இரும்பு வேலி அமைக்க கூடாது என்றும்
நிரந்தர உறுத்து கட்டளை இந்த நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று வாதி கேட்டு கொள்கிறார்கள் என்று வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் நெல்லிக்குப்பம் நகர மன்ற உறுப்பினர், வழக்கறிஞர் கு.குருமூர்த்தி நீதிமன்றத்தில் வாதிட்டார்,

இவ்வழக்கை நீதிமன்றம் ஏற்று, வருகிற 4.03.2015. வழக்கு விசாரணைக்கு ஒத்திவைப்பு செய்தும் ,

உறுத்து கட்டளை தொடர்பான விசாரணை வருகிற 10.02.2015 அன்று ஒத்தி வைத்து மான்பு மிகு நீதிபதி அவர்கள் உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்