கப்பல் ஓட்டிய சேரித்தமிழர் கொடைவள்ளல் வெ.மா. மதுரைப்பிள்ளை அவர்களின் வரலாற்று சுறுக்கம்

கொடைவள்ளல் கப்பல் ஓட்டிய சேரித் தமிழர் வெ.மா.மதுரைப்பிள்ளை அவர்களின் வரலாற்று சுறுக்கம்
..................................................................
தொழிலதிபர் மார்கண்டமூர்த்தி-அம்மணியம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1858 திசம்பர் 26ஆம் நாள் மதுரைப்பிள்ளை பிறந்தார் சென்னையில் தொடக்கப் கல்வியும் இரங்கூனில் மேல்நிலைக் கல்வியையும் முடித்தார், பின்பு கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். பிரெஞ்சு, ஆங்கிலம், பர்மிய மொழிகளில் வல்லமை பெற்றவரவார்.

அன்றைய கவர்னர் ஜெனரல் லி்ட்ன் பிரபுக்கு நேரடி உதவியாளராக அரசு பணியாற்றினார் அவரது திரமையின் காரணமாக கவர்னர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் நன்மதிப்பை பெற்றார்.

தந்தை விருப்பத்திற்கு இனங்க அரசு பணியை துறந்து வியாபாரம் செய்வதற்கு மதுரப்பிள்ளை அவர்கள் 1878 இல் மீண்டும் ரங்கூன் சென்றார் எழுத்தாளராக தனது பணியை துவங்கி வியாபார யுத்திகளை கற்றுக்கொண்டு மிகப்பெரிய தொழிலதிபரான தனது தந்தை மார்கண்ட மூர்த்தி அவர்களின் உதவியுடன் ஏற்றுமதி இறக்குமதி தொழிலை தானே துவங்கி மிகப்பெரிய உச்சத்திற்கு செல்வ செழிப்புடன் உயர்ந்தார். மதுரைப்பிள்ளை அவர்களை இரங்கூனில் இருந்து சென்னை வரவழைத்து அவரது தந்தை ஆதிலட்சுமி என்பவரை திருமணம் செய்துவைத்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பாடுபட்டார், தமிழ் வளர்ச்சிக்கு தமிழ் புலவர்களுக்கு உதவி செய்தார், ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கினார்.
வியாபார நிமிர்த்தமாக லன்டன், ஜெர்மன், உள்ளிட்ட உலகில் உள்ள பெரும் நகரங்களுக்கு சென்று மிகப்பெரும் தொழில் அதிபராக உச்சத்தில் நின்றார். 1885 இல் ரங்கூன் நகர கவுரவ நீதிபதியாகவும், 1880 இல் ரங்கூன் மாநகர கமிஷ்னராகவும் ஏறத்தாழ 30 ஆண்டுகள் மக்களின் நன்மதிப்பை பெற்று அப்பதவியில் தொடர்ந்து இருந்தார்.

1912 இல் ஒரு புதிய கப்பலை வாங்கினார் மீனாட்சி என்று தனது மகளின் பெயரை சூட்டினார்.

1913 ஆம் ஆண்டு சூலை 15 நாள் கொடை வள்ளல் வெ.மா.மதுரைப்பிள்ளை மரணமடைந்தார், அவரது மரணத்தை அறிந்த ரங்கூன் அரசு விடுமுறை அறிவித்தது, பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். வெ.மா. மதுரைப்பிள்ளை அவர்களின் பேரப்பிள்ளைதான் மீனாம்பாள் சிவராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுப்பு : தோழர் மு.அறிவுடைநம்பி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்