விடுதலைச் சிறுத்தைகள் வெள்ளி விழா ஆண்டு
சனவரி 21,2015 விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துவங்கி
வெள்ளிவிழா ஆண்டு -விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிறுவனர் ,தலைவர் தொல் .திருமாவளவன் அவர்களின் வரலாற்று குறிப்புகள்
...............................................................................................................
பெயர் :தொல். திருமாவளவன் (பிறப்பு ஆகத்து 17,1962)
தந்தை :தொல்காப்பியர்
தாய் :பெரியம்மா
பிறந்த ஊர் :அரியலூர் மாவட்டம் அங்கனூர்
கல்வி:
புகுமுக வகுப்பு (பியு.சி) (1978-79) அருள்மிகு கொளஞ்சியப்பர்அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம். பட்ட வகுப்பு - இளம்வேதியல்(பி.எஸ்.சி) (1979-82) மாநிலக் கல்லூரி, சென்னை. பட்ட மேற் வகுப்பு முதுகலை குற்றவியல்(எம்.ஏ) (1983- 85) சென்னை பல்கலைக் கழகம், சென்னை
சட்ட வகுப்பு இளநிலைச் சட்டம்(பி.எல்) (1985 -88) சென்னை சட்டக் கல்லூரி, சென்னை.
அரசுப்பணி :
தமிழக அரசின் தடய அறிவியல் துறையில், அறிவியல் உதவியாளராக 5.4.1988 இல் மதுரையில் பணியமர்த்தம் மதுரை, கோவை,சென்னை ஆகிய இடங்களில் பணி செய்தல். 1999 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக 17.08.1999 இல் பணி விலகல்.
பொதுவாழ்க்கை:
1983:
*ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வெடித்த மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்து முன்னின்று நடத்தியது.
*தலித் மாணவர் போராட்டங்கள் மற்றும் அம்பேத்கர் இயக்கங்களின் போராட்டங்களில் பங்கேற்பு- கைது
1984:
*கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்பு.
* பேரவையின் சார்பில் ஈழ விடுதலை ஆதரவு மாணவர் மாநாட்டை 4.3.1984
அன்று சென்னை பெரியார் திடலில் தலைமையேற்று நடத்தியது.
*ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலைப்புலி எனும் கையெழுத்து ஏட்டை ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தியது.
1985:
*சென்னை கடலோரப் பகுதிகளைச்சார்ந்த தலித் மற்றும் மீனவ இளைஞர்கள்,மாணவர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இளைஞர் நல இயக்கத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று வழிநடத்தியது.
* அவ்வியக்கத்தின் சார்பில் ஈழ விடுதலைக்குஆதரவாக மிதிவண்டிப் பேரணி,ஆர்பாட்டங்கள்,கருத்தரங்கங்கள் நடத்தியது.
1986:
*ஈழம் சென்ற இந்திய அமைதிப்படையின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக்கண்டித்து அனைத்துக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களையும் ,ஆர்பாட்டங்களையும் நடத்தியது.
* புதிய கல்விக்கொள்ளை (நவோதயா)திட்டத்தின் நகலை எரித்து சென்னை சட்டக்கல்லூரி முன் கைதானது.
*திராவிடர் களங்கம் நடத்திய ஈழதமிழர்களுக்கு ஆதரவாக ரயில் மறியல்போராட்டத்தில் பங்கேற்று சென்னை சைதாபேட்டையில் கைதானது.
* இந்தி எழுத்து அழிப்புப்போராட்டத்தில் பங்கெடுத்தது.
1987:
*ஈழத்தமிழர் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப்போராட்டத்தை பாரிமுனைப்பகுதியில் தலைமையேற்று நடத்தியது.
1988:
*பாரதிய தலித்பேந்தர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் அ.மலைச்சாமி அவர்களுடன் சந்திப்பு.அவ்வியக்க கூட்டங்களில் பங்கேற்பு .
1989:
*செப்டம்பர் 14 அன்று வழக்கறிஞர் அ.மலைச்சாமி காலமானதையொட்டி 31.12.1989 அன்று மதுரை தமுக்கம் கலையரங்கில் இரங்கள் கூட்டம் நடத்தியது
.
1990:
*ஜனவரி 21 அன்று விடுதலைச்சிறுத்தைகள் (தலித் பேந்தர்) இயக்கத்தின் தலைமைப் பொறுப்பேற்றது.
1990- 1998
*ஏப்ரல் 14 1990 புரட்சியாளர் பிறந்தநாளில் அன்று இயக்கத்தின் முதல் கொடி மதுரை கோ.புதூர் பேருந்து நிலையம் அருகில் ஏற்றி வைத்தார்.
*மாரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரைச்சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா இயக்கத்தைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம்.
*இட ஒதுக்கீட்டிற்கு உச்ச வரம்பு விதித்ததை கண்டித்து விமான மறியல்.
* ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியாட்டம் செய்த சந்திரிகா கொடும்பாவி எரிப்பு.
*சென்னகரம்பட்டி படுகொலை,திட்டக்குடி படுகொலை மற்றும் மேலவளவு படுகொலை உள்ளிட்ட தலித் மக்களுக்கெதிரான சாதி வெறியாட்டத்தை கண்டித்து பேரணிகள்.ஆர்ப்பாட்டங்கள் போன்ற தீவிரமான பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
*நக்சல்பாரிகளுடன் தொடர்புபடுத்தி சிவகங்கை மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
1999:
*முதல் முறையாக சிதம்பரம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மூன்றாவது அணி சார்பில் போட்டியிட்டு 2.25.768 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகித்தது.
2001:
*சட்டமன்றப்பொதுத்தேர்தலில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றது.
*தென்னாப்பிரிக்காவில் டர்பன் மாநகரில் நடைபெற்ற நிறவெறிக்கெதிரான அனைத்துலக மாநாட்டில்(WCAR) பங்கேற்பு.
2002:
*யாழ்ப்பாணத்தில் “கலை இலக்கிய கழகம்” மற்றும் திதர்சனம் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற மானுடத்தில் தமிழ்க்கூடல் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பு
Comments
Post a Comment