விடுதலைச் சிறுத்தைகள் வெள்ளி விழா ஆண்டு
2003:
*அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கம் ,உலகத்தமிழ் அமைப்புஆகியவை நடத்திய மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப்பங்கேற்பு.
*தமிழ்ப்பெயர் சூட்டும் செயலைப்பாராட்டி உலகத்தமிழ் அமைப்பின் சார்பில் “செந்தமிழ்க்காவலர்” பட்டம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பெற்றது.
*கனடாவில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மற்றும் உலகத்தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஆகிய அமைப்புகளின் அழைப்பையேற்று கனடாவில்நடைபெற்ற தமிழ் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றது.
* அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நடத்தும் இலக்கிய அமைப்பு தாய்மண் வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் “எழுச்சித்தமிழர்” பட்டம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பெற்றது.
2004:
*(3.2.2004) நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு உரிய அரசியல் மதிப்பு மறுக்கப்பட்டதாக சட்டமன்றஉறுப்பினர் பதவியிலிருந்து விலகல்.
*நாடாளுமன்றத்தேர்தலில்,ஐக்கிய சனதாதளம்,புதிய தமிழகம்,மக்கள் தமிழ்த்தேசியம் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து மக்கள் கூட்டணி அமைத்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டது.அத்தேர்தலில் சுமார்2.57.000 வாக்குகளைப்பெற்று இரண்டாம் இடத்தைத்தக்கவைத்தது.
2006:
*அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அக்கூட்டணியில் தமிழகத்தில் 9இடங்களிலும் புதுச்சேரியில் 2 இடங்களிலும் விடுதலைச்சிறுத்தைகள்போட்டியிட்டு தமிழகத்தில் இரண்டு இடங்களை (காட்டுமன்னார்கோயில்,மங்களூர்) வென்றெடுத்தது.
* 23.12.2006 அன்று இலண்டனில் அன்டன் பாலசிங்கம் அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினார்.
2007 -2008:
*ஈழத்தமிழர் ஆதரவு மனித நேயப்பேரணி,கருத்துரிமை மீட்பு மாநாடு,உள்ளிட்ட கட்சியின் எண்ணற்ற போராட்டங்கள் மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள்.
2009:
*ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறிப்போரை நிறுத்தக்கோரி இந்திய அரசை வலியுறுத்தி 2009 சனவரி 16 முதல் 19 வரை மறைமலை நகரில் உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்டார்.
*ஈழத்தமிழர்களுக்குப்பாதுகாப்புக்கோரியும்போர் நிறுத்தம் வலியுறுத்தியும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து தொடர்ப்போராட்டங்களில் பங்கேற்றார்.
*சிதம்பரம் நாடாளுமன்றத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
*2.6.2009 அன்றுநாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
*8.6.2009 அன்று நாடாளுமன்றத்தில் தனது கன்னிப்பேச்சை நிகழ்த்தினார்.
*18.7.2009 தி அகடமி ஆப் எக்யூமெனிக்கல் இந்தியன் தியாலஜி&சர்ச் அட்மினிஸ்ட்ரேஷன் சார்பில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.
* ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று ஈழத்தமிழர்கள் குறித்தும் தலித் மக்கள் குறித்தும் உரையாற்றினார்.
* ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கும் அங்குள்ள நிலைமைகளை ஆய்வதற்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில்ஒருவராக இடம்பெற்று ஈழம்சென்று மேனிக் பார்ம் எனும் முள்வேலி முகாமில் மக்களைச் சந்தித்தார்.
* ஜெர்மனியில் ரெய்ன் என்னும் இடத்தில் புங்குடு தீவு ஒன்றியத்தில் சார்பில்நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாட்டில் பங்கு பெற்றார்.அந்நிகழ்வில்நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதம பொறுப்பாளர் உருத்திரகுமார்,தந்தை இமானுவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.அத்துடன்இலண்டனில் நடைபெற்ற புங்குடு தீவு ஒன்றியத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
2010:
*மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகர் அவர்களின் மறைவையொட்டி ஈழம் சென்று அஞ்சலி செலுத்தினார்.
11.1.2010 அன்று ஈழம் சென்று மேதகு பிரபாகரனின் தந்தை வெலுபிள்ளைஅவர்களின் இறுதி நிகழ்வில் பங்கேற்றார்.
21.2.2010 அன்று மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள்
அவர்களின் மறைவையொட்டி கொழும்பு சென்ற அவர் விமான நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்பப்பட்டார்.
15.7.2010 தலைவர் திருமாவளவன் அவர்களின் தந்தை அய்யா.தொல்காப்பியர் காலமானார்.
2011 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தார்.விடுதலைச்சிறுத்தைகள் தமிழகத்தில் 10 இடங்களிலும்
புதுவையில் 2 இடங்களிலும் போட்டியிட்டது.ஆனால் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
2012:
*அக்டோபர் 4,5 ஆகிய நாட்களில் காவிரி நீர் உரிமை ஊர்தி பயணம் மேற்கொண்டார்.இப்பயணம் சிதம்பரத்திலிருந்து சீர்காழி,காரைக்கால்,நாகப்பட்டினம்,திருவாரூர்,தஞ்சாவூர்,அறந்தாங்கி வழியாக திருச்சி சென்றடைந்தார்.
Comments
Post a Comment